Tuesday, March 19, 2019

புதிய பார்வை

தங்க
புத்தர்...

தாய்லாந்து
நாட்டில்
ஒருமுறை,
களிமண்ணால்
ஆன,
புத்தர்
சிலை
ஒன்றை...

சில
காரணங்களுக்காக,
பக்கத்து
கிராமத்திற்கு
இடம்
பெயர்த்தனர்...

சிலை
பயணப்பட்டிருந்த
நேரத்தில்,
திடீரென
காற்று
வீச
தொடங்கியது...

மழை
வரும்
சூழ்நிலையும்
உருவானது...

மழையில்
சிலை
கரைந்து
விடுமே,
என்னும்
அச்சத்தில்
மக்கள்,
சிறு
பந்தல்
அமைக்க
தொடங்கினர்...

ஆனாலும்
காற்று
மற்றும்
மழையின்
வேகத்தில்,
கொஞ்சம்
கொஞ்சமாக,
சிலை
கரைய
ஆரம்பித்தது...

மக்கள்
செய்வதறியாது
தவித்தனர்...

அப்போது
ஓர்
அதிசயம்
நிகழ்ந்தது...

புத்தரின்
தலை
பகுதியில்
இருந்து,
களிமண்
கரைய
கரைய,
புத்தர்
தங்கமாக
ஜொலித்தார்...

தங்கத்தால்
அமைக்க
பட்டிருந்த,
புத்தர்
சிலை,
களவாடப்படும்
என்னும்
அச்சத்தில்...

களிமண்னால்
முழுவதும்
மறைக்கபட்டு,
உருவாக்கியிருந்த
ரகசியம்,
அன்று
வெளிப்பட்டது...

தாய்லாந்து
நாட்டில்,
இன்றும்
அந்த,
தங்க
புத்தரை
காணலாம்...

நாமும்
அது
போலத்தான்...

நல்
குணங்களையும்
நன்னெறிகளையும்
கலாச்சாரத்தையும்
மறந்து...

தீய
குணங்களையும்
எண்ணங்களையும்...

ஏதோ
சில
காரணங்களுக்காக...

களிமண்
பூச்சு
என்னும்
போர்வையில்...

நாமே
பூசி
கொள்கிறோம்...

தன்னை
அறிதல்,
மற்றும்
விழிப்புணர்வு...

என்னும்
காற்று
மழை
மூலமாக...

அவை
கரைய
தொடங்கினால்...

நாமும்
தங்க
புத்தரே...

அன்புடன்
காலை
வணக்கம்.
🙏🙏🙏💐💐💐🙏🙏

1 comment:

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே உவமைக்காக சொல்லப்பட்ட வரலாறு மிகவும் பொருத்தம்.
- கில்லர்ஜி