Saturday, July 19, 2014

எதிர்பார்ப்பு (சிறிய கவிதை)



வாசமுடன்
மொட்டொன்று மலர்ந்து
மலராகியது
சூடுவோர் இன்மையால்
பிறவிப்பயன் பெறாது
உலர்ந்து
உதிர்ந்து
மீண்டும் வளர்ந்து
மொட்டாய் நிற்கிறது
எதிர்பார்ப்புடன்

Thursday, July 03, 2014

நம் பூமித் தாயைக் காப்பாற்ற,

'உலகத்தைக் காப்பாற்றுவது மிகப் பெரிய வேலை. ஆனால், நாம் நமது கடமைகளைச் சரியாகச் செய்தால், அந்த வேலை மிகவும் எளிது! மரங்கள், நிலங்கள், மழை ஆகியவை 'அதிகமாவதற்கு உழையுங்கள்' அதைவிட முக்கியமாகக் காகிதப் பயன்பாடு, வாகனப் பயன்பாடு, மின் சக்திப் பயன்பாடு ஆகியவை 'குறைவதற்காக உழையுங்கள்'
இந்த இரண்டு கடமைகளில் எதைத் தேர்வு செய்வது? முடிவு செய்யும் உரிமை நம் கைகளில்.