Saturday, February 27, 2016

மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து!: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...

மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து!: இறையன்புவின் தன்னம்பிக்கை 'டிப்ஸ்' (தேர்வு காலங்கள்)

27/02/2016

      பிளஸ் 2 தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக, இறையன்பு ஐ.ஏ.எஸ்., கூறியதாவது: தேர்வு என்பது அறிவை விரிவாக்கிக் கொள்ள உதவும் பயிற்சியே தவிர... அது ஒன்றும் யுத்தம் அல்ல.

        மாணவர்கள் தேர்வு நெருங்குகின்ற போது புதிதாக வாசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல், ஏற்கனவே வாசித்தவற்றை திரும்ப படித்து திடப்படுத்தி கொள்வது அவசியம்.

துாக்கத்தை தியாகம் செய்தால் மதிப்பெண்கள் குறையுமே தவிர அதிகரிக்காது. ஓரளவு படித்து விட்டு கொஞ்சம் துாங்கினாலும் அதுவரை படித்தவை, நீண்டகால நினைவு பகுதிக்கு சென்று தேர்வு எழுதும் போது விடைத்தாளில் குதித்து வியக்க வைக்கும்.நாம் படித்தவற்றில் செய்முறை தொடர்பானவை கனவின் போதும், சூத்திரங்கள் தொடர்பானவை துாக்கத்தின் போதும்ஆழ்மனதில் ஐக்கியமாகின்றன. மேல் மனம் தடுமாறும் போது ஆழ்மனமே ஆபத்பாந்தவன்.தேர்வின் போது உணவை முறையாக உட்கொள்வது அவசியம். மனித மூளை சுய மூளை என கூறப்படுகிறது.

இரண்டு சதவீத எடையிருந்த போதும், 20சதவீத உணவை முதலில் உறிஞ்சிக் கொண்டு நம் அவையங்கள் இயங்க உத்தரவுகளை பிறப்பிக்கிறது. சரியாக சாப்பிடா விட்டால் சோர்வு ஏற்படும். மூளை படித்தவற்றை அசை போட முடியாமல் அவதிப்படும். எனவே மாணவர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.இளநீர், மோர் போன்றவை உடல் உஷ்ணமாகாமல் காப்பாற்றும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்து ெவளியே விட்டால் கவனம் அதிகரிக்கும். தேர்வை நன்றாக எழுதுவது போல, துவங்குவதற்கு முன்பு ஐந்து நிமிடங்கள் காட்சிப்படுத்தி பாருங்கள். பதற்றம் நீங்கும். மன அழுத்தத்துடன் படித்தால் மூளை சுருங்கும். அதன் வேலைகள் பாதிக்கப்படும்.

மகிழ்ச்சியுடன் படித்தால் அனைத்து பாடங்களும் புரியும்.படிக்கும் போது இனிய இசையால் மனத்திற்கு ஒத்தடம் கொடுத்து இளைப்பாறி கொள்ளுங்கள். நல்ல இசை, மூளை முழுவதும் வாணவேடிக்கை நிகழ்த்தி, அத்தனை செல்களையும் உசுப்பிவிடும்.தேர்வு முடிந்த பிறகு அந்த பாடத்தை பற்றி யாரிடமும் விசாரித்து சோர்வடையக் கூடாது. மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து; சிரமப்பட்டு படித்தால்பாறாங்கல்.
மாணவர் நலம் கருதி
ஆ.சிவா...

தாமஸ் ஆல்வா எடிசனின் பலம்...

மின்சார பல்பைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால், தாமஸ் ஆல்வா எடிசன் எனப் பட்டெனக் கூறிவிடுவீர்கள்.

அவர் மின்சார பல்பைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் ஆயிரம் முறையாவது சோதித்துப் பார்த்திருப்பார்.
ஒரு நாள் எடிசனின் சோதனை வெற்றிபெற்றது. அவரது உதவியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்போது எடிசன், அலுவலகப் பையனை அழைத்தார்.
‘‘இந்த பல்பைச் சோதனை செய்’’ என்றார் எடிசன்.
எடிசன் சொன்னவுடன் அவனுக்கு ஒரே பதற்றம். பல்பை வாங்கும்போதே தவறுதலாகக் கீழே போட்டுவிட்டான். எடிசனுக்குக் கோபம் வந்தது. ஆனால், ஒன்றும் சொல்லவில்லை. எடிசன் தன்னை வேலையை விட்டு அனுப்பிவிடுவார் என்று அந்தப் பையன் பயந்தான்.
எடிசன் மீண்டும் ஒரு புதிய பல்பை உருவாக்கினார். மறுபடியும் அதே அலுவலகப் பையனை அழைத்தார்.
‘‘இந்தப் பல்பையாவது சரியாக வாங்கிச் சோதனை செய்’’ என்று சொன்னார் எடிசன்.
எடிசனின் இந்தச் செயல் அவரது உதவியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்களுள் ஒருவர், ‘‘ஏற்கெனவே ஒருமுறை பல்பை உடைத்துவிட்டான், மீண்டும் அவனுக்கு எதற்கு வாய்ப்பு தர வேண்டும்?’’ என்று கேட்டார்.

இன்னொரு உதவியாளரோ, “மீண்டும் அவன் பல்பை உடைத்துவிட்டால் உங்கள் உழைப்பு வீணாகிவிடாதா’’ என எடிசனிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு எடிசன் பொறுமையாகப் பதில் கூறினார். “இந்தப் புதிய பல்பை உருவாக்குவதற்கு எனக்கு ஒரு நாள்தான் ஆனது. மீண்டும் அது கீழே விழுந்து உடைந்துவிட்டால், ஒரே நாளில் என்னால் புதிதாக இன்னொரு பல்பை உருவாக்கிவிட முடியும். ஆனால், இந்த வேலையை மறுபடி அவனிடம் ஒப்படைக்காவிட்டால், அவன் தன்னுடைய தன்னம்பிக்கையை இழந்துவிடுவான். அதை மீண்டும் அவ்வளவு எளிதாக அவனிடம் உருவாக்க முடியாது. அப்படி நடப்பதை நான் விரும்பவில்லை” என்று சொன்னார்.

#தலைவணங்குவோம் ♦♦♦

அன்பே சிவம்......

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.

அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.

அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..

அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.

ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..

அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?

நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!

அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.

#அன்பே சிவம்......

இன்றைய இன்றைய கல்வி முறை எவ்வாறு அமைய வேண்டும்...

இன்றைய
இன்றைய
கல்வி
முறை
எவ்வாறு
அமைய
வேண்டும்...

மாணவர்களை
கட்டுப்படுத்தி வைக்கப்படும் இயல்பான உணர்வெழுச்சி,
வாய்ப்பு கிடைக்கும்போது கட்டுப்பாடு இல்லாத வெறித்தனமான செயல்பாடாக ஊக்கம் பெறுகிறது.

எதிர்பாலினத்தவரிடம் பேசக் கூடாது. ஆத்திரத்தை வெளிப்படுத்தக் கூடாது. வலி எடுப்பதை சப்தம் போட்டு வெளியே காட்டிக்கொள்ளக் கூடாது என்று குழந்தைகள் அடக்கப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலைகள் ஒரு குழந்தையை
அத்தகைய கட்டுப்பாட்டுத் தன்மைக்கு எதிரானவர்களாக்கிவிடுகிறது.

இவ்வாறு
அடக்கப்பட்ட உணர்வுகள்தான் கல்லூரியின் கண்ணாடிகளை
அடித்து
நொறுக்குவது முதலாகப்
பாலியல்
வன்கொடுமை
வரை வெடித்து வெளியாகின்றன.

உணர்ச்சி
மேலாண்மை
என்றால்
என்ன...

மனக்கிளர்ச்சியை
நெறிப்படுத்துவது
கல்வியின் ஒரு பகுதி ஆக்கப்பட வேண்டும் என வாதிட்ட
கோல்மன்,

தனது சொந்த உணர்வுகளைப் பரிசீலித்துக்
கட்டுப்படுத்துதல்,
பிறரது
உணர்வுகளுக்கு
மதிப்பளித்துப் பரிசீலித்தல் ஆகியவை தலைமைப் பண்பை நோக்கிய கல்வியின் தன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய

உணர்வுகளை முற்றிலுமாக ஒடுக்கிக்கொள்ள வைப்பது அல்ல என்பதை நிரூபித்தவர்.

உணர்ச்சிபூர்வமான அறிவுத்திறன்

சமூகத்தையும் இணைத்துச் சிந்திக்கும் பொறுப்புணர்வை குழந்தைக்கு ஏற்படுத்தும் என்பதை கல்வியாளர்கள் விரைவில் புரிந்துகொண்டனர்.

மனக்கிளர்ச்சியைச் செயல்திறனாக மாற்றுதல் (Ability Model) அதையே பண்புத்திறனாக மாற்றுதல் (Traits Model) இரண்டும் கலந்த ஒன்றாய் மாற்றுதல் (Mixed Model) என்று மனக்கிளர்ச்சி நுண்ணறிவைப் பல பகுதிகளாக அறிஞர்கள் பிரித்துக் கல்வி உளவியலின் முக்கியமான பகுதியாக அவற்றை ஆக்கியிருக்கிறார்கள்.

கற்பிப்பதே
ஒரு
கலையாக
இருக்க
வேண்டும்...

நமது பள்ளிகளில் குழந்தைகளின் மன உணர்வுகளை வெளிப்படுத்த மட்டுமல்ல

அவற்றை ஆக்கபூர்வமான செயல்திறனாக
மாற்ற வேண்டும்.

அதைச்
செய்ய
நாம்
முதலில்
வகுப்பறையில் ஒரு ஆசிரியர் பாடத்தைக் கற்றுக்கொடுப்பதும்
மாணவர்கள்
எல்லாரும் அதை வாயைப் பொத்திக்கொண்டு கேட்பதைப் போன்று
உரையாற்றும்
முறைக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

நமது
பாடப்புத்தகத்தின்
மொழியை
நிகழ்கலையாகவும்,
கருத்துப் பரிமாற்றமாகவும், உரையாடலாகவும்
மாற்ற வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர் போதிக்கும் முறையைக் கலைத்தன்மையாக வளர்த்தெடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

-தி இந்து தமிழ்-

இன்றைய கல்வி முறை எவ்வாறு அமைய வேண்டும்...