*டிஸ்லெக்சியா என்பது நோயா?*
டிஸ்லெக்சியா , இது நோயல்ல நரம்பியல் சம்பந்தப்பட்ட நிலைப்பாடு, மற்றும் கற்கும் விதத்தில் ஏற்படும் குறைபாடு. பிறவியில் ஏற்படும் இத்தகைய பிரச்சனை ஆரம்ப கால கண்டறிதல் முக்கியம் என்கின்றனர்
இக்குறைபாடு உள்ள குழந்தைகளை பயிற்றுவிக்கும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள். கற்றலில் குறைபாடு என்பது ஒரு சிக்கலான நிலை. நோயாகவும் கருதமுடியாமல் , குறைபாடாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலை.
டிஸ்லெக்சியா,
டிஸ்கிராபியா,
டிஸ்கால்குலியா,
டிஸ்பிராக்சியா என இக்குறைபாட்டில் ஏற்படும் பிரிவுகளும், அதன் அறிகுறிகளும் ,தீவிரமும் மாறுபடும் என்றும் பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 முதல் 15 சதவிகித மாணவர்களுக்கு இப்பிரச்சனை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சென்னையை சேர்ந்த இக்குறைபாடு உடைய குழந்தைகளை பயிற்றுவிக்கும் அனன்யா என்னும் சிறப்புபள்ளியின் முதல்வர் திருமதி.கவுரி .
*விழிப்புணர்வு அவசியமா?*
பெற்றவர்கள் மனநிலை எப்போதும் தங்கள் குழந்தைகளின் கற்கும்திறன் அனைவரையும் விட சிறப்பாக அமைய வேண்டும் என்பதே.
ஆனால் குழந்தைகளின் கற்பதிலும், பயிலும் விஷயங்களை மனதில் இருத்துவதிலும், சரியான பதிலை வெளிப்படுத்துவதிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபாடு காணப்படும். பார்க்கும் படங்களை, கேட்கும் விஷங்களை சொல்லும் மாணவர்களால் எழுதமுடியாமல் தடுமாறுவர்.
சிறுவயது முதல் எழுதுதல், வாசித்தல், கணக்குபோடுதல் , என கற்கும் விதத்திலும், கற்றதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் விதத்திலும் ஏற்படும் பிரச்னையால் பிறவிமுதலே தடுமாறும் இத்தகைய குறைபாடு உடையவர்களை மாணவர்களை ஆரம்ப காலத்தில் இனம் காணுவது மிகமுக்கியம் என்றும் , குறிப்பிட்டு சொல்லும் அளவில் இக்குறைபாடு உள்ள மாணவர்களை சிறப்பு பள்ளிகளில் சேர்ந்து ஆரம்ப காலங்களிலேயே மாற்றுவழி கற்பித்தலின் முலம் உயர்வகுப்புகளிலும், எதிர்காலத்திலும் மற்றவர்களுடன் இணைத்து சாதிக்க இயலும் என்கிறார் ஹரிணி .
*ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதா?*
ஆரம்ப பள்ளி ஆசிரியர்களால் தங்கள் மாணவர்களின் கல்விகற்கும் திறனில் உள்ள பிரச்சனைகளை எளிதில் உணர முடியும். இவ்வாறு ஆசிரியர்கள் கண்டறிந்தாலும், பெற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தல் அவசியம் என்றும் , பெற்றவர்களும் இக்குறைபாட்டை புரிந்து கொண்டு குழந்தைகளை இப்பிரச்சனையிலிருந்து வெளிக்கொண்டுவர முழுஒத்துழைப்பு தருதல் அவசியம் என்கின்றனர் சிறப்புபள்ளியின் பயிற்சியாளர்கள்.
2 முதல் 6ஆம் வகுப்புவரை முறையாக அவர்களின் குறை,நிறைகளை கவனித்து அவர்களுக்கு பன்நோக்கு முறையினால் எடுக்கப்படும் பயிற்சிகள் முலம் அவர்களால் கல்லூரிவரை எதையும் சாதிக்க இயலும் என்றும், இவ்வாறான மாணவர்கள் மிக்க நுண்ணறிவு மிக்கவர்களாக இருப்பார்கள், கலை , கைவினை, நாட்டியம் என பல துறைகளிலும் மிக சிறப்பான முறையில் சாதனைகளை செய்கின்றனர், தடுமாறும் மாணவர்களையும் பன்நோக்கு பயிற்சியின் காரணமாக ஊக்கப்படுத்தி தன்னம்பிக்கையை தரவேண்டும்.
*டிஸ்லெக்சியா என்றால் என்ன?* - காரணமும், தீர்வும்
இது ஒரு பெரிய குறைப்பாடாக கருதாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களின் தரும் ஒத்தழைப்பே 50 சதவீதத்தை குறைபாட்டை சரி செய்ய இயலும் என்கிறார் சிறப்புபள்ளியின் முதல்வர் திருமதி.கவுரி
*பன்நோக்கு முறை கல்வி அவசியமா?*
பரம்பரையாக வரும் இந்த டிஸ்லெக்சியா குறைபாடு பிறக்கும் போது இருப்பதை போன்றே ஆயுட்காலம் வரை இருக்கும் என்றாலும், இக்குறைபாடு விரைவாக அறியப்படுதலும், முறையான பயிற்சிகளின் மூலமாகவும் இக்குறையினது தாக்கத்தை குறைக்க இயலும் என்றும் ஆரம்பகால புரிந்தல் மற்றும் அதற்கான மாற்றுவழி போதனை தருவதில் விழிப்புணர்வு அவசியம் .
பார்வை நன்றாக இருந்தும் வாசித்தலிலும் ,பார்த்து எழுதுவதிலும் பிரச்சனைகள் வரலாம்.சொல்லி கொடுப்பது புரிந்தாலும் அதை எழத இயலாமல் போகலாம்.வாய்வழி பதில் சொல்லும் ஆர்வம் எழுதுவதில் இல்லாமல் போகலாம் .
இதனால் மாணவர்களிடையே தாழ்வுமனப்பான்மை, கோபம் பிறக்க வழிவகுக்கும். வாழ்நாள் முழுவதும் தொடரும் இக்குறைபாட்டினால் எழும் பிரச்சனைகளை குறித்து கண்டு கலங்காமல் மாற்றுவழி போதனையை பன்நோக்குமுறை மூலம் கற்பித்து பிரச்சனையை சமாளிக்க முன்வரவேண்டும் என்கிறனர் மெட்ராஸ் டிஸ்லெக்சிக் அமைப்பினர்.
*விழிப்புணர்வில் அரசின் முயற்சி*
மெட்ராஸ் டிஸ்லெக்சிக் அமைப்பு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் செயல்பட்டு பல வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தநிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசுடன் இணைந்து கற்றலில்குறைபாடு குறித்த விழிப்புணர்வு திட்டத்தினை துவங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
சமுகத்தின் அனைத்துதரப்பு மாணவர்களையும் கருத்தில் கொண்டு குறைபாடுடைய மாணவர்களை கண்டறியவும் ஆரம்பநிலையிலேயே மாற்றுவழி மூலமாக அவர்களுக்கு கற்பிக்கவும், தனித்திறனை வெளிக்கொணரவும் மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியை அளிக்க அரசால் திட்டமிட்டும், பணிகளை துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இதற்கான விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படுத்துதல் மிகமிக முக்கியம் என்கின்றார் சிறப்புபள்ளியின் முதல்வர் திருமதி.கவுரி.
நன்றி