Thursday, July 16, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

🍁  புதிய பார்வை  🍁

ஒரு ஊரில் 
ஒரு ஞானி 
இருந்தார். 

ஒருநாள் 
அவரிடம் 
ஒருவர் வந்து...

இறைவனின் 
புகழை 
தினமும் பாடி 
வருகிறேன்...

இறைவனை
நான் காண
முடியுமா ??? 
என்று கேட்டார்.

நீங்கள் 
சிறப்பாக 
செய்யுங்கள் 
இறைவனை 
நீங்கள்
காணலாம் 
என்றார் ஞானி.

ஒரு சில 
தினங்கள் 
கழித்து...

இன்னொருவர் 
வந்தார். 

ஞானியை
பார்த்து...

இறைவனுக்கு 
உகந்த 
நாட்களில் 
கோவிலுக்கு 
சென்று 
வழிபடுகிறேன்.
உபவாசம்
இருக்கிறேன்...

இறைவனை 
நான் காண
முடியுமா ???
என்று கேட்டார். 

சிறப்பாக 
செய்யுங்கள் 
இறைவனை 
நீங்கள் 
காணலாம் 
என்று...
 
சொல்லி 
அனுப்பினார் 
ஞானி.

சில தினங்கள் 
கழிந்தன.

மற்றொருவர் 
ஞானியிடம் 
வந்து...
 
இறைவனின் 
பெயரில் 
அன்னதானம் 
செய்கிறேன் 
ஏழைகளுக்கு 
உதவி 
செய்கிறேன்... 

இறைவனை
நான் காண 
முடியுமா ???
என்று கேட்டார்.

சிறப்பாக 
செய்யுங்கள் 
இறைவனை 
நீங்கள் 
காணலாம் 
என்று கூறினார் 
ஞானி. 

நாள்தோறும்
இவைகளை 
கவனித்து 
கொண்டிருந்த
ஒரு சீடன் 
குருவிடம்...

எல்லோரிடமும் 
இறைவனை 
காண முடியும் 
என்று சொல்லி 
அனுப்புகிறீர்கள். 

உண்மையில் 
இறைவனை 
காணும் 
வழிதான்
என்ன ??? 
என்று கேட்டார்.

ஞானி...
 
இந்த மூன்று 
பேருமே கேட்டது
சரிதான்.

இறைவனின் 
புகழை தினமும் 
மனமுருக 
பாடி வந்தால் 
இறைவனை 
காணலாம்.

இறைவனுக்கு 
உகந்த 
நாட்களில் 

மனமுருக
உபவாசம் 
இருந்தாலும்...

கோவிலுக்கு 
சென்று 
நெஞ்சுருக
வழிபட்டாலும்...

இறைவனை
காண முடியும்.

இறைவனின் 
பெயரில் 
அன்னதானம் 
செய்வதும்...

ஏழைகளுக்கு 
உதவி 
செய்வதும் 
இறைவனை 
காணும் 
வழிதான்.

ஆனால்...

ஊர் மெச்ச 
மக்கள் பாராட்ட 
செய்யும் எந்த 
செயலாலும்
இறைவனை
காண முடியாது.

மாறாக
எதையும்...

பாசத்துடன்
நேசத்துடன்
கருணையுடன்...

நெஞ்சுருக
இதயபூர்வமாக 
செய்யும்போது...

இறைவனை
நாம் உணர
முடியும்...

என்று 
பதிலளித்தார் 
ஞானி.

வாங்க... 

இறைவனை
உணர
முயற்சிகள் 
செய்யலாம் 

அன்புடன் 
இனிய
காலை 
வணக்கம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையான வரிகள்.,.