Sunday, November 16, 2014

இன்டர்நெட் WWW இது என்னவென்று தெரியுமா?....



இன்டர்நெட் இல்லை என்றால் பூமியே சுத்தாது என்று சொல்லும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்று விட்டது.இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எதற்கெடுத்தாலும் இன்டர்நெட் தான், அதுவும் சமூக வலைத்தளங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.

நான் பயன்படுத்தும் உலகளாவிய வலை அதாவது World Wide Web(WWW) இணைக்கப்பட்ட நாள் இன்று.

                                          
பிரிட்டிஷ் கணினி விஞ்ஞானியும், முன்னாள் செர்ன்(CERN) ஊழியருமான டிம் பெர்னர்ஸ் லீ மற்றும் பெல்ஜிய கணனி விஞ்ஞானி ராபர்ட் கயில்லியவ் இவர்கள் தான் இணையத்தை கண்டுபிடித்தவர்களாக கருதப்படுகிறது.

1989ம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீ உலகளாவிய வலைக்கு முதல் கட்ட திட்ட அமைப்பை எழுதினார். இது முதலில் செர்ன்(CERN) தகவல் பறிமாற்றத்திற்காக மட்டுமே எழுதப்பட்டது.

ஆனால் இது உலகளவில் சென்றடைய வேண்டும் என்பதை உணர்ந்த பெர்னர்ஸ், 1990ல் ராபர்ட் உடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட உலகளாவிய வலையமைப்பை உருவாக்கினார்.

இணையம்(Internet) மற்றும் உலகளாவிய வலை(WWW) ஆகிய சொற்கள் பேச்சு வழக்கில் பெரிதும் வேறுபாடின்றி அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றல்ல.

இணையம் என்பது உலகளாவிய தரவுத் தகவல்தொடர்பு முறைமையாகும். வலை என்பது இணையத்தின் வழியாகத் தொடர்புகொள்ளும் சேவைகளில் ஒன்றாகும்.

இது மிகை இணைப்புகள் மற்றும் URLகள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற வளங்களின் தொகுப்பாகும். சுருக்கமாக, வலை என்பது இணையத்தில் இயங்கும் ஒரு பயன்பாடு என்றே சொல்லலாம்.

 
நன்றி  அன்பை  தேடி .......

 


 

No comments: