இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...
Thursday, February 26, 2015
பாடசாலை | Padasalai.Net: பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்...
பாடசாலை | Padasalai.Net: பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்...: தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatr...
பாடசாலை | Padasalai.Net: சீரழியும் ஆரம்ப கல்வி: மேல்நிலை வகுப்பில் மாணவர்கள...
பாடசாலை | Padasalai.Net: சீரழியும் ஆரம்ப கல்வி: மேல்நிலை வகுப்பில் மாணவர்கள...: மத்திய அரசும், மாநில அரசும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ...
பாடசாலை | Padasalai.Net: மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆச...
பாடசாலை | Padasalai.Net: மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆச...: (அடிச்சா திருப்பி அடிக்காதவங்க உலகத்துலேயே இரண்டு பேர் தான் - 1) கோயில் பூசாரி, 2) பள்ளிக்கூட வாத்தியார் - சமீபத்தில் வெளிவ...
Thursday, February 19, 2015
ரவீந்திரநாத் தாகூர்...
1941-ல்
தமது 80-வது வயதில் காலமான ரவீந்திரநாத் தாகூர் தலைசிறந்த மகாகவி
மட்டுமல்ல; சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகியவற்றையும் திறம்படப்
படைத்துள்ளார். இவர் உருவாக்கிய ரவீந்திர சங்கீதம் பிரசித்தமானது. தவிர,
அவர் கைதேர்ந்த வண்ண ஓவியரும்கூட. கடைசி பதினேழு ஆண்டுகாலத்தில் அவர்
தீட்டிய 3,000 நவீன பாணி ஓவியங்களும், வரைந்த கோட்டுச் சித்திரங்களும்
கொல்கத்தா விஸ்வபாரதி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
1861 மே 7-ம் தேதி கொல்கத்தாவில்
ஒரு செல்வந்த நிலச்சுவான்தாரின் கடைசி மகனாகப் பிறந்தவர் தாகூர்.
வீட்டிலேயே அறிவியல், கணிதம், இசை, ஓவியம், வடமொழி, வங்காளி, ஆங்கிலம் ஆகிய
பல கலைகளைக் கற்றறிந்தார். எட்டாம் வயதில் கவிதை புனையத்தொடங்கினார்.
பதினைந்தாம் வயதில் அவர் எழுதிய சிறுகதை, வங்க சிறுகதைத் தொகுப்பு நூலில்
வெளியாயிற்று.
வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்கு
இங்கிலாந்து சென்ற அவர் அந்தப் படிப்புப் பிடிக்காமல் இரண்டே ஆண்டில்
இந்தியா திரும்பினார். 1883-ல் திருமணம். ஆனால் 1902-ல் மனைவி மரணம்.
மறுமணம் செய்துகொள்ளவில்லை.
1901-ல் சாந்திநிகேதனில் ஓர் ஆசிரமப் பள்ளியை நிறுவினார். அதுவே பிற்காலத்தில் விஸ்வபாரதி பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது.
அவர் வங்க மொழியில் இயற்றிய
""கீதாஞ்சலி'' கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1913-ல் வெளியானது.
அதற்காக இலக்கிய நோபல் பரிசு அதே ஆண்டில் வழங்கப்பட்டது.
ரவீந்திரநாத் தாகூரும் மகாத்மா
காந்தியும் 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களாகக்
கருதப்படுகின்றனர். பல விமர்சகர்கள் அவ்விருவரையும் ஒப்பிட்டுப் பல்வேறு
கோணங்களில் எழுதியுள்ளனர்.
1941 ஆகஸ்ட் 7 அன்று தாகூர்
காலமானார். காந்திஜியின் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவிருந்த
ஜவாஹர்லால் நேரு கைது செய்யப்பட்டு அப்போது சிறையில் இருந்தார். தாகூர்
மறைவு பற்றித் தமது அன்றைய சிறை டயரியில் நேரு இவ்வாறு எழுதினார்:
""காந்திஜியும் தாகூரும்
ஒருவருக்கொருவர் முழுதும் மாறுபட்டவர்களாக இருப்பினும், நம் நாட்டில்
தோன்றிய மகத்தான மனித வரிசையில் அவ்விருவருமே இந்தியாவின் ஆன்மாவைப்
பிரதிபலிக்கின்றனர். ஏதோ குறிப்பிட்ட சீரிய பண்பு பொருந்தியவர்கள்
என்றில்லாமல் இன்றளவில் உலகிலுள்ள சிறப்புமிக்க மாமனிதர்களின் பொதுத்
தோற்றத்தில் காந்தியும் தாகூரும் தலைசிறந்தவர்கள் என்பதே எனது கணிப்பு.
அவ்விருவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றது நான் பெற்ற பெரும்
பேறு''.
காந்திஜி தார்மிகம்
செறிந்த அரசியல்வாதி. ஆனால், தாகூர் அரசியலிலிருந்து விலகியே நின்றார்
என்று சொல்வாருண்டு. அது அவ்வளவு சரியல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில்
தாகூர் நேரடியாகப் பங்குகொண்டதில்லை என்றபோதிலும், 1905-ல் வைஸ்ராய்
கர்ஸன் பிரபு வங்கத்தை இரு தனி மாகாணங்களாகப் பிரிவினை செய்ததை எதிர்த்து
வங்க மக்கள் திரண்டெழுந்து அவ்வெழுச்சி தேசிய இயக்கமாக உருவெடுத்தபோது
அப்போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் தீவிரமாகக் கலந்துகொண்டார்.
1913-ல்
நோபல் பரிசு வழங்கப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் உயர் அரசாங்கம் 1915-ல்
தாகூருக்கு "ஸர்' பட்டம் அளித்துக் கௌரவித்தது. 1919 ஏப்ரல் 13 அன்று
அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்த அப்பாவி மக்களின்
மீது ஆங்கிலேய ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் தொடர்ந்து
துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
நாட்டைப் பதறச் செய்த அந்தப்
படுகொலையைக் கடுமையாகச் சாடிய தாகூர், தமக்கு முன்னர் அளிக்கப்பட்ட "ஸர்'
பட்டத்தை உடனடியாகத் துறந்தார். ஆனால் அச்சமயம் ஜாலியன் வாலாபாக்
படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை;
1915-ல் தமக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட கெய்ஸர் -இ - ஹிந்த்
தங்கப் பதக்கத்தையும் துறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ்
அரசாட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை 1920 ஆகஸ்ட் முதல் தேதி
காந்திஜி தொடங்கி வைத்தபோதுதான் தமக்கு முன்பு அளிக்கப்பட்டிருந்த கெய்ஸர் -
இ - ஹிந்த் பதக்கத்தையும், தென்னாப்பிரிக்காவில் போயர் யுத்தம் மற்றும்
ஜூலு புரட்சியின் போது புரிந்த ராணுவ மருத்துவ சேவைகளுக்காகவும்
அளிக்கப்பட்ட பதக்கங்களையும் காந்திஜி துறந்தார்.
காந்திஜியின்
மீது குருதேவ் தாகூர் தனிப்பட்ட முறையில் பெருமதிப்பும் மரியாதையும்
வைத்திருந்தார். இந்தியாவுக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கி மக்களை
வழிநடத்திச் செல்ல காந்திஜி ஒருவர் மட்டுமே முற்றிலும் தகுதி வாய்ந்தவர்.
தம்மால் அது இயலாது என்று தாகூர் நன்கு அறிந்திருந்தார். 1916-ம் ஆண்டிலேயே
காந்திஜியை "மகாத்மா' என்று குறிப்பிட்டு, அந்தப் பட்டத்தைப்
பிரபலப்படுத்தியவரும் ரவீந்திரநாத் தாகூர்தான்.
இவ்வாறாயினும், இவ்விரு
மாமனிதருக்கிடையே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. அவற்றைப்
பற்றி தாகூர் வெளிப்படையாகவே கண்டனம் எழுப்பினார். சுதந்திரப்
போராட்டத்தில் வரம்புகடந்த தேசிய ஆர்வத்துக்கும், குறுகிய தேச பக்திக்கும்
முக்கியத்துவம் அளிப்பதை தாகூர் ஏற்கவில்லை.
விஞ்ஞானி சந்திர போஸின் மனைவி
அபலா போஸýக்குத் தாகூர் 1908-ம் ஆண்டில் எழுதிய கடிதத்தில், ""குறுகிய
தேசிய மனப்பான்மை அல்லது நாட்டுப்பற்று நமது ஆன்மிக உயர்வின் புகலிடமாக
இருக்க மாட்டாது. மானிட வர்க்கம் முழுவதுமே நமது அடைக்கலம் ஆகும்.
வைரத்துக்கான விலையைக் கொடுத்து வெறும் கண்ணாடிக் கற்களை நான் வாங்கத்
தயாரில்லை. மானிட வர்க்கத்துக்கு எதிராகக் குறுகிய தேசபக்தி ஜெயகோஷம்
போடுவதை நான் ஒருக்காலும் ஏற்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார். பின்னர்
ஒத்துழையாமை இயக்கத்தின்போது தேசியம் என்று கூக்குரலிட்டுப் பாமர மக்களை
ஆட்டுமந்தைபோல் தலைவர்கள் இட்டுச் செல்வதையும் கடுமையாகச் சாடினார்.
கைராட்டையின் பெருமையையும் நூல்
நூற்பதன் அவசியத்தையும் காந்திஜி திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறி
வருவதை தாகூர் கண்டித்தார். ""மாடர்ன் ரிவ்யூ'' (செப்டம்பர் 1928) இதழில்
""சர்க்கா வழிபாடு'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தாகூர் இவ்வாறு
சாடினார்:
""கைராட்டையை அதன் குறிப்பிட்ட
தகுதிக்கு மேல் உயர்த்திப் பிடிப்பதை எனது பகுத்தறிவும் மனசாட்சியும்
ஏற்கவில்லை. சர்க்காவுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பதால்
இந்திய மறுமலர்ச்சிக்குப் புரிய வேண்டிய அதிமுக்கிய பணிகளில் கவனம் செலுத்த
இயலாமற் போய்விடும். செக்குமாடுபோல் சர்க்காவை ஒரே மந்த கதியில் சுழற்றிக்
கொண்டிருப்பது சாவு போன்ற வெறுமையே ஆகும்; அது புத்தி மழுங்கச் செய்யும்
காரியம் என்பதே எனது துணிபு.''
இந்தக் குற்றச்சாட்டுக்குப்
பதிலளித்து ""கவியும் சர்க்காவும்'' என்ற தலைப்பில் காந்திஜி தமது ""யங்
இந்தியா'' (5-11-1925) வாராந்திரியில் எழுதிய கட்டுரையின் சாராம்ச வாசகம்
இதுதான்:
""மகாகவியின் கண்டன விமர்சனம்
கவிதா ரூபமாய் மிகைப்படுத்தி வர்ணிப்பது என்ற வகையில் அவரது உரிமையாம்.
அதனை நான் எதிர்ப்பதற்கில்லை. ஆயினும், ஒரே மாதிரியான கைராட்டையின்
சுழற்சி, சாவு போன்ற வெறுமைக்கு ஒப்பானது அல்லவே அல்ல. பார்க்கப் போனால்
சூரியனும் கிரகங்களும் ஒரேமாதிரியான இயந்திரகதியில்தான் இயங்குகின்றன. பாதை
தவறினால் அதோ கதிதான்...
தினந்தோறும் அரைமணி நேரமேனும் ஓர்
யக்ஞமாக அனைவரும் நூல் நூற்க வேண்டும் என்றுதான் கூறி வருகிறேன்; நாள்
முழுதும் அல்ல. கிராமப்புறங்களில் மக்கள் வேலையின்றி சோம்பித் திரிவதை
அகற்றி, ஏழைகளின் பொருளாதாரத்துக்கு ஓரளவு வருவாய் ஈட்டித்தரும் சாதனமே
கைராட்டை. கிராமாந்திரங்களில் சர்க்கா நிலைபெற்றால், பொருளாதாரம்,
சுற்றுச்சூழல், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு எல்லாமே மேம்படும்''
என்றெல்லாம் காந்திஜி வாதித்தார்.
இத்தகைய கருத்து மோதல்களுக்கிடையேயும் காந்திஜியும் தாகூரும் ஒருவருக்கொருவர் பெருமதிப்புடன் கடைசிவரை நேசம் பாராட்டி வந்தனர்.
""மனிதாபிமானி காந்தி'' என்ற தலைப்பில் தாகூர் 1938-ல் எழுதிய கட்டுரையில் காந்திஜியைக் கீழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார்.
""காந்திஜி அரசியல்வாதி. சிறந்த
நிர்வாகி. மக்களின் பெருந்தலைவர். தார்மிக சீர்திருத்தவாதி என்ற சிறப்புகள்
ஒருபுறமிருக்க, இவற்றுக்கெல்லாம் மேலாக இவைசார்ந்த அன்னாரது நடவடிக்கைகள்
எதுவுமே மானிட வர்க்கத்தின்பால் அவர் கொண்டுள்ள அன்பையும்
அருளிரக்கத்தையும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக, அப் பேரன்பு அவரது
அனைத்துச் செயல்பாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது.''
ரவீந்திரநாத் தமது பிற்கால வாழ்வை சாந்திநிகேதன் பள்ளியையும் விஸ்வபாரதி அமைப்பையும் மேம்படுத்துவதன் பொருட்டே அர்ப்பணித்தார்.
1941 ஆகஸ்ட் 7 அன்று தாகூர்
மறைந்ததையொட்டி மகாத்மா காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
""ரவீந்திரநாத் தாகூரின் மரணத்தில் நாம் இந்தச் சகாப்தத்தின் மிகச்சிறந்த
கவியை மட்டும் இழக்கவில்லை; அபரிமித மனிதாபிமானியையும், ஆர்வமிக்க
தேசியவாதியையும் இழந்துவிட்டோம்.
அவரது சக்திமிக்க தனித்தன்மை,
தடம் பதிக்காத பொது நடவடிக்கை ஏதுமில்லை. சாந்திநிகேதனத்திலும்
ஸ்ரீநிகேதத்திலும் நம் நாடு முழுவதற்கும், ஏன், இவ்வையகம் முழுவதற்கும் ஓர்
மரபுரிமைச் செல்வத்தை அளித்துச் செல்கிறார்'', என்று அஞ்சலி செலுத்தினார்.
தாகூர் 1911-ல் புனைந்த ""ஜன கண
மன...'' பாடல் இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்திய தேசிய கீதமாக
ஏற்கப்பட்டது மிகப் பொருத்தமே ஆகும். 1972-ல் கிழக்குப் பாகிஸ்தான்
பங்களாதேஷ் என்ற தனிநாடாகப் பிரிந்த பின் தாகூர் முன்பு எழுதிய ""அமர் சோனா
பங்களா...'' என்ற பாடல் அந்நாட்டின் தேசிய கீதமாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகின் இரு தனித்தனி நாடுகள் ஒரே கவியின் பாடலைத்
தங்கள் தேசிய கீதமாக வரித்தது மகாகவி தாகூரின் பெருமைக்கு ஓர்
எடுத்துக்காட்டு.
நன்றி கல்விசோலை
Sunday, February 08, 2015
தூ ய் மை இந்திய .....
தூ ய்மை இந்தியா
திட்டத்தால் எங்கும்
சுத்தம்…. சுத்தம்
எங்கள் வீட்டில்
அறை எல்லாம்
சுத்தம்…. சுத்தம்
அடுப்பறையும்
சுத்தம்…. சுத்தம்
அனால் எங்கள்
வீட்டு அடுப்பு
படுக்கையானது
எங்கள் வீட்டு
புனைக்கு……
அன்புடன் சிவா….
Wednesday, February 04, 2015
பெற்றோரின் கனவுகளை சுமப்பவர்களா பிள்ளைகள
6
பிளஸ் 2 தேர்வுகள் நெருங்கி வருகின்றன. அதற்கு முன்னதாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எளிமையாக ஒரு தேர்வு...
உங்கள் குழந்தைக்கு பிடித்த உணவு எது?
பிடித்த உடை எது?
பிடித்த விளையாட்டு எது?
பிடித்த பாடம் எது?
பிடித்தமான ஆசிரியர் யார்?
உங்கள் குழந்தை என்னவாக விரும்புகிறார்?
மேற்கண்ட ஆறு கேள்விகளில் ஐந்து கேள்விக்கு பதில் தெரியும் எனில் நீங்கள் தேர்ச்சி அடைந்துவிட்டீர்கள். தேர்ச்சி அடையவில்லையா? ஒன்றும் பிரச்சினை இல்லை. இப்போதுகூட உங்கள் குழந்தையிடம் கேட்டு அறிந்துகொண்டு தேர்ச்சி பெறுங்கள்.
சரி, விஷயத்துக்கு வருவோம். வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் உங்கள் மகன்/மகள் பெறும் மதிப்பெண் களுக்கான பொறுப்பு அவர்களுக்கானது மட்டும் அல்ல... அது ஆசிரியர்களுக்கு நிகராக உங்களையும் சார்ந்தே உள்ளது. இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு வீடும் பரபரப்பு களமாக மாறியுள்ளது. தேர்வைச் சுற்றியே பெற்றோர், குழந்தைகளின் கவனம் சுழன்று கொண் டிருக்கும் தருணம் இது. இப்போது நிதானமாக பெற்றோர்கள் யோசித்து, ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.
இந்த போட்டியில் மூன்று தரப்பிலி ருந்து உங்கள் குழந்தை அழுத்தங்களை எதிர்கொள்கிறது. 1. பெற்றோர் 2. பள்ளி நிர்வாகம் 3. சமூகம். உங்கள் குழந் தையின் பலம், பலவீனம், எதிர்பார்ப்பு, கோபம், ஆனந்தம், ஆத்திரம் உள்ளிட்ட சகல குணங்களை அறிந்து ஏற்றுக் கொண்டிருக்கும் பெற்றோரால் மட்டுமே மேற்கண்ட மன அழுத்தத்தை நேர்மறை மன அழுத்தமாக, ஆரோக்கியமான மன அழுத்தமாக உங்கள் குழந்தையின் மீது செலுத்த முடியும். ஏனெனில் சமூகத்துக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் அந்த பொறுப்புகள் கிடையாது. பொரு ளியல் அல்லது ஏதோ ஓர் எதிர்பார்ப்பு அடிப்படையில் அவை இயங்குகின்றன.
பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகள் முதல் மதிப்பெண் பெற வேண்டும்; மருத்துவராக அல்லது பொறியாளராக வர வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளனர். இது இயலும் அல்லது இயலாது என்பது அடுத்த விஷயம்.
ஆனால், ஒவ்வொரு குழந்தையும் தங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ப மட்டுமே மதிப்பெண் பெறும் என்கிற அடிப்படை உண்மையை பெற்றோர் உணர வேண்டும். படிப்பு வராத குழந் தைக்கு ஓவியத்திலோ அல்லது வேறு ஏதோ ஒன்றிலோ அபரிமிதமான தனித் திறமை இருக்கும். திறமையே இல்லாத குழந்தை என்று யாரும் கிடையாது.
ஆனால், அதனை கண்டறிவதுதான் பெற்றோரின் சாமர்த்தியம். குழந்தை யின் திறமை குறித்து தெரிந்து கொள்ள முடியாத பெற்றோர், உங்கள் பிள்ளையின் நண்பர்கள், நெருங்கிப் பழகும் உறவினர்கள், குழந்தையின் ஆசிரியர் ஆகியோரிடம் கேட்டு அறிந்து கண்டறிய வேண்டும். அந்த தனித் திறமைக்கு ஏற்ற வகையிலான துறை சார்ந்த பணிக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்ய பெற்றோர் உதவ வேண்டும்.
ஆனால், மேற்கண்ட விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது பெற்றோரின் சுயநலமே. விருப்பத்தை, நிறைவேறாத அல்லது தங்களால் சாதிக்க இயலாத ஒன்றை குழந்தையின் தலையில் சுமத்துவதே நடைமுறையில் அதிகமாக இருக்கிறது. உங்கள் நிறைவேறாத ஆசைகளின் வடிகால் அல்ல உங்கள் பிள்ளைகள். உங்களின் நிறைவேறாத கனவுகளை கண்டடையும் தேவதூதர்களும் அல்ல அவர்கள். அவர்களுக்கு உங் களைப் போன்றே சுயமான ஆசைக ளும் கனவுகளும் கொண்ட சராசரி மனிதர் கள்தான். அவர்களை சூப்பர் மேன்களாக கற்பிதம் செய்துகொள்ளாதீர்கள். எனவே, ஒருபோதும் உங்கள் பிள்ளையின் விருப்பத்துக்கு மாறான படிப்பை, தொழிலை உருவாக்கி கொடுக்கும் சூழலை ஏற்படுத்திவிட வேண்டாம்.
மிரட்டல் அல்லது கட்டாயப்படுத்தும் விதத்தில் மதிப்பெண் இலக்கு நிர்ண யிக்கக் கூடாது. இலக்கு அடைய முடியாதபட்சத்தில் விபரீதமாக எதையும் செய்யத் துணியும் பதின்ம வயதில் உங்கள் பிள்ளை இருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக தேர்வுக்கு தயாராகி வரும் குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு படுக்கைக்கு குழந்தைகளை அனுப்பி அதிகாலை 5 மணிக்கு எழுப்பி படிக்க வையுங்கள். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் ஓய்வு அவசியம்.
தேர்வு சமயத்திலும்கூட குழந்தை கள் தினமும் அரை மணி நேரமாவது அவர்கள் விரும்பிய இசை, தொலைக் காட்சி, விளையாட்டு உள்ளிட்ட பொழுது போக்குகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது தான், கவனக்குறைவின்றி (Lack of concentration) தேர்வுக்கு அவர்க ளால் தயாராக முடியும்.
பெற்றோரின் அன்பும் அரவ ணைப்புமே குழந்தைகளின் தேர்வு பயத்தை போக்கும் அருமருந்து. தினமும் குழந்தைகளை பத்து நிமிடம் தியானப் பயிற்சி எடுக்கச் செய்யலாம்.
தியானத்தில் இருக்கும் போது, தேர்வு அறையில் பதற்றமின்றி அமர்ந்து இருப்பதை போன்றும், கேள்வித்தாள் எளிமையாக இருப்பதாகவும், நல்ல முறையில் தேர்வு எழுதி முடிப்பதை போலவும் அழகான கற்பனை உலகை நினைவில் நிறுத்த கற்றுக்கொடுங்கள். இதனால், உளவியல் ரீதியாக மனதில் நேர்மறை சிந்தனை அதிகரித்து, நல்ல முறையில் தேர்வுக்கு தயாராக முடியும்.
கட்டாயம் தவிர்க்க வேண்டிய வசனங்கள்...
“உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக்கொள்... எது வேண்டுமானாலும் செய்துகொள். மதிப்பெண் மட்டும் வாங்கிவிடு...” ரீதியிலான வசனங்களை தவிர்க்கவும். காசு கொடுத்து வாங்குவது அல்ல மதிப்பெண்கள்!
அவரைப் போல வரவேண்டும்; இவரைப் போல வர வேண்டும் என்று ஒப்பிடாதீர்கள். ஏனெனில் உங்கள் பிள்ளை என்பவர் உங்கள் பிள்ளை மட்டுமே. நீங்கள் குறிப்பிடும் அவரோ இவரோ அல்ல.
“மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டால் எங்களால் வெளியே தலைகாட்ட முடியாது...” என்று சொல்லி உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட திறன் சார்ந்த விஷயத்தை சமூகம் சார்ந்த பிரச்சினையாக உருவாக்காதீர்கள்.
“நீ எடுக்கும் மதிப்பெண்ணில்தான் நம் குடும்பத்தின் எதிர்காலமே இருக்கிறது...” என்று உங்கள் பொறுப்பை உங்கள் பிள்ளையின் மீது சுமத்தாதீர்கள்.
பேராசிரியர் எஸ்.கதிரவன், உளவியல் துறைத் தலைவர், பெரியார் பல்கலைக்கழகம்.
மாணவர் நலம் கருதி
அன்புடன் சிவா...
நன்றி ,ஹிந்து ..
Monday, February 02, 2015
கணினியில் Voice Record அல்லது Sound Record செய்வது எப்படி?
நீங்கள் பேசும் பேச்சு, கவிதை, பாடல்கள் எதுவானாலும் உங்கள் கணினியிலேயே பதிவு செய்து அதை கேட்டு மகிழலாம். CD, Pendriver போன்ற சாதனங்களிலும் பதிந்துவைத்துக்கொள்ள முடியும்.இதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய மற்றொரு சாதனம் HEAD PHONE with mic. பெரும்பாலும் கணினியுடன் சேர்ந்தே கிடைக்கும்.
இல்லாதவர்கள் ஒரு நல்ல நிறுவனத்தின் தரமான HEAD PHONE with mic -ஐ வாங்கிக்கொள்ளுங்கள். இப்போது மிகக் குறைந்த விலையிலேயே இந்த HEADPHONE சந்தையில் கிடைக்கிறது.
கணினியில் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
HEADPHONE with mic உங்கள் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள்.
HEADPHONE உங்கள் தலையில் மாட்டிக்கொள்ளவும். நீட்டியிருக்கும் Mic -ஐ உங்கள் வசதிக்கு தக்கவாறு வாயருகே வைத்துக்கொள்ளுங்கள்.
Task Bar-ல் உள்ள Start Button அழுத்துங்கள்.
அதில்
Programe==>Accessories==>Entertainment==>Sound Recorder என்பதைத் தேர்ந்தெடுங்கள்.(windows xp பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்)
Start==>all Programes==>Accessories==>Sound Recorder என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.( windows7 பயன்படுத்துபவர்களுக்கு)
தோன்றும் விண்டோவில் Start Recording என்பதை(சிவப்பு நிறத்தில் இருப்பதை) அழுத்தவும்.
உடனே உங்கள் கணினியில் ரெங்கார்டிங் start ஆகிவிடும்.
இப்போது நீங்கள் பேசவேண்டியதை பேசி மீண்டும் அந்த சிகப்பு பட்டனை(Stop Recording) அழுத்தும்போது அந்த ஆடியோ கோப்பை சேமிக்க கேட்கும்.
அதில் Yes கொடுத்து நீங்கள் பேசியதை, பாடியதை, வாசித்ததை சேமித்துக்கொள்ளுங்கள்.
கணினியில் குரலை பதிவு(Voice Recording) செய்ய
பதிவு செய்ததை நிறுத்த
உங்கள் கணினியில் சேமித்த Audio file நீங்கள் CD-யில் Burn செய்துகொள்ளலாம். அல்லது பென்டிரைவ்(Pen drive) போன்றவற்றிலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இணையத்தின் மூலம்(Social network) நண்பர்களுக்கும் இந்த Audio file அனுப்பி வைக்கலாம.
அன்புடன் சிவா...
நன்றி அன்பை தேடி ...
வெற்றி மொழி:
லியோ டால்ஸ்டாய்
1828-ம் ஆண்டு பிறந்த லியோ டால்ஸ்டாய், 1910 வரை வாழ்ந்த ரஷ்ய எழுத்தாளர் ஆவார். கட்டுரையாளர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி என பண்முக திறமைகள் கொண்டவர். தொடக்க காலத்தில் நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதத்தொடங்கி, பின்னர் நாடகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதி புகழ்பெற்றார்.
இவரது ஆரம்பகால படைப்பான ``வார் அண்ட் பீஸ்”, மிகச்சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக போற்றப்பட்ட டால்ஸ்டாய், தனது வாழ்வின் இறுதி வரையிலும் எழுத்துப்பணியினை தொடர்ந்தார்.
# பொறுமை மற்றும் நேரம் ஆகியவையே, மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது.
# எல்லோரும், உலகம் மாறவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, தான் மாறவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.
# நமது வாழ்க்கையின் ஒரே அர்த்தம், மனித குலத்திற்கு சேவை செய்யவேண்டும் என்பதே.
# ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது.
# மகிழ்ச்சி என்பது வெளிப்புற விஷயங்களைப் பொறுத்ததல்ல, எந்த வழியில் அதனை அணுகுகிறோம் என்பதை பொறுத்ததே.
# நமக்கு எதுவும் தெரியாது என்று மட்டும் அறிந்துகொள்ளமுடிவதே, மனித ஞானத்தின் மிக உயர்ந்த படிப்பு.
# வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது.
# வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களே, வாழ்க்கையை உண்மையாக வாழ வைக்கின்றன.
# எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ. அங்கு உயர்வும் மேண்மையும் இல்லை.
# நான் யார், நான் ஏன் இங்கிருக்கிறேன் என்பதை அறியாதவரை வாழ்க்கை சாத்தியமற்றதே.
அன்புடன் சிவா..
நன்றி தமிழ் ஹிந்து .
Subscribe to:
Posts (Atom)