Saturday, October 31, 2020

வகுப்பறை தொழில்நுட்பம்-1

ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்...
வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்றலை எளிமையாக்க மன வரைபடம் வரை பயன்படும் ஆண்ராய்டு செயலி செயல் விளக்கம் (   Mindmap Tutorial ) video எனது Siva Mindmoulders Channel பதிவேற்றம் செய்து அதன்    Link அனுப்பி உள்ளேன். காணொளியை பார்த்து மறக்காமல் Subscription செய்ய அன்போடு வேண்டுகிறேன்..

என்றும் கல்விப் பணியில்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்.
https://youtu.be/SXEWFPvaYqo


Friday, October 30, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

ஒன்றைத் தொடங்கி 
விட்டாலே பாதி 
வேலை முடிந்த 
மாதிரி எதை 
செய்தாலும் 
உடனே செய் 
வெற்றியாளரின் தாரக... மந்திரம் இது 
காரியத்தை தள்ளிப் போடுவதை விட 
மோசமான செயல் 
வேறு எதுவும் 
இல்லை..

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள்
வேலையை கடினமாகி 
விடும் 
வேலையை தள்ளிப் 
போட்டு  சோம்பேறியாக இருப்பதுஉங்கள் 
கவலையை அதிகமாகிவிடும் பிறகு எந்த 
வேலைக்கும் நீங்கள் 
தகுதியற்றவர் என்று மற்றவர்கள் கூறும் 
நிலைக்கு ஆளாவீர்கள்..! இவற்றால் உங்களுடைய ஆற்றல்  பாலாகும்
நேரம் வீணாகும் ....

சிரமமான வேலை 
என்ற உணர்வுதான்
வேலையை தள்ளிப்போட செய்கிறது எளிதான வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் முதலில் கடினமான வேலையை 
செய்து முடியுங்கள்... வேலையை தள்ளிப்போடுவது  உங்கள் நற்பெயரை கெடுத்துவிடும் ...
நல்ல சந்தர்ப்பத்தை நாசமாக்கிவிடும் ...

இன்றைய பொழுதையும்
நாளைய பொழுதையும்
அடகு வைப்பவர்கள் ஒருபோதும் முன்னேற முடியாது 
அடுத்து என்ன.?
அடுத்து என்ன..?
என்று துடிப்போடு 
ஒடுபவர்களே முன்னேறிக் கொண்டே செல்கிறார்கள்...


வாங்க 
நாமும்
உடனே 
வேலை
செய்து 
முடிப்போம் ...
வாழ்வில்
வெற்றி 
பெறுவோம்...

அன்புடன்
 
இனிய 
காலை 
வணக்கம்

Tuesday, October 27, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..



மிக
உயர்ந்த
எண்ணம்
கொண்டவர்கள்...

எந்த 
சூழ்நிலையிலும்
அடக்கமாக
இருப்பர்.

அவதூறு 
சொற்களை
அள்ளி வீசுவது
கடுகு மனம்
கொண்டவர்கள்
இயல்பு.

ரூபாய்
நோட்டுகள்
சத்தம்
போடுவது
இல்லை.

சில்லறைகள்
சத்தம்
போடுவது
இயற்கைதானே.

'  இனிய உளவாக
   இன்னாத கூறல்
   கனியிருப்ப காய்
   கவர்ந்தற்று  '

இது
வள்ளுவனின்
வார்த்தைகள்.

வாங்க.

அன்பான
பண்பான
இனிப்பான
வார்த்தைகளை
பயன்படுத்த
முயற்சிகள்
செய்வோம்.

Monday, October 26, 2020

கலாம் விருது...

அப்துல்கலாம் ஐயாவின் பிறந்த நாளில் கவித்துறையில் சாதித்து வரும் ஆசிரிய பெருந்தகைகளுக்கு  தாய் உள்ளம் அறக்கட்டளை,கலாம் யுவி அறக்கட்டளை,ஓசூர் ரீச் மீடியா மற்றும் JCI சிப்காட் அமைப்பினரால் கலாம் அறிவு மாமணி விருது    வழங்கி  ஆசிரிய சமூகத்தை பெருமை படுத்தியமைக்கு
நன்றி...மிக்க மகிழ்ச்சி....

நன்றியுடன்
ஆ.சிவா...சேலம்.

Friday, October 23, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

வறுமையில் அடிபட்டவர்களுக்கு 
அதுவே
புகலிடம் 
மனம்
வாடியவர்களுக்கு 
அதுவே 
இளைப்பாறும் 
பூஞ்சோலை
அதன்
பெயர்
கனவுகள் ....

உங்கள் 
உடம்புக்கும் 
மனசுக்கும் 
வலிமை 
அளிக்கவல்லது... சுறுசுறுப்பைத் 
தரும் 
கனவுலகில் 
உங்களை 
நீங்களே 
புதுப்பித்துக் 
கொள்வீர்கள் 
கண்கவர் 
வண்ண 
ஓவியங்கள் 
காதுக்கு 
இனிய 
இசை 
வடிவங்கள் 
மனதில் 
பதியும் 
சிற்பங்கள்
உணர்வைத் 
தட்டியெழுப்பும்
கவிதைகள் ..
இவற்றுக்காக 
சில 
மணித்துளிகள்
உங்கள் 
வாழ்வில் 
ஒதுக்கியிருக்க 
மாட்டீர்களா ?...
இவையெல்லாம் 
கலைஞர்கள் 
கண்ட 
முதற்கனவு 
கனவின் 
படைப்பு 
என்பதை 
நீங்கள் 
அறிவீர்கள்..

வாங்க
கனவு
காணுவோம்
புதியவற்றை
படைத்து
சாதனை
நோக்கி
பயணிப்போம்


மிக்க அன்புடன்
இனிய
காலை
வணக்கம்....

Sunday, October 18, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

சிலர் மொட்டை 
மாடியில் மல்லாந்து 
படுத்தபடி ஆகாயக் 
கோட்டை கட்டி கொண்டிருப்பார்கள் 
நகரின் மையப்பகுதியில் மூன்று அடுக்கு 
மாளிகையில் வசிப்பது போலவும் எடுபிடிகள் 
இருப்பது போலவும் 
பல லட்சம் ரூபாய் 
காரில் பயணம் 
செய்வது போலவும் 
கனவுகள் ...

ஆகாயக் கோட்டைகள் உருவாக்கினால் அது பாட்டுக்கு மேலும் 
மேலும் எழுப்பிக் 
கொண்டே இருக்கும் 
கனவுக்கு கால்கள் 
இல்லை அதனால்
அது ஓடிகிட்டே
இருக்கும் ...

கனவு காண்பது
தவறா ...கண்டிப்பாக 
இல்லை அது 
ப்ளூ பிரிண்ட் 
மாதிரி காகிதத்தில்
வரை படித்திருந்தால் 
தானே கட்டடங்கள் உருவாகின்றன... அதனால்
கனவு காண்பது
என்றும் குற்றமான 
காரியம் அல்ல 
கனவோடு உழைப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஆகாயக் கோட்டை 
அசல் கோட்டையாக மாறிவிடும் ...

வாங்க
நாமும் 
நமது 
கனவை 
நினைவாக்க 
தினம்
உழைக்க
தொடங்குவோம்
வாழ்வில்
வெற்றியை
சுவைப்போம்
&&&&&&&&
 அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..
&&&&&&&&&

Thursday, October 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

சாக்ரடீஸ் 
ஒருமுறை தனது 
வீட்டுக்குக் கீழே
தனது நண்பருடன் 
பேசிக் கொண்டிருந்தார் 
அந்த வேளையில் 
அவரது மனைவி 
கீழே சாக்ரடீஸ்
நிற்பதை கவனிக்காது மாடியிலிருந்து குப்பையை கீழே கொட்டினார் 
அது சரியாக 
சாக்ரடீஸ் மீது 
விழுந்தது அப்புறம்
மாடியில் இருந்து 
தண்ணீரை கொட்டினாள் 
அது சாக்ரடீசை 
முழுமையாக நனைத்துவிட்டது இதைப் பார்த்து 
அதிர்ந்து போன 
நண்பர் என்ன 
இது உங்கள் 
மீது குப்பை 
மற்றும் தண்ணீரை 
கொட்டி விட்டு 
செல்கிறார் கோபமே இல்லாமல் பேசாமல் இருக்கிறீர்கள்.. என்று ஆத்திரத்துடன் கேட்டார் முதலில் இடி 
இடித்தது இப்போது 
மழை பெய்கிறது ..
இதற்கு போய் 
கோபப்பட்டு  என்ன ஆகப்போகுது என்று சமாதானமாக சொன்னார்..

 இந்த விஷயம்
சாக்ரடீசை எள்ளளவும் பாதிக்கவில்லை 
இப்படித்தான் நாமும் 
துன்பம் நம்மை 
எள்ளளவும் பாதிக்காத 
வாறு நடந்து 
கொள்ள வேண்டும் ...

வாங்க 
முயற்சி 
செய்வோம்
வாழ்வில் 
வெற்றி
பெறுவோம்.
&&&&&&
அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்..
&&&&&&

Sunday, October 11, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

முயல் ஒன்று 
தற்கொலை செய்து கொள்ளும் முடிவை 
எடுத்தது ...

என்ன பிரச்சனை 
அதற்கு பிரச்சனை 
மற்ற உயிரினங்களால்
தான் அது 
அழகாக  வேறு
இருக்கிறது துள்ளித் 
துள்ளி  குதிக்கிறது.. எல்லாவற்றையும் விட 
அதன் கறி 
ருசி மிக்கவாறு
இறைவன் படைத்துவிட்டான் 
முயல் கறி 
என்றால் அசைவ பிரியர்களுக்கு தனி சுவைதான் போங்க 
இதனால் முயலைப் 
பிடித்து கொடுத்தால் 
நல்ல காசு 
என்று வேடர் 
காட்டில் ஒருபக்கம்...

மற்றொரு திசையில் நாய்களின் தொந்தரவு ..

மூன்றாவது திசையை நோக்கினால் அங்கே 
புலி ஒன்று உரிமி கொண்டிருந்தது  
கடைசியாக நான்காவது 
திசை 
நோக்கி சென்றது  
அது 
தண்ணீர் நிரம்பிய 
ஏரி வெறுத்துப் 
போய் விட்டது
முயல்....

பயந்து பயந்து
வாழ வேண்டிய 
கட்டாயம் இந்த 
வாழ்க்கை தேவையா? தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஏரிக்கரைக்கு சென்றது ஏரிக்கரையில் உணவு தேடிக்கொண்டிருந்த தவளைகள் முயலை
கண்டு பயந்து
விசுக் விசுக்கென்று 
தண்ணீர் குதித்தன ...

 நம்மை பார்த்து 
கூட சில 
விலங்கினங்கள் பயப்படுகிறது என்ற 
எண்ணம் முயலுக்கு 
சிறிது தன்னம்பிக்கை 
துளிர்க்க வைத்ததால்
தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டது...


நாமும் இப்படித்தான் வலிமையானவர்களை
பார்த்து பயந்து
நம்பிக்கை இழக்கிறோம்...

நமக்கு சமமானவர்களையும்
வலிமையில் குறைந்தவர்களை பார்த்து நம்முடைய நம்பிக்கையை வளர்த்து வளமாக வாழலாம்
வாங்க....
அன்புடன்
ணண்ண
இனிய
காலை 
வணக்கம்...

Thursday, October 08, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

ஒருநாள் 
முல்லா 
நடுத்தெருவில் 
எதையோ 
தேடிக் கொண்டிருந்தார்
என்ன
தேடுகிறீர்கள் ?
என்று  
நண்பர் 
கேட்டார் சாவி
விழுந்து 
விட்டது 
தேடிக் 
கொண்டிருக்கிறேன் 
என்றார் முல்லா

நண்பரும் 
முல்லாவுக்கு 
உதவியாக 
சாவியை 
தேட ஆரம்பித்தார் 
ரொம்ப 
நேரமாக 
தேடியும் 
சாவி 
கிடைக்கவில்லை 
சாவியை 
இங்கே 
தான் போட்டீர்களா..?
என்று நண்பர் 
கேட்டார் 
இல்லை 
சாவியை 
வீட்டில் தான் 
போட்டேன் 
ஆனால் 
அங்கே 
இருட்டாக 
உள்ளது 
இங்கே தான் 
வெளிச்சமாக 
உள்ளது 
வெளிச்சத்தில் 
தேடினால் தானே 
பொருள் 
கிடைக்கும் 
என்றார் 
முல்லர் ...

ஆமாங்க
இது போல்
தான் நாமும் 
தேடவேண்டிய 
இடத்தில் 
தேடாமல் 
அல்லல் 
படுகிறோம் 
சரியான 
இடத்தை 
தேர்வு 
செய்து 
தேடுவோம் 
வாழ்வில் 
வெற்றி 
பெறுவோம் ..

அன்புடன்
இனிய 
காலை 
வணக்கம்

புதிய பார்வை...புதிய கோணம்..



பெர்னார்ட் ஷா 
மிக பெரிய
எழுத்தாளராக 
வேண்டுமென்று 
முடிவு செய்தார்.

சிறுகதைகள் 
எழுதி அதை 
பல பத்திரிக்கை 
அலுவலகங்களுக்கு 
அனுப்பினார். 

எல்லாக் 
கதைகளும் 
திரும்பி வந்தன. 

எத்தனை முறை 
தெரியுமா? 

ஒன்பது 
வருடங்கள்! 

ஆமாம்! 

ஒன்பது 
வருடங்களாக 
அவர் தொடர்ந்து, 
அனுப்பிக்கொண்டே 
இருந்தார். 

அந்த 
ஒன்பது 
வருடங்களில்...

ஒன்று கூட 
பிரசுரமாகவில்லை! 
 
‘ வெற்றியாளர்கள் 
  விடுவதில்லை, 
  விட்டு விடுபவர்கள் 
  வெற்றி  
  பெறுவதில்லை ’ 

என்னும் 
முதுமொழிக்கு ஏற்ப 
இறுதியில்...

அவர்
ஜெயித்தது
மட்டுமல்லாமல்...
 
ஆங்கில 
இலக்கிய உலகில்
முடிசூடா மன்னராக...

இன்றும் 
ஜொலித்து 
கொண்டு இருக்கிறார்.

'  நம்பிக்கை
   என்பது
   வேண்டும்
   நம் வாழ்வில்

   லட்சியம்
   நிச்சயம்
   வெல்லும்
   ஒரு நாளில்  '

என்னும்
கவிஞர்
பா.விஜய்யின்
வைர வரிகள்
உண்மைதானே.

வாங்க...

நாமும்
முயற்சிகள்
செய்யலாம்.

வெற்றிகளை
குவிக்கலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Monday, October 05, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

ஒரு முறை 
ஜனாதிபதி
ஆப்ரஹாம் லிங்கன் சிறைச்சாலைக்குச் 
சென்று அங்கிருந்த போர்க்கைதிகளை 
எல்லாம் சாப்பிட்டீர்களா தூங்கினார்கள் 
என்று நலம் 
விசாரித்தார் 
மிஸ்டர் லிங்கன் 
எதிரிகளோடு நடந்துகொள்ளும் முறை இதுவல்ல என்று 
அவருடைய 
செகரட்டரி 
கூறினார் 
அதைக்கேட்ட 
லிங்கன் 
உண்மைதான் 
மேடம் 
ஆனால் 
இப்போது 
அவர்களை 
நான் 
என் நண்பன் 
ஆகி விட்டேன் 
என்றார் எவ்வளவு 
அறிவார்ந்த 
வார்த்தைகள் 
கோபம் 
எதிரிகளை தான்
 உருவாக்கும் 
ஆனால் 
அன்பும் 
கருணையும் 
எதிரிகளையும் 
நண்பர்களாக்க விடும் 
வாங்க 
நாமும் 
நமது 
எதிரிகளை 
நண்பராக்கிக் 
கொள்வோம்....

அன்புடன்
 இனிய 
காலை 
வணக்கம்