Showing posts with label பொதுவியல்.. Show all posts
Showing posts with label பொதுவியல்.. Show all posts

Tuesday, September 03, 2024

மனிதரில் மாணிக்கம்..

ஒரு உண்மைக்கதை..!!

ஒருவர் தன்னிடமிருந்த அத்தனை செல்வங்களையும் மற்றவரிடம் எடுத்து கொடுத்துவிட்டு கட்டிய துணியுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்...

அப்போது அவர் எதிரில் உடுத்த உடை 
கூட இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன் அவரிடம் அய்யா ஏதாவது தர்மம் செய்ங்க சாமி என கேட்க..

சுற்றுமுற்றும் பார்க்கிறார்..
உடனே அவர் தன் இடுப்பில் கட்டி 
இருந்த விலை உயர்ந்த அந்த பட்டு 
வெள்ளி ஜரிகை வேட்டியை அவிழ்த்து சரிபாதியாக கிழித்தெடுத்து அவனிடம் 
ஒரு பாதியை கொடுத்துவிட்டு செல்கிறார்..

இவனும் அந்த ஜரிகை துணியை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைவீதிக்கு செல்கிறான்..

அங்கே பழைய ஜரிகை வியாபாரம் 
செய்யும் வணிகரிடம் அதை கொடுத்து ஏதாவது பணம் கேட்கிறான்.. 

வணிகரும்.. ஆஹா.. 
இது விலையுயர்ந்த ஜரிகை ஆச்சே.. 
சரி சரி.. இதை நான் வாங்கிக் கொள்கிறேன் என ஒப்புக்கொண்டவர்... ஆனால் இதன் இன்னொரு பாதியையும் கொண்டுவந்தால் நிறைய பணம் தருகிறேன் என சொல்லிவிட இவனும் ஆசை மிகுதியில் வந்த வழியே திரும்ப ஓடுகிறான்..

அங்கே அந்த பட்டுத்துணியை தானமாக அளித்தவர் ஒரு மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருக்க.. இவன் மெல்ல அவர் அருகில் சென்று பார்க்கிறான்..

அவர் தன் வேட்டியை பக்கத்தில் 
கழட்டி வைத்து விட்டு தியானம் 
செய்து கொண்டிருக்க.. 

இதை வாய்ப்பாக பயன்படுத்தி 
மெல்ல அதை எடுத்துக் கொண்டு ஓட எத்தனிக்கிறான்.. அந்த சமயம் பார்த்து 
கீழே கிடந்த முள் ஒன்று அவன் காலில் குத்த.. ஆ.. அம்மா என்று அலறுகிறான்..

அந்நேரம் பார்த்து தியானத்தில் 
இருந்து கண் விழித்து பார்த்தவர்.. 

அங்கே நிகழ்ந்ததை நினைத்து அடடா.. 
நாம் அந்த வேட்டி மீது வைத்திருந்த ஆசை அவனை திருடனாக மாற்றிவிட்டதே என மனதிற்குள் வருந்தினாராம்.. 

ஆஹா.. இது எப்பேர்ப்பட்ட மனநிலை.?

தான் ஒரு பொருள் மீது வைத்த பற்று 
அது இன்னொருவரை திருடனாக மாற்றி விட்டதே என அவர் நினைத்து வேதனை படுகிறார். 

அப்படி நினைத்தவர் தான்
துறவி 'மகாவீரர்'..

அந்த காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பாருங்கள்...

ஆனால்.. இன்றைய உலகில் எத்தனை பேர் இத்தகைய மனநிலையில் வாழ்கிறார்கள்..?

அவரவர்..
மனநிலைக்கே...
விட்டுவிடுவோம்...

நன்றி 
பகிர்வு பதிவு..

Tuesday, March 30, 2021

புதிய பார்வை..புதிய கோணம்...

கவர்ச்சியாக
பேசத்தெரியாதவரும் 
இனிய 
பண்புகள் 
இல்லாதவரும் 
புகழ் 
அடைவது 
என்பது 
முடியாத 
காரியம் ...!


பெண்களுக்காக 
கதவை 
திறந்து 
விடுவதும் 
அவர்கள் 
உள்ளே
வரும்
போது 
எழுந்து 
நிற்பதும் 
அவர்கள் 
அருகில் 
இருக்கும் 
போது 
புகை 
பிடித்தலை 
தவிப்பதும்
 இப்படி 
சின்ன 
சின்னதாய் 
பண்பாட்டை 
வெளிப்படுத்தும் 
செய்திகள் 
பல 
பெண்களிடம் 
மரியாதையாய் 
நடந்து 
கொண்டதால் 
எளிதாக 
நற்பெயர் 
பெற்று 
விடமுடியும் ....!


உங்களிடம் 
உண்மை 
இருக்க
வேண்டும் 
நேர்மை 
இருக்க 
வேண்டும் 
நீங்கள் 
முகமூடி 
அணிந்து 
இருந்தாள் 
அதற்குள் 
ஊடுருவி 
பார்க்க 
மற்றவர்களால் 
முடியும் 
அவர்கள் 
போலிகளை
எளிதாக
அடையாளம் 
கண்டு 
கொள்வார்கள்...!

வாங்க
முகமூடி
இல்லாமல்
நிஜ
முகத்தோடு
வாழ்கையை
வாழ்ந்து
மகிழ்வோம்..

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்...

Tuesday, September 29, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

ஒரு இலையும் மண்ணாங்கட்டியும் 
ஒன்றை ஒன்று 
தீவிரமாக காதலித்தன எத்தனை பெரிய 
துயரம் ஆபத்து 
வந்தாலும் ஒருவரை 
ஒருவர் பிரிய 
கூடாது என்றும் ஒருவருக்கொருவர் துணையாக 
இருக்க வேண்டும் 
என்றும் அவை 
தீர்மானித்துக் கொண்டன இந்நிலையில் ஒருநாள் பெரும் சூறைக்காற்று 
வீசியது காற்றில் 
இலை அடித்து 
செல்லாமல் இருக்க 
வேண்டும் என்பதற்காக 
அதன் மீது 
மண்ணாங்கட்டி ஏறி 
அமர்ந்து காப்பாற்றியது...

அதேபோல் இன்னொரு 
நாள் மழை 
பெய்ய தொடங்கியது தண்ணீரில் தனது அன்புக்குரிய மண்ணாங்கட்டி கரைந்து போய் 
விடக்கூடாது என்று 
நினைத்த இலை 
அதன் மீது 
குடை போல 
இருந்தது காப்பாற்றியது...

ஆமாங்க 
இதுதான்
வாழ்வின்
அர்த்தம்..
நாமும்
இதை
பின்பற்ற
முயற்சி
செய்வோமே...!

&&&&&&&
அன்புடன்
இனிய
காலை 
வணக்கம்
&&&&&&&&&

Sunday, August 30, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



குருவிடம்
ஒருவர்...

'  தன்னை 
  எல்லோரும் 
  திட்டிக் கொண்டே
  இருக்கிறார்கள்
  புறம் கூறிகொண்டு
  இருக்கிறார்கள்
  அதனால் என்
  வளர்ச்சி பாழாகிறது
  மன அமைதியும்
  கெடுகிறது '

என்று
புலம்பி தள்ளினார்.

' வாழ்வில்
  வளர்ச்சி 
  பெறவும்
  மன அமைதி 
  கொள்ளவும்
  என்ன வழி ??? '

என்று 
கேட்டார்.

'  நீ 
  கழுதையா ?
  எருமையா ?
  குதிரையா ?

  என்பதை 
  பொருத்து...
 
  உன் 
  வளர்ச்சியும்
  மன அமைதியும்
  இருக்கும் '

என்று 
குரு  கூறினார்.

' ஒன்றும் 
  புரியவில்லை '

என்றார் 
இவர்.

' கழுதையை 
  ஒரு தட்டு 
  தட்டினால்...

  பின்னால் 
  எட்டி உதைக்கும். 

  எருமையை 
  ஒரு தட்டு 
  தட்டினால்...

  கொஞ்சமும்
  கண்டு கொள்ளாது.

  குதிரையை 
  ஒரு தட்டு 
  தட்டினால்...

  வேகமாக 
  ஓட தொடங்கும்.

  அதேபோல...

  நம்மை
  யாராவது
  திட்டினால்...

  சரிக்கு சமமாக 
  சண்டைக்கு போவது
  கழுதையை போல.

  இவர்களுக்கு 
  வளர்ச்சி என்பதே 
  இருக்காது.

  வீழ்ச்சி 
  என்பதாகத்தான் 
  இருக்கும்.

  நம்மை 
  யாராவது 
  திட்டினால்...

  கண்டு
  கொள்ளாமல்
  இருப்பது
  எருமையை
  போல...

  இவர்களுக்கு 
  வாழ்க்கை 
  வெறுமையாக 
  இருக்கும்.

  வளர்ச்சி 
  ஆமை வேகத்தில்
  இருக்கும்.

  நம்மை
  யாராவது
  திட்டினால்..

  அதை 
  வளர்ச்சிக்கான
  வாய்ப்பாக 
  மாற்றிக்கொண்டு...

  எதையும்
  பொருட்படுத்தாமல்...

  குதிரையை போல 
  ஓடிக்கொண்டே 
  இருந்தால்...

  இவர்களின்
  வாழ்வில் 
  விரைவான 
  வளர்ச்சியும்...

  வளமான 
  வாழ்க்கையும்...

  மன 
  அமைதியும்
  கிடைக்கும் '

என்று 
கூறினார் குரு. 

' உன்னை
  பற்றி யாரு 

  அட
  என்ன 
  சொன்னால் 
  என்ன

  இந்த 
  காதில் வாங்கி 

  அதை அந்த 
  காதில் தள்ளு '

வரிகளின் படி
வாழ்ந்தோம் 
எனில்...

வெற்றியும்
மகிழ்ச்சியும்
நமது காலடியில்
விழத்தொடங்கும்.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

முன்னேற
தொடங்கலாம்.

அன்புடன் 
இனிய
காலை 
வணக்கம்.

நன்றி
முனைவர்.சுந்தரமூர்த்தி