Friday, July 24, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

அவர் ஒரு 
உலகப்புகழ் 
பெற்ற
குத்துச்சண்டை 
வீரர். 

அவரை 
வெற்றி கொள்ள 
யாருமில்லை 
என்ற 
இறுமாப்பு...

அவரிடம் 
அதிகமாக 
இருந்தது.

அவரை 
வெற்றிகொள்ள 
என்னென்னவோ 
முயற்சிகள் 
செய்தும்...

யாரும்
வெற்றிகொள்ள 
முடியவில்லை.

இதை 
கவனித்து 
கொண்டிருந்த 
ஒரு இளைஞன்...

அவருக்கு 
ஒரு பாடம் 
கற்று கொடுக்க 
விரும்பினான்.

அந்த நேரம் 
பார்த்து அந்த 
குத்துச்சண்டை 
வீரர்...
 
மக்களுக்கு 
ஒரு அழைப்பு 
விடுத்தார்.

தன்னை வெற்றி 
கொள்பவருக்கு
மிகப்பெரிய 
சன்மானம் 
வழங்குவதாக 
அறிவித்தார்.

இந்த
தருணத்திற்காக
காத்திருந்த
இளைஞன்...

அவருடன் 
போட்டிக்கு 
வருவதாக 
உறுதி அளித்தான்.

போட்டிக்கான 
நாளும் நேரமும் 
குறிக்கப்பட்டது.

இளைஞன் 
தம் மீது 
நம்பிக்கை 
கொண்ட... 

மூன்று 
நண்பர்களை 
அழைத்து சில 
குறிப்புகளை 
வழங்கி அதனை 
செயல்படுத்த 
கேட்டு கொண்டான்.

முதல் நண்பன்
போட்டி நடைபெற 
ஒரு வாரத்திற்கு 
முன் காலை 
பொழுதில் 
கையில் 
மிகப்பெரிய 
பூங்கொத்துடன்...
 
பிரபல 
குத்துச்சண்டை 
வீரரின் வீட்டுக்கு 
சென்றான்.

அவரை பார்த்து 
மலர் கொத்தை 
வழங்கி
வணக்கம்
தெரிவித்து...

நீங்கள் 
எப்போதும்
உறுதியாக
இருப்பீர்களே.

ஐயா
உங்களுக்கு
என்ன ஆச்சு.

என்னிடம்
பேசும்போதே
மூச்சு உங்களுக்கு
இரைக்கின்றதே.

உங்கள் உடலில்
நீங்கள் அக்கறை 
கொள்ளுங்கள்.

வெற்றி பெற
வாழ்த்துக்கள் 
ஐயா.

என்று 
கூறிவிட்டு
சென்றான்.

இவனின்
வார்த்தைகளில்
குத்துச்சண்டை
வீரர் கொஞ்சம்
சஞ்சலம் அடைய
தொடங்கினார்.

காலையில் 
நடைபழக்கம் 
கொண்டவர்
குத்து சண்டை 
வீரர்.

போட்டி 
நடைபெற 
இருந்த ஒரு 
மூன்று 
நாளைக்கு 
முன் அவர் 
நடைபயிற்சி 
செல்லும் போது...
 
இளைஞனின் 
இரண்டாவது 
நண்பன்
அவருடன் 
இணைந்து 
சென்றான்.

அவரை 
பார்த்து 
வணக்கம் 
தெரிவித்து... 

ஐயா 
தாங்கள் 
பிரபலமான 
குத்துச்சண்டை 
வீரர் என்பது 
ஊரறிந்த விஷயம். 

உங்களின் 
ஆத்மார்த்தமான 
ரசிகன் நான்.

நீங்கள் தான் 
இந்த போட்டியில் 
வெற்றி பெற 
வேண்டும்.

இருந்தாலும் 
கொஞ்ச நாளாக
நீங்கள் சோர்வாக
காணப்படுகிறீர்கள்.

தங்களுடைய 
இந்த நடைபயிற்சி 
சில நாட்களாக 
மிகவும் தளர்வாக
இருக்கிறது.

உங்கள் உடல் 
நலனில் அக்கறை 
செலுத்துங்கள் 

என்று 
கூறிவிட்டு 
சென்றான்.

இவனின் இந்த
வார்த்தைகளில்
குத்துச்சண்டை
வீரர்...

உண்மையில்
தாம் சற்று
தளர்வடைந்து
விட்டோமோ
என்று மனம்
தடுமாறினார்.

போட்டி
நடக்கக்கூடிய
நாள் வந்தது.

மேடைக்கு 
செல்ல 
தயாரானார்   
குத்துச்சண்டை 
வீரர்.

அப்போது 
இளைஞரின் 
மூன்றாவது 
நண்பன்
குத்துச்சண்டை 
வீரரிடம்...

கை 
கொடுக்க 
சென்றான்.
அவரும் 
கைகொடுத்தார்.

பின்னர் 
அந்த நண்பன்... 

ஐயா 
உங்களின் 
கைப்பிடியில் 
உறுதி இல்லையே. 

மிகவும் 
பலவீனமாக 
உங்கள் கைகள்
இருக்கிறது.

இருப்பினும்
உங்கள்
வெற்றிக்கு
வாழ்த்துக்கள்.

என்று 
கூறிவிட்டு 
சென்றான்.

அவ்வளவுதான். 

ஏற்கெனவே
மனதளவில்
தளர்ந்திருந்த
குத்துச்சண்டை 
வீரர்...

உடல் அளவிலும்
சோர்ந்து போனார்.

மணி 
அடிக்கப்பட்டது.
போட்டி
தொடங்கியது.

அவரின்
இந்த நிலைக்கு
காத்திருந்த
இளைஞன்...

ஆக்ரோஷமாக  
போட்டியிட்டு 
அபாரமாக 
அவரை
வென்றான்.

உடல் 
எவ்வளவு தான் 
உறுதியாக 
இருந்தாலும்...

தாம்
தளர்வடைந்து
விட்டோமோ...

தோல்வியடைந்து 
விடுவோமோ 
என்னும் 
அச்சம்...
 
மனிதனை 
மிக மோசமாக 
முடிவிற்கு 
தள்ளிவிடும்...

என்பதற்கான 
எடுத்துக்காட்டு 
இது.

வாங்க...

நம்மை
சீர்குலைக்க
கூடிய...

எந்த 
சக்திகள்
எத்தனை
திட்டமிட்டாலும்...

அது
உடல்நலம்
சார்ந்த
சங்கதியாக
இருந்தாலும்
சரி...

அல்லது...

வாழ்வில்
மேம்பாடு
அடைவதற்கான
சங்கதியாக
இருந்தாலும்
சரி...

அவைகளை
தவிடு 
பொடியாக்கி
ஜெயித்துகாட்ட...

நம்மால்
முடியும்.

நம்பிக்கைகள்
மற்றும்
வாழ்த்துகளுடன்...

அன்புடன்
இனய
காலை
வணக்கம்.

நன்றி 
முனை.சுந்தரமூர்த்தி


1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிந்தனை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.