Tuesday, September 30, 2014

ஜிமெயிலில் தேவையில்லாதவற்றை நீக்க...!

இன்றைக்கு பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக்கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது.பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்புவோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது.

அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் செய்தவுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படுகின்றன.

முழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முகவரியைத் தேர்ந்தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும். ஒரு நாளில் பலருக்கு அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி எரிச்சலூட்டும் உதவியாக உள்ளது.


                                               



நாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப்பம் இல்லாதவர்களின் முகவரியும் சேவ் செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. இதனால், நாம் அனுப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது.


இவ்வாறு சேவ் செய்து வைத்திடும் வசதியினை நாம் ஜிமெயில் தளத்திலிருந்து எடுத்துவிடலாம்.

ஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) செல்லவும். Settings திரை காட்டப்படுகையில், General என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் அதனைக் கிளிக் செய்திடவும்.

இங்கு கீழாகச் சென்று, "Complete contacts for autocomplete" என்று இருப்பதனைக் காணவும்.அங்குள்ள "I'll add contacts myself" என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

தொடர்ந்து "Save Changes" என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். அடுத்த முறை நீங்களாக சேவ் செய்திடாமல், எந்த மின்னஞ்சல் முகவரியும் அதற்கான பட்டியலில் இடம் பெறாது..
 
 நன்றியுடன் 

சிவா.
 
 

No comments: