Tuesday, February 28, 2017

தாய் மாமா உறவின் அருமை....

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால்
உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான்.
பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய்
என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது
அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான்
சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா
வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா
என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான
உறவு என்றால் அது தாய்மாமா தான்.
எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே
வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.
உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா,
அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது
தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு
வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித
முன் தொடுப்பும் இல்லாது வருவது.
தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப்
உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை
எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக
மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா
வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..
தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல
கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும்
தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது
குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது
வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும்
தாய்மாமனே முன்னிற்பான்.
தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக
உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு
அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே
போகலாம்.
தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை
அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக
தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக
வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால்
என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான்.
எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ
அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.
சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின்
மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான்
கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால்
அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய்
மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை
தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை
கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன்
அல்லவா?
உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று
அடித்துச் சொல்லலாம்.
ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை
காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும்
அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம்
தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.
குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து
மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன
உண்மை...
நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து
இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு
விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட
நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு
கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த
தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க
அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது
அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம்
தெரிந்தது.
நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம்
நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம்
தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம்
குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க
வேண்டும் என்பது என் ஆவா.

பச்சை - சிறுகதை

⛳⛳⛳⛳⛳⛳⛳⛳
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.

அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.

பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார்.

அவர் பணக்காரனை வந்து பார்த்தார்.

பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.

அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.

தலைவலி குணமாகி விட்டது.

சன்னியாசி கூறியது சரிதான்.

உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.

வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது.

ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே!

நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான்.

அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.
சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார்.

வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது.

காரணம் கேட்டார்.

அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.

சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.

பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி.

வணங்கி அவரை உபசரித்தான்.

“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு.

“நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி.

“பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.

ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும்.

உன் பணமும் வீணாகி இராது.

உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.

நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.

அது சாத்தியமல்ல.

மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது.

Monday, February 27, 2017

குழந்தை வளர்ப்பு- விகடன்.

குழந்தை வளர்ப்பின் 10 அவசிய வழிகாட்டுதல்கள்!
விகடன் 27 Feb. 2017 21:54
இன்றைய குழந்தைகளுக்கு 'அட்வைஸ்' என்பதே ஆகாத விஷயமாக இருக்கிறது. முந்தைய தலைமுறையினர், அடுத்த பத்தாண்டுகளுக்கு எப்படி வாழவேண்டும் என்பதைக் குறிக்கோள் அமைத்து வாழ்க்கை நடத்தியவர்கள். இன்றைய குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திட்டம் அமைகிறது. பிரச்னைகள் வந்தால், 'பார்த்துக்கொள்கிறேன்' என தைரியமாகச் சொல்ல முடிகிறது. புதிதாக வந்து இறங்கும் டெக்னாலஜி எல்லாம் ஓரிரு நாட்களில் அப்டேட் இல்லாததாகிவிடுகிறது. அடுத்த வருஷம் என்ன நடக்கும் என்றே சொல்ல முடிவதில்லை.
எதிலும் பர்ஃபெக்ட் பார்க்கவே கூடாது. எனக்கு பிடித்ததைச் செய்வேன். என்னால் முடிந்ததைச் செய்வேன் என்ற ஐடியாலஜியில் கண்கட்டவைக்கின்றனர்.
அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கும்போதே காதைப் பொத்திக்கொண்டு ஓட்டம் எடுக்கின்றனர். 'எதிர்காலம் பற்றிய எந்த இலக்குமே இல்லாமல் இருக்கானே' என்ற பதைபதைப்பு பெற்றோர் மனதில் உருவாகக் காரணமாக இருக்கும் குழந்தைகளை எப்படி வளர்த்தெடுக்கலாம் என்பதைச் சொல்கிறார், சேலம் சரவணக்குமார்.
* குழந்தைகளிடம் வார்த்தையால் பேசக் கூடாது. செயலால் பேச வேண்டும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகள் எழ வேண்டும் எனில், அதற்கு முன் பெற்றோர் எழுவதை வழக்கப்படுத்தவும்.
* எந்த ஒரு இடத்துக்குச் செல்லும்போதும் பெற்றோர் குறித்த நேரத்துக்குச் செல்வது நேரமேலாண்மையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்.
* தன் பொருளாதார நிலை, குடும்ப நிலை என்ன, பெற்றோர் தங்களது கனவு என்ன, இன்னும் ஐந்து ஆண்டில் நான் என்னவாகப்போகிறேன். அதற்காக நான் இப்போது எப்படி உழைக்கிறேன் என்பதை அட்வைசாக இல்லாமல், தங்களது அனுபவத்தின் வழியே குழந்தைகளுக்குத் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். தனது கனவு என்ன என்று குழந்தைகளுக்குள் ஒரு தேடல் துவங்கும்.
* குழந்தைகளுக்கான குறிக்கோள், நோக்கம் என்பதை விளையாட்டின்மூலம் புரியவைக்கலாம். விளையாட்டில் அவர்கள் இலக்கை எட்டி வெற்றியின் ருசியைப் புரிந்துகொள்கின்றனர். 'ஐந்து ஆண்டுகளுக்கு பின் நீ எப்படி இருப்பாய்' என்ற கோல் சார்ட் தயார்செய்யச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் கனவுகள் படங்களாகவும், வண்ணங்களாகவும் இடம்பெறும். அதை, அவர்கள் பார்வையில் படும்படி மாட்டிவைக்கலாம். தினமும் அதைப் பார்க்கும்போது அந்தக் கனவுக்காகவும் உழைக்கத் துவங்குவார்கள்.
* குழந்தைகளிடம் அடுத்த ஐந்து ஆண்டில் இந்தச் சமூகம் உன்னை எப்படிப் பார்க்க வேண்டும்., இன்னும் 10 ஆண்டுகளில் இந்த சமூகத்திடம் உன்னை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை எழுதிக் காட்டச் சொல்லவும். இதற்காகவே வீட்டில் ஒரு போர்டு, சாக்பீஸ் வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் மனதைப் புரிந்துகொள்ள, கனவுகள் சிறகடிக்க வாய்ப்பு உருவாகும்.
* வீட்டில், குழந்தைகள் முன் செய்தித்தாள் படிப்பது, புத்தகம் வாசிக்கும் பழக்கம் பெற்றோருக்கு வேண்டும். குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாதல் ஆகியவற்றை அவர்களுக்குப் புரிந்த மொழியில் விவாதிக்க வேண்டும். அதுபற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அந்தச் சமயத்தில் என்ன செய்திருக்கலாம் என்பதையும் கருத்துக் கேட்பதுபோல விழிப்புணர்வை உண்டாக்க முடியும்.
* மாதம் ஒரு முறை குழந்தைகளிடம் உள்ள தேவையற்ற பொருள்களைப் பட்டியலிடச் சொல்லுங்கள். அவற்றைப் பயன்படும் குழந்தைகளுக்குத் தர

ஊக்கப்படுத்தலாம். ஆதரவற்ற இல்லங்களுக்கு அழைத்துச்செல்வதன் வழியாக குழந்தைகள் நிலை குறித்து உணர்த்தலாம். ஆசைக்காகப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் மாறி, உதவும் எண்ணம் உருவாகும்.
* உணவை வீணாக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக உணவு உற்பத்திசெய்யப்படும் விவசாய நிலத்தைப் பார்வையிடச் செய்யலாம். உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வார்கள். இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சம், தண்ணீருக்கு மக்கள் படும் அவலத்தையும் உணர்த்துங்கள். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள்.
* ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைக் குழந்தைகள் விரும்பிக் கேட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள், அது தயாரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், அதில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்கள் நாளடைவில் ஏற்படுத்த இருக்கும் விளைவுகளையும் விளக்கலாம்.
* இன்றைய குழந்தைகளிடம், பொதுவாக எதையும் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்வதும். அட்வைஸ் செய்வதும் அபத்தமானது. எதையும் நேரடியாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பளிக்கலாம். விளக்கமாகச் சொல்லிப் புரியவைக்கலாம். அந்தந்த விஷயங்கள் பற்றி அவர்களின் கருத்துகளையும் கேட்டுக்கொள்வது அவசியம்

Sunday, February 26, 2017

இன்றைய கவிதை- திறமை

😋திறமை😋

இலக்கை
எட்ட
உதவும்
நெம்புகோல்..
🌿🌿🌿🌿🌿🌿
சாமானியனை
சாதனை
ஆளானாய்
மாற்றும்
மின்சக்தி...
🌿🌿🌿🌿🌿
இது
இல்லாதவரை
புழுவாகவும்
பலுவாகவும்
எண்ணும்
உலகு....
🌿🌿🌿🌿🌿🌿
வெற்றி
மீது
நம்பிக்கை
கொண்டவர்
பின்
பற்றும்
பாடம்
திறமை
🌿🌿🌿🌿🌿
திறமையை
வளர்க்க
விதைப்போம்
நம்
சந்த்திகளுக்கு
வெற்றி
கனியை
சுவைக்க...
🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா..
🌿🌿🌿🌿🌿🌿🌿

Thursday, February 23, 2017

ரதம்.....இன்றைய கவிதை

🕍ரதம்🕍

பனங்காயை
சக்கரமாக்கி
விரகு
சிப்பி
கொண்டு
கோபுரம்
அமைத்து
அம்மாவின்
கிழிந்த
புடவையை
சுத்தி
கோபுமாக
வடிவமைத்து
அழைத்தோம்
ரதம்
என்று....
😁😁😁😁🇮🇳🇮🇳

இன்றும்
நெஞ்சில்
நீங்கா
நினைவுகள்
கலர்
கலராய்
அவ்வப்போது
எட்டிப்பார்ப்பது
ரதமாய்
ரனமாய்...
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😁

கால ஓட்டத்தில்
கரை
புரண்டோடியது
ரதம்...
நினைவுகள்
மட்டும்
அடையாளமாய்...
💐🇮🇳💐💐🇮🇳💐🇮🇳🇮🇳

பலருக்கு
தெரியவில்லை
வருங்கால
பொரியாளர்களை
கண்ணெடுக்கும்
மாயக்கண்ணாடி
ரதம் என்று...
🇮🇳🇮🇳😋🇮🇳💐💐
அந்த
ரதவிளையாட்டை
மீட்டெடுப்போம்
மகிழ்ச்சி யை
நம்
குழத்தைகளுக்கு
உடமைநயாக்குவோம்.....
🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿

Wednesday, February 22, 2017

என் உயிர் உன்னிடம்.....கதை

பால.ரமேஷ்.

தினம் ஒரு குட்டிக்கதை.


💙மிக #அருமையான கதை
💙கண்டிப்பா_படிங்க:

❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது.

❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்...

❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது.

❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான்.

அதேபோல, அவளும் கிராமத்து.,. அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்...,

❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர்.

❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அக்கறை, என்று ஒரு குழந்தை பிறக்கும் வரை அவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது.

❤அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

❤ குழந்தை பிறந்த நேரமோ என்னமோ! கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது.

❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான்.

❤அவர்களின்  நெருக்கம் குறைந்தது.

❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது.

❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது.

❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள்.

❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான்.

❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் "நீ முன்பை விட இப்போது இல்லை! மிகவும் மாறிவிட்டாய்! நீ என்னிடம் சரியாக பேசியே பல மாதங்கள் ஆயிற்று நான் வீட்டை விட்டு எங்கோ போகிறேன்! தயவுசெய்து என்னை தேடாதே!" என்று எழுதி படுக்கையறையின் கட்டிலுக்கு மேலே போட்டுவிட்டு இவாள் கட்டிலுக்கும் கீழே ஒழிந்துக்கொண்டாள்.

❤கோபம் தனிந்து தன் மனைவியின் பெயரை சொல்லியே உள்ளே வந்த கணவன் கட்டிலில் இருந்த கடிதத்தை படித்து அதன் பின்புறம் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு கைபேசியில் அழைக்கிறான்.

"மச்சான்! இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா! பிசாசு பொய்டாடா!" என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான்.

❤கணவன் பேசியதை கேட்டவள் தன் வாயை பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுகிறாள்.

"அடப்பாவி! என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே! எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah! பேசிட்டுப்போறான்!!" என்று பொலம்பி எழுந்து கட்டிலில் தன் கணவன் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கிறாள்.

❤"அடியே லூசு பொண்டாட்டி!" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி!

❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு!

❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி!!!"
இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே "நான் எங்கும் போலங்க! வீட்லதாங்க இருக்கேன்!" நீங்க எங்க இருக்கிங்க!!! ஏனுங்க!!! என்று பேசிக்கொண்டே தன் கணவனை தேடுகிறாள்.

((பொதுவாக ஆண்கள் சொத்து வாங்கும்போது தன் மனைவி பெயரிலும், கடன் வாங்கும்போது தன்னுடைய பெயரிலும் வாங்குவார்கள்.

*அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால்* :

💜கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும்!

💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும்.

# நேசியுங்கள்.      

         நேசிக்கப்படுவீர்கள்...#

Tuesday, February 21, 2017

உலக தாய்மொழி தின கவிதை....

தாய் மொழி தமிழ்🙏🙏

தமிழ்
உலக
மொழிகளின்
பிறப்பிடம்....
🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்
முதல் மொழி....
கல்தோன்றி
மண்தோணறா
காலத்திலும்
வாழ்ந்த
மொழி...
🙏🙏🙏🙏🙏🙏

இனிமை
பழமை
அழகு
என்ற
சொற்களின்
அகராதி
தமிழ்.....
🙏🙏🙏🙏🙏🙏🙏

அரசரும்
ஆண்டியும்
ரசித்து
ருசித்து
சுவாசித்து
வாழ்ந்த
மொழி
நம்
தமிழ்
மொழி....
🙏🙏🙏🙏🙏

முண்டாசு கவி
போன்ற
பல
கவிகள்
தமிழை
புசித்து
வாழ்ந்த
வரலாறு
உலகறிந்தது...
🙏🙏🙏🙏🙏🙏

இத்தகு
பெருமை
மிகு தமிழ்
மொழி
கலச்சாரம்
நாகரீகம்
என்ற
பெயரால்
அழிக்கப்படுவதையும்
அமுக்கப்படுவதையும்
இனியும்
அனுமதிக்கலாமா?…..
🙏🙏🙏🙏🙏🙏🙏

போற்றுவோம்
தமிழை
காப்போம்
தமிழை
தமிழன்
என்ற
கர்வத்தோடு...
🙏🙏🙏🙏🙏🙏
🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿🌿🌿

Monday, February 20, 2017

இந்தியா என்றாலே பெருமை....

இந்தியாவில் பிறந்ததற்காகப் பெருமைப்படச் செய்யும் பெருமிதம் இது!

இந்தியாவுல  வந்து ஏன்டா பொறந்தோம்னு  நினைக்கிறீங்களா? இப்படிப்பட்ட எண்ணம் நம்மில் சிலருக்கு அவ்வப்போது வந்து போவது இயல்பு. அப்படிப்பட்டவர்களுக்காகத்தான் இந்த கருத்துக்கோவை.இந்தியாவில் பிறந்ததற்காகப் பெருமைப்படச் செய்யும் தருணம் இது!

இந்தியாவைப் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக.... படித்துப் பார்த்தால் நிச்சயம் அசந்து போவீர்கள்.

உலகில் தோன்றிய நாகரிகங்களான கிரேக்க நாகரிகம், சுமேரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், பாபிலோனிய நாகரிகம் முதலிய நாகரிகங்கள் எல்லாம் இன்றைக்கு உதிர்ந்து விட்டன. அவற்றின் சுவடுகளை நாம் அருங்காட்சியகங்களிலோ, பாடப்புத்தகங்களிலோ மட்டுமே காணலாம். ஆனால், இந்திய நாகரிகங்களான பஃறுளி ஆற்று நாகரிகம் (குமரிகண்டம்) மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் இன்றைக்கும் இந்தியாவில் தமிழர் பண்பாடு மற்றும் இந்து தர்மம் என்ற பெயரில் ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்துகொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அதன் அழியாத உண்மைத் தன்மையும், விஞ்ஞான, மெய்ஞ்ஞான அடித்தளமுமே ஆகும்.                                            
ஜெர்மனியைச் சேர்ந்த உலக வரலாற்றாசிரியர் மேக்ஸ்முல்லர் இந்தியாவைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள்...

''எந்த நாடு  புராதன காலத்திலிருந்தே கல்வியறிவிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்கியிருந்தது என்று என்னைக் கேட்டால், நான் இந்தியாவைத்தான் காட்டுவேன். 
நான் உலகம் முழுவதும் சுற்றி வந்து பார்த்ததில், உலகிலேயே சிறந்த செல்வமும், சக்தியும், அழகும், இயற்கையால் வழங்கப்பட்ட இடம் எதுவென்றால், அது இந்தியா தான்.

வானத்துக்குக் கீழ் முழு வளர்ச்சியடைந்த மனித மனமும், வாழ்க்கையின் மிக முக்கிய பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வுகளைக் கொண்டதாகவும் திகழும் ஓர் இடம் எது என்று என்னைக் கேட்டால், நான் உடனே இந்தியாவைக் காட்டுவேன். எந்த ஒரு இலக்கியம், மிகவும் சரியானதும், நம்முடைய அக வாழ்க்கைக்குத் தேவையானதும், மிகவும் பரந்த அனுபவங்களைக் கொண்டதும், எல்லாவற்றிற்கும் தகுதியானதும், உண்மையில் மனித வாழ்க்கையின் சரியான இலக்கியமானதும் எது என்று கேட்டால் மறுமுறையும் நான் இந்தியாவையே காட்டுவேன்.  அதற்கு ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே சான்று.

நான் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க விரும்பவில்லை. அப்படிப் பிறந்துதான் ஆகவேண்டும் என்று ஆண்டவன் விரும்பினால், என்னை இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில், ஒரு இந்துவாகப் பிறக்கச் செய்யட்டும்."

- மேக்ஸ்முல்லர்

'இந்தியா எங்கள் மூதாதையர்களின் தாய்நாடு. சமஸ்கிருதம் எங்களுடைய ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. மேலும், அவள் (இந்தியா) எங்கள் தத்துவங்களுக்கெல்லாம் தாய். கணித சாஸ்திரத்தின் மூலம் அவளே அரேபியர்களின் தாய். புத்தனை உருவாக்கியவள். கிராமப் பஞ்சாயத்து, சுயநிர்வாகம், மக்களாட்சி தத்துவத்துக்கும் தாயாவாள். பாரதத் தாய் பல வழிகளிலும் எங்களுக்குத் தாயாகிறாள்.

-வில் டொரண்ட், அமெரிக்க தத்துவஞானி.

'ஜப்பானிய எண்ணங்களையும், தத்துவங்களையும் படிப்பது, இந்தியத் தத்துவத்தைப் படிப்பதற்கு ஒப்பாகும்'.

-டாக்டர் டி.சுசுகி, ஜப்பானிய மேதை.

'இந்தியா தன்னுடைய கலாசாரத்தின் மூலம் ஜப்பானின் தாயாகிறாள். பல நூற்றாண்டுகளாக அவள் தன்னுடைய சொந்தக் கருத்துகள், தத்துவங்கள் மூலமாக ஜப்பானின் எண்ணத்திலும் கலாசாரத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறாள்.'
-எச்.நாக்கமூரா, ஜப்பானியப் பேராசிரியர்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்திலுள்ள மனிதர்கள், தங்களுடைய ஆடையற்ற உடலில் பல வண்ணங்களைத் தீட்டிக் கொண்டு, காட்டுமிராண்டிகளாக காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்தபோது, கீழை நாட்டிலுள்ள இந்தியர்கள் உயர்ந்த லட்சியங்களுடன் நாகரிக வாழ்க்கை வாழ்ந்து இருக்கின்றார்கள்.
-லார்டு மெக்காலே, இங்கிலாந்து அறிஞர்

இந்தியா தன்னுடைய மதம், கற்பனை, காவியங்கள் மூலம் சீனாவுக்கு குருவாகத் திகழ்ந்திருக்கிறது. மேலும், உலகத்துக்கே குருவாக, திரிகோண சமன்பாடு (Trigonometry) நாற்கோண சமன்பாடு, இலக்கணம், உச்சரிப்புக் கலை, சாஸ்திரம் ஆகியவற்றை வழங்கி இருக்கிறது.
 லின் யூடாங், சீனப் பேரறிஞர், தன்னுடைய 'Wisdom of India' என்ற நூலில் இந்தியா ஒரு சிப்பாயைக்கூட  தன் எல்லைக் கோட்டைத் தாண்டி அனுப்பாமலேயே சீனாவை 20 நூற்றாண்டுகளாக தன்னுடைய கலாசாரத்தின் மூலம் வென்றது. இந்த கலாசாரத் தாக்குதல் இந்தியாவில் தன்னுடைய அண்டை, அயல்நாட்டின் மீது ஏவப்பட்டதல்ல. எல்லாம் சுயமாக ஆராயப்பட்டு, சுயமாகக் கற்று, சுயமாக புனிதப் பயணம் இந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட்டு, சீனாவின் எல்லா பகுதிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
-ஹூஷி, சீனத் தத்துவ அறிஞர் மற்றும் ஆசிரியர்

இந்திய வேதங்களையும், இதிகாசங்களையும், புராணங்களையும் ஆராயும்போது எத்தனையோ விந்தையான வியக்கத்தக்க பறக்கும் இயந்திரங்களும் (விமானம்) அதிபயங்கரமான ஆயுதங்களும், அதை பிரயோகிக்கும் வழிமுறைகளும் காணப்படுகின்றன. 
-எரிக்வன் டெனிகன், அமெரிக்க தத்துவஞானி

'மேற்கத்திய விஞ்ஞானிகளைவிட இந்திய விஞ்ஞானிகள் முதிர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் யதார்த்த வாழ்க்கைக்கு உதவாத மேற்கத்திய அறிவியலைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவியல் மற்றும் ஞானத்தில் ஊறிப்போனவர்கள் இந்தியர்கள். மகாபாரதம், கீதை ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானத் தத்துவங்களை இப்போதைய உலகிற்குப் பயன்படும் வகையில் நீங்கள் அறிவியலாக மாற்ற வேண்டும்.
-ரிச்சர்ட் எர்னெஸ்ட் , நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 

'வருகின்ற காலத்தில் உலகை வியக்க வைத்து வழிநடத்திச் செல்லும் வல்லரசாக சீனா திகழும் என்கிறார்கள். இல்லை அது இந்தியா என்பதே எனது மதிப்பீடு"
-டாக்டர்.தாமஸ் கிளெஸ்டிஸ், ஆஸ்திரிய நாட்டு அதிபர்

வருகின்ற சில ஆண்டுகளில் இந்தியாவின்முகமே மாறிவிடும். கிராமத்து மக்கள் கூட, கூட்டமாக, கூட்டுறவு சொஸைட்டிகளின் மூலமாக எவ்வாறு முன்னேற முடியும் என்பதற்கு இந்தியா ஓர் உதாரணமாகத் திகழும்.
- அமெரிக்க  முன்னாள் அதிபர் பில் கிளின்டன்,
(ராஜஸ்தானிலுள்ள நயோலா கிராமத்துக்கு விஜயம் செய்தபோது கூறியவை).

தொகுப்பு: ப.இலட்சுமணன், எஸ்.கதிரேசன்.

- விகடன்