Friday, August 13, 2021
நிலம் பொது..உரைநடை உலகம்..8
Friday, June 11, 2021
புதிய பாரவை..புதிய கோணம்..வலையொலி..
புதிய பார்வை புதிய கோணம் இணைய வழி வானொலி பதிவை கேட்டு மகிழ அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்....
மிக்க அன்போடு
சேலம்.ஆ.சிவா...
https://anchor.fm/sivaramakrishnan7/episodes/8-e12kilr
வலையொலி கேட்க பின் வரும் வழிமுறையை பின்பற்றவும்...
Wednesday, May 05, 2021
போட்டோ Graph ...ஒரு பார்வை...3
Monday, May 03, 2021
போட்டோ Graph ஒரு பார்வை..2
Friday, April 16, 2021
தொழில்நுட்பம் பழகுவோம்..1
வணக்கம் உறவுகளே & நட்புகளே...
நேற்று (15-04-21) சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தில்
Effectieness of free open source software ( FOSS ) in Social science . என்ற தலைப்பில் ஆராய்ச்சிக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்பளுக்கு உதவக்கூடிய open source ஆன Learning app.org ல் ஒரு பிரிவான Time Line ( கால வரிசை) என்ற செயலியின் செயல் விளக்க காணொளி காட்சிக்கான படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்த அரிய வாய்ப்பை நல்கிய சேலம் ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களுக்கும் மற்றும் விரிவுரையாளர் திருமதி.தனம்மாள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்
என்றும் கல்விப்பணியில்
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்
சேலம் ஊரகம்.
Friday, February 19, 2021
கணிதம் கற்கண்டு- நுண் காணொளிகள்
சேலம்: 5ஆம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நுண் காணொளிகள் தயாரிக்கும் பணிமனை இன்று (பிப். 17) உத்தமசோழபுரத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆசிரியர்களின் புது முயற்சியாக 5ஆம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த மைக்ரோ வீடியோஸ் எனப்படும் நுண் காணொளிகள் தயாரிக்கும் பணிமனை இன்று சேலம் உத்தமசோழபுரத்தில் நடைபெற்றது.
மாணவர்களின் கணிதம் கற்கும் திறனை மேம்படுத்தவும், கணிதப் பாடத்தை புரிந்துகொண்டு பயில்வதற்காகவும் நுண் காணொளிகள் தயாரிக்கப்படுகின்றன. கணித ஆசிரியர்களைக் கொண்டு இப்பணிமனை நடைபெற்றது. இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான காணொளி பதிவுகளாக இவை உருவாக்கப்படயிருக்கின்றன.
அனிமேஷன் மூலம் இப்பதிவுகள் உருவாக்கப்படவுள்ளதால் மாணவர்களின் புரிதல் அதிகரிக்கும். கணிதப் பாடத்தின் கடினமான பகுதிகளைக் கூட இந்த காணொளிகள் மூலம் எளிதில் புரிய வைக்க முடியும். வகுப்பறையில் பயில்வதை சமூக சூழ்நிலைகளில் பயன்படுத்தவும் ஏதுவாக அமையும்.
இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிர்ச்சி நிறுவன முதல்வர். செல்வம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மஹாலக்ஷ்மி, சேலம், வீரபாண்டி, பகுதிகளிலிருந்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்..
நன்றி சேலம் ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் அவர்பள் மற்றும் கணித துறை விரிவுரையாளர்கள்...
Saturday, January 23, 2021
தொழில்நுட்பம் பழகுவோம்-1
வணக்கம் ஆசிரியர் பெருமக்களே ! இந்த பேரிடர் சூழலில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழங்கிய ஆசிரியர் திறன் மேம் பாட்டு பயிற்சியின் டிஜிட்டல் அசிஸ்டன்ட் ( Digital Assessesment Tools) என்ற தலைப்பில் சேலம் மாவட்ட ஆசிரியர்களுக்கு சுமார் 1980 ஆசிரியர்களுக்கு நேரடியாக( இணைய வழியாக) பயிற்சி அளித்த தருணம் மிக்க மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. ஆசிரிய தோழமைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குறியது. அந்த பயிற்சியில் எட்டு வகையான மதிப்பீட்டு மென்பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டது . இந்த மென்பொருளை பல பள்ளிகளில் குறிப்பாக கிட்டதட்ட 1100 பள்ளிகள் செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.. என்பது மிகுந்த உற்சாகம் தரும் செய்தி.
இந்த மென்பொருளை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையை தொழில்நுட்ப வகுப்பறையாகவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தலாம். குறிப்பாக ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்க பயன்படும் மென் பொருட்கள் இவை. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கும் முதல்வர் மற்றும் விரிவுரையாளர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். எனது
Quizizz என்ற மென் பொருளின் video tutorial link லிங்க் இங்கே இணைத்துள்ளேன் ஆர்வமுள்ள ஆசிரிய தோழமைகள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
நன்றி!
QUIZZ
https://youtu.be/lnt5YwhKE68
என்றும் கல்வி பணியில்..
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம் ஊரகம்.
Saturday, July 18, 2020
தமிழில் குரல் தட்டச்சு - செய்ய எளிய வழி...
Monday, June 22, 2020
லேப்டாப் வாங்குபவர் கவனத்துக்கு....
Wednesday, June 10, 2020
Saturday, May 27, 2017
ஆன்ராய்டு போனில் வளைதளம் உருவாக்குதல்...
ஸ்மார்ட்போன் வழியாக இலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி.?
ஸ்மார்ட்போன் வழியாக இலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி.?
உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஒரு முழுமையான வலைத்தளத்தை உருவாக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா.? ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு என இரண்டு இயங்குதளங்களுக்குமே ஒரு குறிப்பிட்ட ஆப் பயன்படுத்தி15 நிமிடங்களுக்கும் குறுகிய நேர இடைவெளியில் இதை செய்ய முடியும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா.?
அக்ட்மின் வெப்சைட் பில்டர் ஆப் (Akmin Website Builder app) ஆனது உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கக்கூடிய ஒரு இலவசப் பயன்பாடாகும். நீங்கள் இந்த பயன்பாட்டைப் கொண்டு ஒரு தொழில்முறை தேடு வலைத்தளத்தை உருவாக்க முடியும். இந்த பயன்பாடானது, நீங்கள் உருவாக்கிய இணையதளத்திற்கு வடிவங்கள், புகைப்பட ஆல்பம், ஷாப்பிங் கார்ட் போன்றவை போன்ற பயனுள்ள அம்சங்களைச் சேர்ப்பதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது.
குறிப்பாக, இந்த தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சகாப்தத்தில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஹோபோன் அல்லது ஐபோன் பயன்படுத்தி ஒரு முழுமையான செயல்பாட்டு வலைத்தளம் உருவாக்குவது என்பது சாத்தியமாகவே உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த இலவச பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து வலைத்தளத்தை உருவாக்கம் செய்ய வேண்டியது மட்டும் தான்.
இந்த அக்மின் வலைத்தள பில்டர் பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கும் வலைத்தளம் எந்த சாதனத்திலும் நன்றாக வேலை செய்யும், அதாவது இது ஒரு மடிக்கணினி, டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் என எதிலும் சிறப்பாக வேலை செய்யும்.
அக்மின் வலைத்தள பில்டர் பயன்பாடானது மிகவும் எளிமையான ஒரு ஆப் ஆகும். இதன் மூலம் சிறிய வியாபார உரிமையாளர்கள் தங்கள் வியாபாரத்திற்கான ஒரு வலைத்தளத்தை அனைத்து பயனுள்ள அம்சங்களுடனும் உருவாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்க முடியும்.
மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த தளத்தில் ஒரு ஷாப்பிங் கார்ட் வண்டியைச் சேர்ப்பதும் சாத்தியம் தான். இந்த அம்சம் குறிப்பாக சிறிய அல்லது வீட்டு வணிக உரிமையாளர்களுக்கு எந்த இணைய வடிவமைப்பாளர் அல்லது ஒரு நிறுவனத்தின் உதவும் இல்லாமல் சொந்த வலைத்தளம் கிடைக்கும் வாய்ப்பு அதிகப்படுத்தும்.
இந்த பயன்பாட்டின் சிறப்பம்சமாக எந்தவொரு குறியீடும் இல்லாமல் ஒரு வலைத்தளம் உருவாக்க முடியும் என்பது தான். நீங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும், டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்கவும், அதேபோல தனிப்பயனாக்கவும், வலைப்பக்கத்திற்கான உள்ளடக்கத்தையும் படங்களையும் சேர்க்கலாம், பின்னர் நிமிடங்களில் உங்கள் வலைத்தளத்தை வெளியிடவும்.
இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஐட்யூன்ஸ் ஸ்டோர் மூலம் முறையே உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் இதைwww.akmin.net என்ற வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்குவதன் மூலம் நீங்கள் உங்கள் பிசி அல்லது லேப்டாப்பில் இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்
நன்றி.....
Dr.Sathish Ph.D at 14:59
Thursday, March 02, 2017
தொடு திரை என்ற மாயக்கண்ணாடி..
"தொடு திரை தொழில்நுட்பம்"
இந்த கட்டுரையை படித்து கொண்டிருபவர்களில் 99 சதம் பேர் டச் ஸ்க்ரீன் எனப்படும் தொடுதிரை தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவராக தான் இருப்பார்கள்.
அந்த தொழில் நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பதை சுருக்கமாக இன்று பார்க்கலாம்.
இந்த டச் ஸ்க்ரீன் ஒரு நவீன தொழில் நுட்பம் என நீங்கள் நம்பினாலும் அது 1960 இலேயே E. A ஜான்சன் என்பவரால் கண்டுபிடிக்க பட்டு விட்டது .
இன்னொரு ஆச்சர்யம் முதலில் கண்டுபிடிக்க பட்டதே capasitive டைப் டச் ஸ்க்ரீன் தான் .இதை ஏன் ஆச்சர்யம் என்கிறேன் என்றால் இதற்கு பின்னால் கண்டுபிடிக்க பட்ட resistive டைப்பை விட இன்று நாம் அட்வான்ஸ் ஆக நினைப்பது கேபாஸிடன்ஸ் டைப்பை தான்.(தீ பெட்டிக்கு முன்னாடியே லைட்டர் கண்டுபிடிக்க பட்டுவிட்டதை போல)
பிற்காலத்தில் 1971 இல் டாக்டர் சாம் என்பவரால் இது வளர்ச்சி அடைந்தது ஒரு மைல் கல்லாக அமைந்தது. அப்போது இது ஒரு டச் சென்சார் என்ற அளவில் தான் இருந்தது அப்போது அதன் பெயர் ஈலோக்ராப்..
பிறகு 1974 ஈலாக்ராபிக் என்ற கம்பெனி உடன் இனைந்து முதல் முதலில் ஒரு ஒழுங்கான ஒளி ஊடுருவ கூடிய பரப்பை கொண்ட டச் ஸ்க்ரீனை உண்டாக்கினார்.
1977 இல் அந்த கம்பனி அதை மேலும் வளர்த்து இன்று வரை பயன்பாட்டில் உள்ள ரெசிஸ்டிவ் டச் கான உரிமம் பெற்று கொண்டது.
சரி இனி அது வேலை செய்யும் விதம் பற்றி பாப்போம் ..
இதில் முன்பே சொன்னது போல இரண்டு வகை உண்டு... ஒன்று ரெசிஸ்டிவ் இன்னொன்று கெபாசிடிவ்..
இதில் ரெசிஸ்டிவ் என்பதில் கவனித்து பார்த்தால் இரண்டு அடுக்கு தாள் ஒன்றை ஒன்று தொடாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது தெரியும்.
இதில் மேல் அடுக்கு வளையும் தன்மை கொண்ட பாலிதீன் பொருளாலும் கீழ் பகுதி கண்ணடியாலும் செய்ய பட்டிருக்கும் இரண்டுமே இண்டியம் டின் ஆக்சைட் பூச்சு பூச பட்டிருக்கும் இந்த பூச்சு மின்சாரத்தை கடத்த கூடியது..
இப்போது நாம் மேல் அடுக்கில் அழுத்தம் கொடுத்து தொடும் போது தொட பட்ட புள்ளியில் மின் சுற்று பூர்த்தி அடைகிறது எனவே அந்த தகவல் தலைமை பிராசசருக்கு கடத்த பட்டு அது தொட பட்ட இடம் உணர்ந்து அதற்கான வேலை நடக்கிறது.
பத்துக்கு பத்து வரிசையில் 100 மாணவர்களை உட்கார வைத்து விட்டு குறிப்பிட்ட மாணவன் பெயர் சொன்னால் அவன் கையை உயர்த்துவதை வைத்து அவன் இருப்பிடத்தை தெரிந்து கொள்வதை போல என்று வைத்து கொள்ளுங்கள்.
இந்த வகையில் இரண்டு நன்மைகள்..
1) விலை குறைவு..
2)நீங்கள் விரல் தான் என்று இல்லை எதை கொண்டு தொட்டாலும் வேலை செய்யும் ..
இதில் தீமைகள் இரண்டு...
1) கெபாஸிடன்ஸ் வகை அளவு இதன் வாழ் நாள் இருப்பதில்லை
2) கெப்பாசிடன்ஸ் அளவு இது துல்லியம் அல்ல..
அடுத்து capacitance type touch ஐ பாப்போம்.
இதில் திரையில் எப்போதும் மிக சிறிய அளவில் மின்சாரம் பாய்ந்தது கொண்டு இருக்கும் நாம் தொடும் பொது தொட்ட இடத்தில மின்வீழ்ச்சி உண்டாகி தொட்ட இடம் கவனிக்க படுகிறது.
அந்த 10 கு 10 மாணவர் வரிசையில் இப்போது எல்லோருமே கையை தூக்கி கொண்டே இருக்க நீங்கள் அழைக்கும் மாணவன் மட்டும் கையை தாழ்த்துவது மூலம் அவன் இருப்பிடம் கவனிக்க படுவதாக நினைத்து கொள்ளுங்கள்...
இதன் நன்மை .. இது துள்ளியமானது.
தீமை.. மின்சாரத்தை கடத்தவல்ல விரல் அல்லது அது போன்ற பொருட்களால் மட்டும் தான் வேலை செய்யும்.
உண்மையில் டச் டெக்நாலஜி வெறும் இரண்டு வகை மட்டும் அல்ல..
Infrared touch technology
Surface acoustic wave technology
Optical touch technology..
இப்படி பல வகை படும் மேலும் மேலே நான் சொன்ன ரெசிஸ்டிவ் மற்றும் கேபாஸிடிவ் இரண்டுமே பாசிடிவ் மற்றும் நெகடிவ் என்ற இரண்டு உள் பிரிவுகள் கொண்டது.. என்றாலும்
நாம் அன்றாடம் தொட்டு தடவும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக விளக்கி இருக்கிறேன்
ஒரு கொசுறு செய்தி நம்ம ஊரில் அந்த காலத்தில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவும் அந்த செயல் இருக்கிறதே அது மூலையில் சில நரம்புகளை தூண்டி நன்றாக சிந்திக்க உதவுமாம் ..
இப்போது சமீபத்திய ஆய்வில் நிபுணர்கள் இந்த தலை முறை பிள்ளைகள் விரலை உரசி கொண்டு இருப்பதால் மூளை அதிகம் சிந்திக்க முடிவதாக கண்டு பிடித்து உள்ளனர்.
இனி அம்மா 'என்னடா எப்ப பார்த்தாலும் செல்லும் கையுமா இருக்க' என திட்டினால் ... "போம்மா நான் மூளையை வளர்த்துகிட்டு இருக்கன் "என சொல்லலாம்.
Saturday, January 07, 2017
SMARTPHONE அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்!
SMARTPHONE அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்!
ஸ்மார்ட்போன்
போன் அடிக்கடி சூடாகும் பிரச்னை உங்களில் பலருக்கும் இருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் டிஸ்ப்ளேவைத் தொட்டாலே கொதிக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, மொபைலை கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம். நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ மொபைலை பயன்படுத்த விரும்பினால் கூட, அதில் இருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசவுகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான போன்களில் இந்த போன் சூடாகும் பிரச்னை இருக்கின்றது.
நமது மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது. இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில்தான் மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன என்றாலும் கூட, மொபைலின் வேகமும், செயல்பாடும் இதனால் குறைவதை உணரலாம். உங்கள் போன் அதிகம் சூடாகிறது என்றால், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவைதான்.
மல்ட்டி டாஸ்க்கிங்:
இசை கேட்டுக்கொண்டே கேம்ஸ் விளையாடுவது, ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களை இயக்குவது போன்றவற்றால் போனின் செயல்பாடு அதிகமாக இருக்கும் போது, உங்கள் போன் புராசசர் வேகம் குறையும். போனின் வெப்பம் அதிகரிக்கும். அதுவும் உங்கள் போனில் இருப்பது குறைந்த திறனுள்ள ரேம் என்றால், இந்த பிரச்னையை தவிர்க்கவே முடியாது. எனவே 2 ஜி.பிக்கும் குறைவான ரேம் கொண்ட போன்களில் மல்ட்டிடாஸ்க்கிங்கை குறைப்பது நல்லது. பல நேரங்களில் ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் இயக்க வேண்டிய அவசியம் நிச்சயம் ஏற்படும். எனவே அதனைத் தவிர்க்க முடியாது என்றாலும், நேரத்தைக் குறைப்பதன் மூலம் போன் வெப்பமடைவதைத் தவிர்க்கலாம்.
ஆப்ஸ்
சார்ஜிங்:
உங்கள் போனை எப்போதுமே 100% பேட்டரியுடன் தான் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எனவே 80 முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே ஓகே. சார்ஜ் போடும் போது நாம் செய்யும் இன்னொரு தவறு, பேட்டரி ஃபுல் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே விட்டுவிடுவது. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான் பலரது பழக்கம். இந்த ஓவர் சார்ஜிங்கும், போன் சூடாக ஒரு காரணம்தான். போன் பேட்டரி அளவை 30% முதல் 90% வரை எப்போதும் வைத்திருப்பதே, பேட்டரியின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
போன் கவர்:
புது போன் வாங்கியதுமே, ஒரு ஃப்ளிப் கவர் வாங்கி மாட்டுவதுதான் ஊர் வழக்கம். அது போனின் பாதுகாப்பிற்கு நல்லதே! அதே சமயம், போனின் வெப்பம் குறையாமல் இருக்கவும் இவை ஒரு காரணமாக அமைகின்றன. நீண்ட நேரம் கேம் விளையாடும் போதோ, அல்லது இணையம் பயன்படுத்தும் போதோ மொபைல் அதிகம் சூடாகி விடும். அதுபோன்ற சமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுங்கள்.
மொபைல் பேட்டரி மற்றும் சார்ஜர்:
ஏதாவது பழுது ஏற்பட்டு மொபைல் போனின் பேட்டரியை மாற்றும் போது, எக்காரணம் கொண்டு போலியான அல்லது மலிவான பேட்டரிகளை வாங்கி மாட்டாதீர்கள். அது உங்கள் போனிற்கே ஆபத்தாக அமையலாம். போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும்.
மொபைல் சார்ஜர் விஷயத்திலும் இது பொருந்தும். உங்கள் மொபைல் போனோடு வந்த சார்ஜரை தவிர்த்து, வேறு ஏதேனும் தரமில்லாத சார்ஜர்களை பயன்படுத்துவதும் போனின் வெப்பத்திற்கு காரணம். USB கேபிளுக்கும் இது பொருந்தும்.
சுற்றுப்புற வெப்பநிலை:
உங்கள் மொபைல் ஏ.சி அறையில் இருக்கும் போது இருந்த வெப்பநிலைக்கும், வெளியே இருக்கும் போது இருக்கும் வெப்பநிலைக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கும். நமது சுற்றுப்புற வெப்பநிலையும் போனின் வெப்பத்திற்கு காரணம். எனவே வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றின் அருகே உங்கள் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்க்கலாம். நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் உங்கள் மொபைலை வைக்க வேண்டாம்.
வேண்டாத ஆப்ஸ்:
சில ஆப்ஸ்கள் உங்கள் போனின் ஜி.பி.எஸ், மெமரி, வைஃபை, டிஸ்ப்ளே, ஸ்பீக்கர் உள்ளிட்ட பல விஷயங்களை ஆக்டிவ்வாக வைத்திருக்கும். இதனால் அதிகம் மின்சக்தி வீணாவதோடு, போனின் வெப்பமும் அதிகமாகும். எனவே இதுபோன்ற ஆப்ஸ்களை தவிர்த்து விடுங்கள். ஆன்லைன் கேம்கள் பெரும்பாலும் இந்த ரகங்கள்தான். எனவே ரேம் குறைந்த போன்களில் கேம்களுக்கு தடை போட்டு விடுங்கள்.
வைஃபை, இணையம், ப்ளூடூத்:
வைஃபை, ப்ளூடூத்
அதிக நேரம் வைஃபை மூலம் அல்லது மொபைல் டேட்டா மூலம் டவுன்லோட் செய்வது போனை சூடாக்கும். எனவே சிறிய இடைவெளிகளுக்கு பிறகு டவுன்லோட் செய்யலாம். ப்ளூடூத் நீண்ட நேரம் ஆன்-ல் இருப்பதையும் தவிருங்கள்!
இது மட்டுமின்றி போன் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் போதே பயன்படுத்துவது, மொபைல் டிஸ்ப்ளே ஒளி அளவை அதிகம் வைப்பது, பேக்கிரவுண்ட் ஆப்ஸ் பயன்பாடுகள் போன்ற விஷயங்கள் அனைத்தும் மின்சக்தியை வீணாக்குபவை. இவற்றை முடிந்தளவு குறைத்தாலே அடிக்கடி போனை சார்ஜ் செய்ய அவசியமிருக்காது. எனவே உங்கள் பேட்டரியின் ஆயுள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
Saturday, July 23, 2016
லேப் டாப் வாங்கும் போது....
*லேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...*
தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வர முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.
SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
*Laptop Configuration & Processor*
Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும். எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ
Intel Core i7
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.
Intel® Core™ i7-640M Processor 2.80 GHz
அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.
*RAM*
அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).
*HARD DISK*
அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.
நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.
ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது. எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம். பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.
*DVD DRIVE*
நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
*GRAPHIC CARD*
பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும். நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று.2 அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.
இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது. இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.
இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.
ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள். போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.
*Operating System ( OS)*
விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும். இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.
Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு. இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.
Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.
அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள். இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.