நேரமில்லை- தலைப்பு கவிதை..
நாகரீக வாழ்வில்
காலை மாலை
தினம் உச்சரிக்கும்
தேசிய சொல்...
காலத்தின் கணக்கை
தவறாய் போட்ட
கனவான்களின் புலம்பல்
நேரமில்லை நேரமில்லை...
சாலை போக்குவரத்தும்
சன நெரிசலும்
தொலை காட்சியும்
கை பேசியும்
தினசரி நாளிதழும்
காலத்தை களவாடிய
கயவர்கள் இன்று...
காலத்தை கணக்காய்
திட்டமிட்டால் கல்லிலும்
நார் உறிக்கும்
யுத்தி நம்மில்...
தினசரி செயலை
திடமாக திட்டமிட்டால்
எல்லா நாளும்
இனிய நாளாகும்...
பால பருவத்தில்
பள்ளியில் பயிலும்
அத்தியாவசிய பாடம்
நேரம் தவறாமை...
ஐந்தறிவு ஜீவன்
சேவல் தன்
பணியை தவறாமல்
காலை தினம்
செய்து கடமை
ஆற்றும் கண்ணியம்
ஆரறிவு மானிடத்தில்
இல்லாமல் போனது
இதயம் கனக்கிறது....
%%%%%%
நட்புடன் ஆ.சிவராமகிருஷ்ணன்
சேலம்...
₹₹₹₹₹₹₹₹₹₹
No comments:
Post a Comment