ஒரு
விமான
பயணம்.
ஒரு அழகிய இளம் பெண்ணிற்கு, வயதான கருப்பு நிறத்தில் இருந்த மனிதரின் பக்கத்து இருக்கை ஒதுக்க பட்டிருந்தது.
அவருக்கு பக்கத்தில்
அமர, விருப்பம் இல்லாத
காரணத்தினால்
அந்த பெண்...
விமான உதவியாளரை அழைத்து, தனக்கு வேறு ஒரு இடத்தில் இருக்கையை, மாற்றி தருமாறு கேட்டார்.
அந்த வகுப்பு பிரிவில்,
காலி இருக்கை ஏதும் அப்போது இல்லை.
இதனை தெரிவித்தார் உதவியாளர்.
கோபமடைந்த அந்த பெண் கேப்டனிடம் சென்று,
"நான் யார் தெரியுமா?
என்னுடைய ஸ்டேட்டஸ்
என்ன என்று தெரியுமா??
எனக்கு இருக்கை
மாற்றி தர முடியாதா???"
என கூச்சல் இட்டார்.
"ஓரிரு நிமிடங்களில் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும்" என உறுதி அளித்தார் கேப்டன்.
நடந்தவை அத்தனையையும், அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
உதவியாளரை தனியாக அழைத்த கேப்டன், ஒரு ஆலோசனையை கூறி, அதன்படி செய்யும் படி அறிவுறுத்தினார்.
உதவியாளர் அந்த பெண்ணின் அருகில் சென்றார்.
'அவருக்கு வேறு ஒரு இருக்கையை மாற்றி தருகிறார்' என நினைத்து கொண்டிருக்கையில்...
அவர் அந்த பெண்னை விடுத்து, அடுத்து இருந்த வயதானவரை அழைத்து கொண்டு...
இருக்கை வசதிகளிலேயே உயர்ந்த பிரிவான 'பிரிமியம்' வகுப்பில் அவரை அமர வைத்தார்.
அங்கிருந்த அனைத்து பயணர்களும் ஆச்சர்ய பட்டனர்.
கேப்டனின் ஆலோசனையையும், அதன்படி செயல்பட்ட உதவியாளரையும் வெகுவாக பாராட்டினர்.
நீதி :
அழகுடன் பணிவு இருந்தால் அது ஆராதிக்கப்படும்...
மாறாக...
அழகுடன் மமதை
குடியிருப்பின், அது
அதல பாதாளத்தை தான் அடையும்.
அன்புடன்
காலை
வணக்கம்.
1 comment:
ரசிக்க வைத்தது நீதிக்கதை.
- கில்லர்ஜி
Post a Comment