நிகோலோ பகாநினி என்பவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய வயலின் மேதை.
ஒருநாள் ஒரு முக்கிய கச்சேரியில் அவர் வயலின்
வாசித்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு கம்பி அறுந்து அபஸ்வரமேற்பட்டது.
மீதியிருந்த கம்பிகளிலேயே மிக அழகாக வாசிக்க ஆரம்பித்தார் அவர்.
சற்று நேரத்துக்கெல்லாம், இரண்டாவது கம்பியும் அறுந்தது!
அப்போதும் அவர்
தொடர்ந்து வாசித்தார்.
பின்னர் சொல்லிவைத்ததுபோல மூன்றாவது கம்பியும்
அறுந்து தொங்கியது.
ஆனாலும் அவர்
மனம் தளரவில்லை.
வாசிக்க வந்த
இசையை, ஒரே கம்பியில்
அழகாக வாசித்து,
முடித்துவிட்டுத்தான்
அவர் இறங்கினார்.
இத்தனைக்கும் அப்போது அவர் மிக பெரிய
இசை மேதை இல்லை...
ஆனால் பிரச்னையை
எதிர்கொள்வதில்
உறுதியாக,
சவால்களை ஏற்றுக்கொள்வதில்
நாட்டமுடையவராக
இருந்ததால்
இது சாத்தியமாயிற்று.
வாங்க...
தினசரி வாழ்வில் நமக்கும் பல்வேறு பிரச்சினைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன...
அந்த நேரங்களில், உள்ளத்தில் உறுதியுடன் நாம் செயல்படும் வேளையில்,வெற்றி நிச்சயம் நம்மை தேடி வந்தே தீரும்.
அன்புடன்
காலை
வணக்கம்.
2 comments:
நம்பிக்கையை விதைத்தது பதிவு
- கில்லர்ஜி
Super motivation ....
Post a Comment