Monday, October 06, 2014

எனது மாவட்டத்தின் பெருமைகள்

தஞ்சை

தஞ்சை என்பதற்கு வயல்கள் நிறைந்த பகுதி என்று பொருள்
தஞ்சையை பற்றி ஒரு புராணக் கதை உண்டு. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்தி
வந்தான் மக்களை காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும் சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற பெயருடன் கோயில் கொண்டுள்ளதால் சொல்லப்படுகிறது.

தஞ்சாவூருக்கு பெருமை சேர்த்தது பெருவுடையார் கோவில்தான் இராஜாராஜ சோழனால் கட்டப்பட்டது 985 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1012 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது ஆயிரம் ஆண்டையும் கடந்து இன்னும் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெரிய கோவில். இங்குதான் கர்ப்பகிரகத்தின் மீதான கோபுரம் 216 அடிக்கு உயர்ந்து காணப்படுகிறது.

சரஸ்வதி மஹால்

அடுத்து நாம் பார்க்க வேண்டியது சரஸ்வதி மஹால் இங்குதான் உள்ளது. இந்த நூலகத்தில் கணக்கில்லாத அரிய ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல சரபோஜி மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காசுகள் சிற்பங்கள் அரங்காட்சியத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது அதோடு திமிங்கலத்தின் எலும்பு கூடு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது.

சிவகங்கை பூங்கா

இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காண கூடிய ஒரு இடமாக இருக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த மரங்கள் நமக்கு நிழல் தருகிறது. குழந்தைகளை கவரும் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டகம், மான்,முயல், மயில், நரி என்று விலங்குகள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். படகு சவரியும் செய்யலாம் மொத்ததில் ஒரு பொழுது போக்கான ஒரு இடம்.

மணி மண்டபம்


இங்கு மியுசியம் அமைக்கப்பட்டுள்ளது இராஜராஜ சோழனையும் சோழர்கால நிலையை குறிக்கும் விதவிதமான சிலைகள், அரிய விளக்குகள் மற்றும் சோழர்கால நினைவு சின்னங்கள் நமக்கு காண கூடியதாக இருக்கிறது மணிமண்டபத்தைச் சுற்றி அழகான
பூங்கா மற்றும் குழந்தைகள் விளையாட விளையாட்டு சாதனங்கள் இருக்கிறது.


கல்லணை

கல்லனை தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது இதில் காவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம் என நான்கு ஆறுகள் பிரிகிறது. இந்த அணை கரிகால சோழனால் 2ம் நூற்றண்டில் கட்டப்பட்டது.

புன்னை நல்லூர் மாரியம்மன்

தஞ்சையின் மற்றொரு சிறப்பு புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில். பிராத்தனை முடித்துத் திரும்புகிறவர்கள் வேண்டுதல் பலிக்கும் என்பது அங்குள்ள மக்களின் பரவலான கருத்து.

அது மட்டுமல்ல தஞ்சையில்தான் மெல்லிசை கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்ற இசை கருவிகள் இங்குதான் செய்யப்படுகிறது. இசைக்கு பேர்போன கர்நாடக இசைத் தந்தை சங்கீத சக்கரவர்த்தி தியாகராஜ வாழ்ந்தது இங்குதான். அதோடு கிராமிய கலைகளை வளர்த்த பெருமையும் உண்டு


தஞ்சாவூர் கரகாட்டம், தஞ்சாவூர் தவில் என்று இசை சார்ந்தவைகளில் தஞ்சைக்கு தனிச்சிறப்பும் உண்டு.








விருந்தோம்பல்

வந்தாரை வாழ வைப்பது தமிழகம் என்றால் பஞ்சம் பிழைக்க வந்தவர்களை நெஞ்சை நிறைய செய்து தஞ்சம் கொடுப்பது தஞ்சாவூர் தான் முன்பு பஞ்சம் பிழைக்க எல்லோரும் தஞ்சை நோக்கிதான் வருவார்களாம் ஏனெனில் அத்தனை செல்வ செழிப்பாக


நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடுகின்ற ஊராக தஞ்சாவூர் இருந்தது இப்பவும் இருக்கிறது. நெல், வாழை, தென்னை, சோளம், கம்பு, உளுந்து,எள், கடலை,கரும்பு, மற்றும் எல்லாவித காய்கறிகளும், பயிர்களும் விளைகின்ற ஒரு மண் தண்ணீருக்கு பஞ்சமில்லாத தஞ்சை. அது மட்டுமல்ல

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை முகம் மலர வரவேற்று தலைவாழை இலையிட்டு நெஞ்சு புடைக்க உணவு பரிமாறி மனம் நெகிழச்செய்யும் மக்கள் வாழ்கின்ற ஊர் தஞ்சாவூர்.

ஒரு ஊருக்கு ஏதாவது ஒன்றுக்குதான் பெருமை வாய்ந்ததாக கருதப்படும் ஆனால் தஞ்சாவூரில் தான் எல்லாமே பெருமை வாய்ந்ததாக இருக்கிறது. சமயம், பக்தி, கலை, ஓவியம் நடனம், இசை, சங்கீதம், வீரம் என்று ஊருக்கே பெருமை சேர்த்த ஊர் தஞ்சாவூர்.

தஞ்சையை காண வாருங்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.


நன்றி

நண் பரே .....

No comments: