Showing posts with label ஹி ஹி ஹி. Show all posts
Showing posts with label ஹி ஹி ஹி. Show all posts

Saturday, November 22, 2014

வேலன்:-1 முதல் 10ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு

கடந்த வாரத்தில ஒரு நாள் எனது மகன் கணக்கில் ஒரு சந்தேகம் கேட்டான். அந்த கணக்கிற்கு மாதிரியும் கொடுக்கவில்லை.கணக்கும் புரியவில்லை.கூகுள் ஆண்டவரை வேண்டினேன். அருமையான இணையதளம் கிடைத்தது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடதிட்டத்திற்கான கணக்கு கையேடு கொடுததுள்ளார்கள். அதில் கணக்கு சம்பந்தமான பார்முலாக்கள்,வீடியோக்கள்.,பயிற்சி கணக்கிற்கான விடைகளை  விரிவான வழிமுறைகளில் கொடுத்துள்ளார்கள். இவ்வளவு நாள் இந்த இணையதளத்தினை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என வருத்தம எனக்குள் ஏற்பட்டது. உங்களது குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பவர்களாக இருந்தால் இநத இணைய தளத்தினை அவர்களுக்கு புக்மார்க்காக மாற்றிக்கொடுங்கள். இந்த முகவரி தளம காண இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் வரும விண்டோவில் வலதுபுறம  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Math.Math Videos.Basic Math.Algebra.Algebra Practical.Set Theory.Sequence &Series.Graph paper.Metric System.Mensuration.Sai Preparation.Geomentry.WorkSheet.Trignomentry.Analysis.உட்பட கணிதத்தின் வகைகளை கெர்டுத்துஇருக்கின்றார்கள்.

 இடது புறம ஒன்றாம் வகுப்பபிலிருந்து பத்தாம வகுப்பு வரை பாடத்திட்டங்களுக்கான கணக்குகள் சப்ஜேக்ட் வாரியாக கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.உங்கள் குழந்தை எந்த வகுப்பு படிக்கின்றார்களோ அந்த வகுப்பினை கிளிக் செய்யவும்.
 நீங்கள் தேர்ந்தெடுத்து வரும வகுப்பில் உள்ள பாடதிட்டங்கள் பாடவாரியாக கொடுத்துள்ளார்ள். 
அடிப்படைகணக்குகளுக்கான வீடியோவினையு ம்இணைத்துள்ளார்கள்.நமக்கு எந்த கணக்கிற்கான வீடியோ தேவையோ அதனை தேர்வு செய்து எளிதில் புரிந்துகொள்ளலாம்.
பயிற்சி கணக்குகளும அதற்கான விரிவான விடைகளும கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவீில் பாருங்கள்.
பயிற்சி கணக்குகளுக்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்..
படிக்கு ம்மாணவர்கள் யாராவது இருந்தால் இந்த முகவரிதளம் அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டுகின்றேன். கருத்துக்கள் கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.      
 
                                                                         
 

Thursday, September 11, 2014

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்

 - சர். ஐசக் நியூட்டன்

  • அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
    அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.

    'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.

    அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.
     

    0 comments:

    Post a Comment

    Tuesday, April 29, 2014

    தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திருவேன்னு இனிமே சொல்ல முடியாது ஏன்? ஜோக்ஸ்

    ஜோக்ஸ்!

    1.      அந்த நடிகை ஏன் திடீர்னு தேர்தல்ல போட்டியிடறதுல்ல இருந்து வாபஸ் வாங்கிட்டாங்க?
    ‘இடைத்தேர்தல்’னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாங்களாம்!

    2.      இன்கம்டாக்ஸ் ரெய்ட் வந்ததுலேர்ந்து தலைவர் ரொம்ப பயந்து போயிட்டார்?
    அப்படியா?
    ஆமாம்! ‘டிஸ்கவரி சேனல் கூட பார்க்கறதில்லேன்னா பார்த்துக்கோயேன்!

    3.      தலைவர் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசறாரே! எந்த தைரியத்துல வீசறார்?
    ஜெயிக்கமாட்டோங்கிற தைரியத்துலதான்!

    4.      ஓட்டுப்போடப் போன தலைவர் ஏன் போடாமேயே திரும்பிட்டார்!
    அவர் கையில கறை படறத விரும்ப மாட்டாராம்!

    5.      என்னது மன்னர் தனக்குத்தானே குழிப்பறித்துக் கொண்டாரா?
    ஆம் தன் கையாலேயே பதுங்குகுழி தோண்டிக்கொண்டார் என்று சொன்னேன்!

    6.      அந்த டாக்டர் விவரமானவருன்னு எப்படி சொல்றே?
    பல்ஸ் பிடிச்சு பார்க்கிறதுக்கு முன்னாடி பர்ஸை பிடிச்சு பார்க்கிறாரே!


    7.      மக்களின் இதயங்களில் நான் குடியிருக்கிறேன்னு தலைவர் சொன்னது தப்பா போச்சா ஏன்?
    மக்கள் வாடகை கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க!

    8.      அந்த ஆள் முகத்துலேயே முழிக்க கூடாதுன்னு உங்க தொகுதிக்காரங்க சொன்னாங்களே என்ன பண்ணாங்க?
    தொகுதி வேட்பாளரா நிக்க வைச்சு ஜெயிக்க வச்சிட்டாங்க!


    9.      எதிரி நாட்டு மன்னன் அறைக்கூவல் விடுத்தும் மன்னர் சும்மா இருந்துவிட்டாரா ஏன்?
    மன்னருக்கு எந்த ஒரு விசயமும் முழுசாய் இருக்க வேண்டுமாம்! முழுகூவல் விடட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று சும்மா இருந்துவிட்டார்!

    10.  ஐ.பி. எல் பார்த்ததுலே இருந்து தலைவர் அதே ஞாபகமா இருக்கார்?
    ஏன்?
    ப்ளேயர்களை ஏலத்தில எடுக்கிறமாதிரி தொகுதிகளையும் ஏலத்திலே எடுத்தா என்னன்னு கேட்டுக்கிட்டு இருக்கார்.

    11.  டீ.வி பார்க்கறதுல எனக்கும் என் ஹஸ்பெண்டுக்கும் சண்டையே வந்துருச்சு?
    அப்புறம்?
    அவரு சமைக்கறப்ப நான் பாக்கிறதுன்னும் நான் சாப்பிடறப்ப அவரு பாக்கிறதுன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம்!

    12.  ஏடிஎம் மிசின் மேலே ஏன் ஏறி நிக்கறீங்க!
    அதுதாங்க பேலன்ஸ் சரியா இருக்கான்னு பாக்க சொல்லுச்சு!

    13.  நம்ம தலைவர் தன்மான சிங்கம்!
    எப்படி சொல்ற?
    எந்த கட்சியும் ஆதரவு கேட்டு வராததாலே தன்னோட ஆதரவை நோட்டாவுக்கு கொடுக்கிறதா அறிக்கை விட்டிருக்காரே!

    14.  அந்த நடிகைக்கும் டைரக்டருக்கும் லவ் பத்திக்கிச்சாமே!
    கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி அதை அணைச்சி வச்சிருக்காங்க!

    15.  மகளிர் அணித்தலைவி எதுக்கு தலைவரோட கோச்சுக்கிட்டு போறாங்க?
    தலைவரோட வீட்டுல 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டாங்களாம்!

    16.  செயினை அறுத்துட்டு ஓடினவனை இன்ஸ்பெக்டர் விடாம துரத்திக்கிட்டு போய்…
    மடக்கி பிடிச்சு செயினை வாங்கிட்டாரா?
    ஊகும்.. மாமூலை வாங்கிட்டார்!

    17.  அந்த  ஜெயிலிலே பணப்புழக்கம் அதிகம்னு எப்படி சொல்றீங்க!
    எல்லா செல்லிலேயும் ‘செல்லு’ சுத்திவருதே!

    18.  தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு சொன்னதும் வருத்தப்படாம ஏன் சிரிக்கிறீங்க?
    தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் இல்லாத இடம் எது? இன்னும் எத்தனைநாளைக்கு இந்த டயலாக்கை சொல்லிக்கிட்டிருப்பீங்க!

    19.  அந்த பேச்சாளர் ஏன்  இன்னிக்கு பேச மறுக்கிறார்?
    இன்னோவா வரும்னு பேசி பேசி இன்னிக்கு வாயெல்லாம் நோவா ஆயிருச்சாம்!

    20.  மன்னருக்கு படை என்றாலே அலர்ஜிதான்!
    ஓகோ! அதனால் அடிக்கடி முதுகை சொறிஞ்சிக்கிறாரோ!


    21.மன்னர் வாரிக் வாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறாறா? யாருக்கு!
    வேறு யாருக்கு ராணியாருக்குத்தான் தலைவாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறார்!

    22. எலக்‌ஷன் ட்ரெண்ட் மாறிப்போச்சா எப்படி?
      அப்போ வாக்குறுதியை  வாரி இறைப்பாங்க! இப்ப நோட்டை வாரி இறைக்கிறாங்க...

     நன்றி 
    அன்பன் 
    சிவா...
     

    வாக்காளர்- பயோ(யங்கர)டேட்டா

    பெயர்-----------------------------------------------------வாக்காளர்

    தொழில்--------------------------------------------------தேர்தலில் ஓட்டுப் போடுவது.

    பலம்-------------------------------------------------------வாக்குரிமை

    பலவீனம்-------------------------------------------------நியாபக மறதி

    மறந்தது---------------------------------------------------போனமுறை வாக்களித்தது

    மறக்காதது-----------------------------------------------மாற்றி மாற்றி குத்துவது

    சமீபத்திய மகிழ்ச்சி----------------------------------ஓட்டுக்கு பணம் கிடைப்பது

    சமீபத்திய எரிச்சல்------------------------------------நோட்டா காசு கொடுக்காதது

    பிடித்தது-------------------------------------------------கூட்டம் கூட கொடுக்கப்படும் சரக்கு

    பிடிக்காதது---------------------------------------------தேர்தல் நாளில் டாஸ்மாக் மூடல்

    ரசிப்பது-----------------------------------------------------தலைவர்களின் பேச்சை

    வெறுப்பது-------------------------------------------------நடிகைகள் இல்லாத பிரச்சாரம்


    நன்றி 
    அன்பன் 
    சிவா...





    Saturday, April 19, 2014

    காதுல பூ



    ‘‘பொன்’னு வக்கிற இடத்துல பூ வைக்கலாம்னு சொன்னது தப்பாப்போச்சு “
    “ஏன் என்ன ஆச்சு?”
    “மாமனார் எனக்கு மோதிரத்திற்கு பதிலா கையிலயும் பொண்ணுக்கு கம்மலுக்கு பதிலா காதிலயும் பூவையும் சுற்றுவிட்டுட்டார் “
    (விக்கிற வெலையியல பவுனு எங்க வாங்கமுடியுது ! )
    "பையன எருமைமாடு னு திட்டினது தப்பாப்போச்சு"
    "ஏன்?" 

    "அடிக்கடி வெளியில போயிடுறான் ஏன்டா னு கேட்டாக்கா, நீங்க தானே எருமைமாடு னு சொல்றீங்க அதான் மேயப்போனேன் னு சொல்றான்"
     ( திட்டுவதை கூட அவங்களுக்கு சாதகமா மாத்திடராங்கப்பா )

    கடியோ.... கடி !

    "நரைத்த தலைமுடிகாரர்களுக்கு பிடித்த காய் எது?"

    "வெண்'டை'க்காய் "
                                                  .....000.....



    "அரசியல்வாதிகளுக்கு பிடிச்ச உணவு எது?"

    " 'ஓட்ஸ்' உணவுகள் தான் "


                                                 .....000.....

    "இலங்கை காரர்களுக்கு பிடித்த காய் எது ?"

    "புட'லங்கா'ய் "

                                                .....000.....


    "நகைக்கடைக்காரருக்கு பிடிச்ச காய் எது?"

    " 'கேரட்' தான்"

                                               .....000......

     "பைண்டிங் கடைக்காரருக்கு பிடித்த விலங்கு எது ?"

    " 'ஒட்ட' 'கம்'"

                                            .....000.....

    "ஆசிரியர்களுக்கு பிடித்த தானியம் எது ? "

    " கம்பு "

    சோறா? சப்பாத்தியா ?

     

     





    ஒருநாள் தொடர்வண்டியில் ஒரு தமிழரும் சர்தார்ஜி ஒருவரும் பயணம் செய்தார்கள். தமிழர் பார்க்க கொஞ்சம் நோஞ்சானாக இருந்தார். ஒல்லியான உடல்வாகு. சர்தார்ஜி வாட்டசாட்டமாக இருந்தார். அவருக்கு தமிழரைக்கண்டதும் அவரை வெறுப்பேற்ற வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது.

    சர்தார்ஜி;- “தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள்?
    தமிழர்;- “சாதம் “
    சர்தார்ஜி:- “அதான் இப்படி இருக்கிறீர்கள், சப்பாத்தி சாப்பிட்டுப்பாருங்கள் என்னைமாதிரி வலுவாக இருப்பீர்கள் “
    தமிழர் :- “சரிங்க
    தமிழர் அவரது பெட்டியை கடினப்பட்டு தூக்கி வைக்கிறார். சர்தார்ஜி அதனை மிக எளிதாக நகர்த்தி வைத்துவிட்டு அதுக்குத்தான் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்றேன் என்று கூறி தன் கையை மடக்கி புஜபலத்தை காண்பித்து நக்கலாக சிரித்தான். இப்படியாக பலமுறை தமிழரை  சோறு சாப்பிடுபவன் என்று மட்டம் தட்டி பேசிக்கொண்டிருந்தார். தமிழருக்கு எரிச்சலாக இருந்தது.
    தமிழர் ஆபத்து நேரங்களில் உடனடியாக தொடர்வண்டியை நிறுத்தும் ‘அவசரச்சங்கிலி அருகே சென்று அதனை இழுப்பதுபோல் பாசாங்கு செய்தார். இதனை கவனித்த சர்தார்ஜி அதனை வேகமாக இழுத்து ‘அதுக்குத்தான் சப்பாத்தி சாப்பிடனும் அப்படினுச்சொன்னேன் என்றார்.
    தொடர்வண்டி நின்று விட்டது. அனைத்து அதிகாரிகளும் வந்து சங்கிலியை யார் இழுத்தது இழுக்கப்பட்டதற்காண காரணம் கேட்க....அனைவரும் சர்த்தார்ஜி தான் இழுத்தார் எனச்சொல்ல....
    சர்தார்ஜி முழித்துக்கொண்டிருக்க அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    தமிழர் மெதுவாக சர்தார்ஜியிடம் சொன்னார் “இதுக்குத்தான் சோறு சாப்பிடணும் அப்படினு சொல்றது என கூறிவிட்டு வேகமாக சென்று விட்டார்