Saturday, January 30, 2021

புதிய பார்வ...புதியபுதிய கோணம்..

*எனக்கு நல்லதே நடக்கமாட்டேங்குது* *வாழ்க்கையே வெறுப்பாகுது,*
 *"என்று நினைப்பவர்களுக்கு!!!!மட்டுமே* 

அமெரிக்க புதிய ஜனாதிபதி - ஜோ பைடன், வயது: 78 

1. கிறிஸ்துமஸ் 
மரம் 
வாங்குவதற்கு செல்லும் 
போது 
மனைவி 
மற்றும் 
மகள் 
சாலை 
விபத்தில் 
மரணம்.

2. மூளை 
புற்றுநோயால் 
ஒரு 
மகன் 
இறந்தார்.

3. கோகோயின் 
போதை 
காரணமாக 
இரண்டாவது 
மகன்  
U.S. 
கடற்படையில்
 இருந்து 
நீக்கப்பட்டார்.

4. பைடனுக்கு 
முக தசைகள் 
முடக்கம் (முக வாதம்)
 இருந்தது.

இவ்வளவு 
எதிர்மறையான 
சூழ்நிலைகள் 
இருந்தும், 
தனது 
78 வயதில் 
உலகின் 
சக்திவாய்ந்த 
நாட்டின் 
ஜனாதிபதியாகிறார்.

*60 வயதில்,
 நாம் ஓய்வு 
பெற்று 
அடங்கி 
விடுகிறோம், 
ஆனால் 
பைடன் 
78 வயதில் 
ஒரு அற்புத 
வாழ்க்கையை 
ஆரம்பித்திருக்கிறார்,*



 *நம்பிக்கை 
மட்டும் தான் 
வாழ்க்கையின்
 அடிப்படை 
ஆதாரம் 
நம்பிக்கையுடன் 
செயல்படுங்கள்
வெற்றி
நம்மை
தேடிவரும்.

*படித்ததில் பிடித்தது....*

Saturday, January 23, 2021

தொழில்நுட்பம் பழகுவோம்-1

வணக்கம் ஆசிரியர் பெருமக்களே ! இந்த பேரிடர் சூழலில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழங்கிய ஆசிரியர் திறன் மேம் பாட்டு பயிற்சியின் டிஜிட்டல் அசிஸ்டன்ட் ( Digital Assessesment Tools) என்ற தலைப்பில் சேலம் மாவட்ட ஆசிரியர்களுக்கு சுமார் 1980 ஆசிரியர்களுக்கு நேரடியாக( இணைய வழியாக) பயிற்சி அளித்த தருணம் மிக்க மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. ஆசிரிய தோழமைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குறியது.  அந்த பயிற்சியில் எட்டு வகையான மதிப்பீட்டு மென்பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டது . இந்த மென்பொருளை பல பள்ளிகளில் குறிப்பாக கிட்டதட்ட  1100 பள்ளிகள் செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.. என்பது மிகுந்த உற்சாகம் தரும் செய்தி.

இந்த மென்பொருளை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையை தொழில்நுட்ப வகுப்பறையாகவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தலாம். குறிப்பாக ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்க பயன்படும் மென் பொருட்கள் இவை. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கும் முதல்வர் மற்றும் விரிவுரையாளர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். எனது
Quizizz என்ற மென் பொருளின் video tutorial link  லிங்க் இங்கே இணைத்துள்ளேன் ஆர்வமுள்ள ஆசிரிய தோழமைகள்  இதனை பயன்படுத்தி  கொள்ளலாம்.
நன்றி!

QUIZZ
https://youtu.be/lnt5YwhKE68

என்றும் கல்வி பணியில்..
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம் ஊரகம்.


Friday, January 22, 2021

ஆசிரியப்பணியே மிக கடினப் பணி்

பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்றும் மற்றவர்களை விட ஆசிரியர்களே அதிகம் உழைக்கிறார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.


 
எதிர்காலத் தலைவர்களை/தலைமுறையினரை உருவாக்கும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பொறுப்பை ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கைவிட ஆசிரியர்களின் பங்கு அதிகமானது. சிறு வயதில் குழந்தைகளை செதுக்கி அவர்களின் திறனுக்கேற்ப வடிவமைக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வி சிறந்ததாக இருந்தால் அந்நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற பொதுவான கருத்தும் உண்டு. அத்தகைய ஆசிரியர்களின் பணி குறித்து யு.சி.எல். பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஆக்ஸ்போர்டு ரிவியூ ஆஃப் எஜுகேஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்று ஆய்வுகள், கணக்கெடுப்புகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ல் 9 பங்கு உழைப்பினை கொடுக்க வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக 54% என்ற அளவில் இருந்த உழைப்பு தற்போது 94% ஆக அதிகரித்துள்ளது. ஆசிரியர்களை அடுத்து சுகாதாரப் பணியாளர்களும், சட்ட வல்லுநர்களும் அதிகம் உழைக்கின்றனர். இதில் உழைப்பு என்பது பணியிடத்தில் மட்டுமின்றி அவர்களின் பணி சார்ந்த மற்ற வேலைகளும் அடங்கும்.


 
யு.சி.எல் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் கிரீன் கூறுகையில், ‘ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில் அவர்களின் நல்வாழ்வு குறைந்துவிட்டது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பில்லை. அவர்களின் செல்வாக்கு குறைந்துவிட்டது. எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்களின் பிரச்னைகளை களைய வேண்டியது நம் கடமையாகும். பிற தொழில்களோடு ஒப்பிடும்போது, ​​ஆசிரியர்கள் மிகவும் தீவிரமாக வேலை செய்வது எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது.


 
கரோனாவுக்கு பிந்தைய சூழலில் ஆசிரியர்களின் பணி சவாலானதாகவே இருக்கும். அதேநேரத்தில் இந்த ஆய்வின் முடிவுகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பள்ளிகளுக்கும், கற்பித்தல் தரத்தை அதிகம் நம்பியுள்ள மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் என்பது பொதுவாக பணி நேரமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பள்ளிகளில் குறைவான நேரம் பணியில் இருந்தாலும் அதற்கு பின்னால் அவர்களின் கடின உழைப்பு இருக்கிறது என்று கூறுகிறது இந்த ஆய்வு.

பள்ளி ஆசிரியர்கள் எம்மாதிரியான பணிகளை எல்லாம் மேற்கொள்கிறார்கள்? அவர்களின் திறன்கள், பணியில் திருப்தி, மாணவர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 20 முதல் 60 வயது வரையிலான 857 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பெண் ஆசிரியர்கள்.

ஆசிரியர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, மற்ற தொழில் செய்பவர்களைவிட ஆசிரியர்கள் இரு மடங்கு மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதேநேரத்தில் அவர்கள் தங்கள் திறனை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்கிறனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்...
படித்ததில் பிடித்தது...
நன்றி..

Tuesday, January 19, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

நிறைய வீடுகளில் 
கணினி இருக்கும் 
ஆனால் அது வைக்கப்பட்டிருக்கும் மேஜையை பார்த்தால் 
முகம் சுளிப்பது 
மாதிரி இருக்கும் 
மின் அஞ்சலை
பார்ப்பதற்கு கூட 
தயக்கம் ஏற்படும் 
அத்தனை குப்பை 
கூளங்கள் நிறைந்தது 
காணப்படும்...

சில நேரங்களில் 
நொறுக்குத் தீனிகள் 
சாப்பிட்ட மிச்சத்தை சுத்தப்படுத்தாமல் அப்படியே இருப்பதையும் பார்க்க 
இயலும் இது 
தவறு 
நீங்கள் தினமும் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கூட சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அது உங்கள் வாழ்வில் 
அனைத்து விஷயங்களிலும் இதே பழக்கத்தை 
ஏற்படுத்தி விடும் 
இதனால் நிறைய இழப்புகளை சந்திக்க 
நேரிடும் ...

சிலர் 
தங்கள் கணினியின் திரையில் ஏராளமான கோப்புகளை வைத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம் திரை முழுவதையும் அடைத்துக் கொண்டிருக்கும்..
இது என்ன?
என்று கேட்டால் 
அவர்கள் சற்று தயங்குவதை நம்மால் பார்க்க 
இயலும் ...
என்ன கோப்பு
தெரியாமல் திரையை 
அடைத்துக் கொண்டிருப்பதன் பயன் என்ன .?

நேர்த்து 
என்பது உங்கள் 
ஒவ்வொரு செயலும் 
இருக்க வேண்டும் 
அதுதான் உங்களை
 உங்கள் வாழ்க்கையை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் 
நண்பன் என்பதை
மறக்க வேண்டாம் ..

வாங்க நாமும் 
நேர்த்தியா வாழ்வோம் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் ....

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்..

Monday, January 18, 2021

புதிய பார்வை...புதிய கோணம்..



ஒரு
வகுப்பறை

ஆசிரியர்
மாணவர்களை
பார்த்து

எதிர்காலத்தில்
நீ என்னவாக
ஆக போகிறாய் ?

என்று கேட்டு
கொண்டிருந்தார்.

ஒவ்வொரு
மாணவனும்
ஒவ்வொன்றை
சொன்னார்கள்.

ஒரு
மாணவன்

   எதிர்காலத்தில்
   தான் ஒரு
   குதிரை
   வண்டிக்காரனாக
   விரும்புவதாக

கூறினான்.

வகுப்பில்
இருந்த
ஆசிரியர்
உள்பட
மாணவர்கள்
அனைவரும்
கொல்லென்று
சிரித்தனர்.

அவமான
பட்டதாக
உணர்ந்த
மாணவன்
பள்ளி
விட்டதும்
வீட்டிற்கு
சென்று
தன்
அன்னையிடம்
நடந்ததை
கூறினான்.

இதை கேட்டு
கொண்டிருந்த
அந்த மகனின்
தாய்

   நீ கூறியதில்
   ஒரு தப்பும்
   இல்லை

என்று
சொன்னதோடு

சுவற்றில்
மாட்டப்பட்டிருந்த
ஒரு படத்தை
சுட்டிக்காட்டி

   அந்த
   குதிரைகளை
   ஓட்டி செல்லும்
   மகானாக
   இரு 

என்று
கூறினார்.

எதிரில்
படத்தில்

ஏழு
குதிரைகள்
கொண்ட தேரை
ஓட்டி செல்லும்

கீதை
என்னும்
பாதையை
வழங்கிய
சாரதி

சிரித்து
கொண்டு
இருந்தான்.

அன்று
வகுப்பில்
அவமான
பட்டதாக
உணர்ந்தவன்

பிற்காலத்தில்
உலகமே
போற்றும்
ஒப்பற்ற
வழிகாட்டியாக
விளங்கிய
விவேகானந்தர்.

அவருக்கு
அறிவுரை
மற்றும்
அறவுரை
கூறியவர்

அவரை
செதுக்கிய
தாய்.

   _*இன்றைய*_
   _*அவமானங்களை*_
   _*இதயம்*_
   _*உணர்ந்தாலும்*_

   _*அதில்*_
   _*துவண்டு*_
   _*போகுபவர்கள்*_

   _*தன்*_
   _*வாழ்நாளில்*_
   _*தோற்றுதான்*_
   _*போகிறார்*_

   _*அவைகளை*_
   _*சாதகமாக்கி*_
   _*செயல்படுபவர்*_

   _*நாளை*_
   _*சாதித்துதான்*_
   _*காட்டுகிறார்*_

கேலி
கிண்டல்
பரிகாசம்
என எல்லாம்
நமக்கும் உண்டு

அவைகளை
தூரமாக
வீசி

வெற்றிகளை
துரத்தலாம்
வாங்க.

புதிய
நம்பிக்கைகளுடன்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி


Wednesday, January 13, 2021

புதிய பார்வை..புதிய கோணம்..



வீட்டில் தேங்கி
போயிருக்கும்
குப்பைகள்

தேவையற்ற
பொருட்கள்

இவைகளை
அப்புறப்படுத்தி
வீட்டை மிக 
சுத்தமாக
ஆக்கப்படும்.

அதை
போலவே

தீய
பழக்கங்கள்
ஒழுக்கக்கேடுகள்
உறவுகளிடம் 
ஏற்பட்ட கசப்புகள் 
போன்ற 

மனதில்
ஒட்டியிருக்கும்
வேண்டத்தகாத 
எண்ணங்களை

   ருத்ர கீதை 
   ஞான யக்ஞம்

என 
அழைக்கப்படும் 
அக்னிகுண்டத்தில் 
எறிந்து பொசுக்கி

நீக்க வேண்டும் 
என்பதை விளக்கும் 
மிக சிறப்பான 
நாள் இன்று.

வாங்க...

பழையன
கழிப்போம்

புதியன
புகுத்துவோம்

மனதையும்
சுத்த
படுத்துவோம்

மகிழ்ச்சியாய்
வாழவும்
தொடங்குவோம்.

   மார்கழிதான் 
   ஓடிப்போச்சு
   போகியாச்சு 

   நாளைக்குத்தான் 
   தை பொறக்கும்
   தேதியாச்சு 

   போகியிது 
   போகியிது
   நந்தலாலா

   பொங்க 
   வைப்போம் 
   நாளைக்குத்தான்
   நந்தலாலா

இனிய
போகி 
பொங்கல்
வாழ்த்துக்கள்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Tuesday, January 05, 2021

புதிய பார்வை...புதிய கோணம்..

உருவாக்குதல்
இணைத்தல் 
என்கிற 
இரண்டு 
செயல்களையும் 
கொண்டே 
புதிய 
கருத்துக்கள் 
உதயமாகின்றது 
நீங்கள் 
கற்கும்
போது 
அறிந்து
கொள்வீர்கள் 
பின் கற்க 
வேண்டியது 
நிறைய 
உள்ளது 
என்பதை ...

படைப்பாற்றல்
அறிவு 
நம்முடைய 
வேலை 
வாய்ப்புகளை 
அதிகரிக்கும் 
வாழ்க்கை 
தரத்தை 
உயர்த்தும் ....

உங்கள் 
கண் 
முன்னே 
இரண்டு 
தேர்வுகள் 
உண்டு
ஒன்று 
உங்களை 
கடந்து 
செல்லும் 
உலகத்தை 
பார்த்தபடி 
பக்கமாய் 
உட்கார்ந்திருப்பது ...
அல்லது 
உங்கள் 
மூளையையும் 
படைப்புத் திறனையும் 
தகவல் தொழில் 
நுட்பத்தில்
நீங்கள் 
பங்கேற்று 
வளர்ச்சி 
காண்பது 
தற்போதும் 
இனிவரும் 
காலத்திலும் 
படைப்பு 
சிந்தனைகள்
உலகத்தை 
முன்னோக்கி 
செலுத்தும் ...
படைப்பு
சிந்தனையே 
உலகத்தின் 
உந்துசக்தியாக 
இருக்கும் 
என்பது 
உண்மை 
தகவல் தொழில்நுட்பம் மட்டுமே 
புதுமைகளை 
கொண்டு 
வந்து 
விடாது 

சவால்
மிக்க 
சூழ்நிலையை 
எதிர்கொள்வதிலும்
சிந்தனை 
ஆற்றலையும் 
தன்னோடு 
இணைத்துக் 
கொண்டால் 
தான் 
அது 
செயல்
படுத்த
முடியும்...

வாங்க 
நாமும்
புதிய
சிந்தனைகளை
விதைப்போம்
வாழ்க்கையில் 
வெற்றிகளை
படைப்போம்....

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Sunday, January 03, 2021

புதிய பார்வை...புதிய கோணம்..

தினமும் 
பார்க்கிற 
வேலை தான் 
ஆனால் 
திரும்ப 
திரும்ப 
செய்கின்ற
போது 
உங்கள் 
மனதும்
 உடலும் 
சலிப்படையும் 
செய்வதில் 
நேர்த்தி
 இருக்காது 
அதே 
மாதிரிதான் 
நீங்கள் 
எண்ணுவதிலும்
சிந்திப்பதிலும்
தொடர்ந்து 
மூளையை 
பயன்படுத்தினால் 
மூளை 
சோர்வடைந்து 
விடும் 
செயல்முறையில் 
மூளைக்கு 
ஓய்வு 
அளித்தால் 
அது 
சுறுசுறுப்பை 
இழக்காமல்
புதிய 
எண்ணங்களை 
உருவாக்க
செய்யும்
ஒவ்வொரு 
ஓய்வுக்குப் 
பிறகும் 
உருவாகின்ற 
எண்ணங்கள் 
சிறப்பாக 
அமையும் ...

வாங்க 
நாமும்
 ஓய்வெடுத்து
 சிறப்பான 
சிந்தனைகளை முன்னெடுப்போம் 

%%%%%%%&&
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்...

புதிய பார்வை...புதிய கோணம்...



_*மக்களுடன்*_
_*பழகுவது*_ 
_*ஒரு கலை*_

இந்த 
கலையில் 
சிறந்து 
விளங்குபவர்கள்

அவர் தம் 
வாழ்க்கையில் 
கொடி கட்டி 
பறக்கிறார்கள்.

வாழ்க்கை 
என்றால் உறவு 
என்று அர்த்தமாம்.

உள்ளங்கள் 
தோறும் 
உறவுகளை 
வளர்ப்பவர்கள்
வாழ்க்கையில்
 
வெற்றி 
மலர்கள் 
எப்போதும் 
பூத்து குலுங்கும்.

எல்லோரிடமும் 
பேசுவது 
அவசியமற்றது 
என்றாலும்

அவசியமானவர்
உடன்  
பழகுவதும்

அவர்களுடைய 
அன்பையும் 
பாசத்தையும் 
பசுமை மாறாமல் 
புதுப்பித்து 
கொள்வதும்

வளர்ந்து 
வருபவர்களுக்கு 
மிகவும் அவசியம்.

வாழ்க்கை 
என்பது 
இல்லங்களோடு 
நின்று 
விடுவதில்லை.

நல்ல 
உள்ளங்களோடு 
தொடர்கின்ற 
பயணமே அது.

எல்லோரின் 
உள்ளங்களிலும் 
உண்மையான 
அன்பை 
தூவினால்

நம்
முகத்தில் 
மட்டுமல்ல

எல்லோர்
அகத்திலும்
புன்னகை 
பூக்கள் மலரும். 

ஆம்.

  புன்னகை 
  என்பது 
  இறைவனின் 
  கையொப்பம் 

என்கிறார் 
ஒரு மகான்.

- முனைவர்
  கவிதாசன் -

_*சிறு*_ 
_*புன்னகை*_ 
_*ஒருவரின்*_ 
_*முகவரி*_

_*அதில்*_
_*கரைந்திடும்*_ 
_*பிறர் மனம்*_
_*அபகரி*_

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி....
முனை.சுந்தரமூர்த்தி

Friday, January 01, 2021

புதிய பார்வை..புதிய கோணம்...



உலகம்
அறிந்தவர்
தத்துவ ஞானி
கன்பூசியஸ்.
 
தம் 
சீடர்களுடன்
ஒருநாள்
குதிரை 
வண்டியில்
மண் சாலை
ஒன்றில்...

பயணம்
செய்து
கொண்டு
இருந்தார்.

அப்போது
ஒரு சிறுவன்
சாலையின்
நடு பகுதியில்
மணல் கோட்டை
கட்டி விளையாடி
கொண்டிருந்தான்.

வண்டி
வருவதை
கவனியாமல்

கோட்டை
கட்டுவதில்
கவனமாக
இருந்தான்
சிறுவன்.

குருவின்
குதிரை
வண்டி

தொடர்ந்து
செல்லவேண்டும்
என்றால்

மணல்
கோட்டையை
கலைத்து
விட்டுத்தான்
செல்ல
வேண்டும்.

வண்டியில்
இருந்து
கீழே குதித்த
சீடர் ஒருவர்

தம்பி
வழியை விடு
நாங்கள் செல்ல 
வேண்டும் என
கூறினார்.

சிறுவன்...

ஐயா 
இது நான்
கட்டும் கோட்டை
சேதாரமாக நான்
விடமாட்டேன்

நீங்கள்
வேண்டுமென்றால்
வேறு சாலையில்
பயணம் 
செல்லுங்கள்
என்று கூறினான்.

சீடர்
கோபமுற்று
நீயாக 
கலைக்கிறாயா ?
அல்லது நாங்கள்
கலைத்து விட்டு
சொல்லட்டுமா ?
என்று கேட்டார்.

சிறுவனும்
விடாப்பிடியாக
கலைக்க ஒப்பு
கொள்ளவில்லை.

இவைகளை
பார்த்துக்கொண்டு
இருந்த ஞானி...

வண்டியில் 
இருந்து
கீழே இறங்கி
சிறுவனை 
நோக்கி...

தம்பி
நாங்கள்
பக்கத்து ஊருக்கு
சென்று மக்களுக்கு
ஞானங்களை
போதிக்க வேண்டும்
அதனால் வழியை
விடு என்றார்.

நீங்கள்
பெரிய ஞானியா
அப்படி எனில்
நான் கேட்கும்
மூன்று 
கேள்விகளுக்கு
விடையளியுங்கள்
பார்ப்போம் 
என்றான் சிறுவன்.

ஞானியும்
தம்பி 
கேள்விகளை
கேள் என்றார்

உங்கள்
புருவ கற்றையில்
எத்தனை முடிகள்
இருக்கின்றன ?

என்றான்
சிறுவன்.

அதை
என்னால்
பார்க்க முடியாதே

என்றார் 
ஞானி

சரி
வானத்தில்
எத்தனை
நட்சத்திரங்கள்
உள்ளன ? அதை
உங்களால் பார்க்க
முடியுமே

என்று
கேட்டான்
சிறுவன்.

நீ 
சொல்வது
உண்மைதான்
ஆனால் அவைகளை
எண்ண முடியாதே

என்றார்
ஞானி.

அதே
நேரத்தில்
சற்று தொலைவில்

ஒரு
கோவிலில்
இருந்து 

மணிகளும்
மேளமும்
முரசம்
ஒலித்தன

இறுதியாக
ஒரே கேள்வி

நமக்கு
அருகே இருப்பது
மணியா ?
மேளமா ?
முரசா ?

என்று
கேட்டான்
சிறுவன்.

குருவிற்கு
பதில் சொல்ல
தெரியவில்லை.

சிறுவனே
எனக்கு பல 
விஷயங்கள்
தெரியாது.

தெரிந்த சில 
விஷயங்களை
மக்களுக்கு
தெரிவித்து
வருகிறேன்

இன்னமும் நான்
தெரிந்து கொள்ள
ஏராளம் இருக்கிறது

உன்னுடைய
கூர்மையான
அறிவை
பாராட்டுகிறேன்

நீ
சிறப்பாக
வளர்வாயாக

என்று வாழ்த்தி
வண்டியில் இருந்து
சில கனிகளை
எடுத்து சிறுவனுக்கு
வழங்கினார்.

ஞானியின்
வார்த்தைகளில்
மகிழ்வுற்ற
சிறுவன்...

கனிகளை
பெற்று 
கொண்டு
அவரை
வணங்கி

அவர் வண்டி
செல்ல அனுமதி
வழங்கினான்.

பின்னர்
குரு தம்
சீடர்களை
நோக்கி...

இந்த 
சிறுவனின்
கேள்விகளுக்கு
நாம் சரியான
விடையளிக்க
இயலவில்லை.

இதிலிருந்து
நமக்கு ஒரு
பாடத்தை
அவன் கற்பித்து
இருக்கிறான்.

அது...

அது...

ஞானத்தை
மேலும் மேலும்
தேடிச்செல்
என்பதே

என்று
கூறினார்.

வாங்க...

நம்
சிறகை
விரிப்போம்

சிந்தனைகளை
விரிவு செய்வோம்

அறிவை 
மேலும் அதிக 
படுத்துவோம்

புது புது
உலகம் 
காண்போம்

_*பூமியில்*_
_*இருப்பதும்*_
_*வானத்தில்*_
_*பறப்பதும்*_
_*அவரவர்*_
_*எண்ணங்களே*_

புதிய
நம்பிக்கைகளுடன்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

பகிர்வு....நன்றி