Sunday, July 19, 2015

புவி வெப்பமடைதல் நம் பங்கு என்ன?

3 - புவி வெப்பமடையக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தில் உலக அளவில் இந்தியாவின் இடம்
ஆற்றல்
132% - 2035 வாக்கில் இந்தியாவின் ஆற்றல் நுகர்வில் ஏற்படவிருக்கும் அதிகரிப்பு. அதேநேரத்தில் வரும் முப்பதாண்டுகளில் இந்தியாவின் மின்சாரத் தேவை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. அதிக ஆற்றல் உற்பத்தி, புவி வெப்பமடைதலையும் அதிகரிக்கும்
மின் இழப்பு
23% - மின்திருட்டாலும் பழுதடைந்த மின் அமைப்புகளாலும் இந்தியாவில் ஏற்படும் மின் இழப்பின் சதவீதம்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
70% - இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் காற்று மின்னாற்றலின் அளவு.
16% - 2040 வாக்கில் இந்தியாவின் ஆற்றல் தேவையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் ஈடுகட்டக்கூடிய அளவு. அந்தக் காலகட்டத்திலும்கூட புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு 75 சதவீதமாக இருக்கும் என்றே உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
80 கோடி - இந்தியாவில் சாணம், விறகு உள்ளிட்ட எரிபொருட்களைக் கொண்டு எரிசக்தியைப் பெறுவோரின் எண்ணிக்கை. இதில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில்தான் இருக்கிறார்கள். இது காற்று மாசுபாட்டுக்குப் பெருமளவு காரணமாகிறது.
நிலக்கரி
100 கோடி டன்கள்- 2019 வாக்கில் இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியின் உத்தேசிக்கப்பட்ட அளவு. இது தற்போதைய அளவைவிட இரண்டு மடங்கு.
55% - 2040 வாக்கில் இந்திய மின்னுற்பத்தியில் நிலக்கரி மின்சாரத்தின் உத்தேசமான பங்கு.
60% - கடந்த ஆண்டில் இந்தியாவில் நிறுவப்பட்டிருக்கும் மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டிருப்பவையின் சதவீதம். நிலக்கரிதான் புவி வெப்பமடையச் செய்வதற்கு முக்கிய காரணம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள்தொகை
30 கோடி - இந்தியாவில் கொடிய வறுமையில் உழலும் மக்களின் எண்ணிக்கை. குண்டுபல்புகூட இல்லாத மக்களின் எண்ணிக்கையும் இதே அளவுதான்.
145 கோடி - 2028-ல் இந்தியாவின் மக்கள்தொகை என்று கணிக்கப்பட்டிருக்கும் அளவு. மக்கள்தொகையில் அப்போது சீனாவை, இந்தியா பின்னுக்குத் தள்ளியிருக்கும்.
யார் அதிகம்?
அதேநேரம் இந்தியாவின் மக்கள்தொகையையும் இந்தியாவால் வெளியேற்றப்படும் கார்பன் டையாக்சைடின் அளவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனிநபர் ஒருவர் வெளியேற்றும் கார்பன் டையாக்சைடின் அளவைவிட, இந்தியர் வெளியேற்றும் அளவு குறைவுதான்.
- தொகுப்பு: தம்பி

thanks to   tamil Hinud.