Saturday, March 28, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

என் இனிய உறவுகளே , நட்புகளே... வணக்கம்.நீங்கள் அனைவரும் என் இரத்த உறவுகள்.உங்களை காணாமல் இருப்பது.மனதிற்கு பெரும் பாரமாக இருக்கிறது.எப்போதும் உங்களைப்பற்றிய சிந்தனைகள் நெஞ்சில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறது.எங்கோ பிறந்தோம்.எங்கோ வளர்ந்தோம்.ஆனால் கவியரசரின் ஈர்ப்பால் அனைவரும் அனைத்து மாவட்டந்தோறும் இணைந்தோம்.இணைந்த கரமாக.
*ஒரு வேண்டுகோள்*
1.அருள் கூர்ந்து வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம்.
2.அவசியம் கருதி வெளியே செல்ல நேரிட்டால்,முக கவசம் அணிந்து செல்லவும்.
3.யாரிடமும் நெருங்கி பேசுவதை தவிருங்கள்.
4.இடைவெளி விட்டு பேசுங்கள்.
5.சிரமமாகத்தான் இருக்கும்.சுதந்திர பறவையாய் துள்ளிக்குதித்த நம்மால் முடியாது தான்.
6.இருப்பினும். நம்மை பாதுக்காக்கவும்.நம்மை நம்பி இருக்கும் குடும்பத்திற்காகவும்.இந்த தியாகம் செய்து தான் ஆகனும்.
7.நேரம் செல்வது ரொம்ப கொடுமையாகதான் இருக்கும்.
8.அந்த நேரங்களில் சிந்தனை சிறகை தட்டி விடுங்கள்.கவிதைக்காலமாய் மாற்றுங்கள்.
நீங்களும் கவிஞராகலாம்.
9.வண்ணத்தூரிகையை உங்கள் எண்ணப்படி கிறுக்குங்கள்.அந்த கிறுக்கல் கூட உங்களை ஓவியனாக்கலாம்.
10.குறித்த நேரத்தில் சாப்பிட.உங்களின் இல்லாளுக்கு கொஞ்சம் முடிந்தவரை உதவிடுங்கள்.அந்த உதவிக்கூட உங்களை சமையல் கலைஞராக்கலாம்.
11.உங்கள் வாரிசுகளிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் உணர்வுகளை புரியும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.அதுகூட உங்களை மனோத்தத்துவ நிபுணராக்கலாம்.
12.வீட்டை சுத்தமாக்க உங்களின் இல்லாளுக்கு உதவிடுங்க.அவர்களின் சிரமமத்தை உணரும் ஒரு வாய்ப்புக்கிடைக்கலாம்.அதுவும் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமாக்கலாம்.
13.ஒரு லாங் சைஸ் நோட்டு எடுத்து.உங்கள் பேனாவை கையில் எடுத்து.நீங்கள் பிறந்தது முதல் இன்று வரை வாழ்க்கைப்பயணத்தில்  சந்தித்த இன்ப நிகழ்வு. இன்னல்கள். உங்கள் சாதனைகள்.பொது வாழ்க்கையில் உங்கள் பங்கு.இலக்கிய உலகில் உங்கள் பங்கு.நீங்கள் செய்த நல்லவைகள்.தெரியாமல் அறியாமல் செய்த நிகழ்வுகள். இவைகளை பட்டியலிட்டு.கோர்வையாக எடுத்து எழுதுங்கள்.நீங்களும் எழுத்தாளராகலாம்.

*தங்களின்  நலனில்என்றும்*
*அக்கறையுடன்...*

*இனிய காலை வணக்கம்.*

Saturday, March 21, 2020

சர். ஐசக் நியூட்டன்..

சர் ஐசக் நியூட்டன்

ஐசக் நியூட்டன்
ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.

நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில் சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார்.

பணிகள்

1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன.

ஒளியியல் ஆய்வுகள்

பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே

ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.

ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். பார்க்க: அலை-துணிக்கை இருமைத்தன்மைஇரண்டு துணிக்கைளுக்கிடையிலான ஈர்ப்பு விசையானது அவற்றின் திணிவுகளுக்கு நேர்விகிதசமனெனவும் அவற்றுக்கிடையிலான துாரத்துக்கு நேர்மாறுவிகிதசமனெனவும் கருத்தறிவித்தார்.

விசை பற்றிய கோட்பாடுகள்

எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.

ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.

ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.

இறுதிக்காலம்

இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார்.

மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டது.

Wednesday, March 18, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

*பெற்றோர்கள்  கவனத்திற்கு* ஒருபுறம் தொற்று நோய்
அச்சுறத்தலால் வெளி பழக்கங்கள் மற்றும் அன்றாட சூழல் மாறியுள்ளது மறுபுறம்  *பிள்ளைகள் வீட்டில்*
*இந்த 15 நாள் விடுமுறை நாட்களில்* *இந்த பிள்ளைகளின் நேரத்தை சரியாக செலவிட உதவுங்கள்* கைபேசி சிறிது நேரம், தொலைகாட்சி சிறிது நேரம்  போக ஆண்(அ)பெண் இருவருக்கும் பொது யோசனைகள் சில....
1. காலை தோப்புக்கரணம் 10 முதல் 20 வரை பொறுமைகாக போட சொல்லுங்கள் 🙆‍♀🙆🏻‍♂

2.குளியல்  முடிந்ததும் சிறிய தியானம் 20நிமிடம் (அதாவது அவர்களின் நல்ல ஆசைகளை கண்மூடி நினைவு பயணமாக மேற்கொள்ள வேண்டும்) .🧎‍♀🧎🏻

3. சிறிய எளிய வீட்டு வேலையை செய்யவிடுங்கள்
சைக்கிள் ,வண்டி  துடைப்பது, அவர்கள் துணிகள், புத்தகங்கள் அடுக்குவது, செடி பராமரிப்பு  .

4.  காலை(அ) மாலை வெயிலில்  சிறிது நேரம் விளையாட வேண்டும்  இதனால் மட்டும் விட்டமின் டி  கிடைக்கும் .

5. சத்தான எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகள் அளியுங்கள்.

6.நொறுவலுக்கு பழ வகைகள் மற்றும் இஞ்சி சேர்த்த மோர், இளநீர் ,நிலக்கடலை, வறுகடலை, அவல்பொரி வெல்லம், இப்படி தந்து பழகுங்கள்.

7. புத்தக வாசிப்பு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் ,கதைகள் கூறுவது,கோலமிடுவது என அவர்கள்  விரும்புவற்றை செய்ய ஊக்கபடுத்துங்கள்.

8.நண்பர்களுடன் சிறிது நேரம் காற்றோட்டமான இடத்தில் விளையாட விடுங்கள். பெண் குழந்தைகள் வாசல் தெளித்து கோலமிடுங்கள்.

9.கை ,கால், முகம், கழுவ பழக்கபடுத்துங்கள், வெதுவெதுப்பான சீரகம் சேர்த்த நீரை அருந்த கொடுக்கவும். சிறிது துளசியை சாப்பிடலாம்.

10. தாயம், பல்லாங்குழி, பம்பரம், பரமபதம், என சிறிய விளையாட்டுகளை கற்று தாருங்கள் .

11. தினமும் 2 மணி நேரமாவது பாடங்களை படிக்க வையுங்கள்  ஏனெனில்  முழு ஆண்டு தேர்வு வரவிருக்கிறது.

12.வெளியில் செல்லும் முன் சிறிது தேங்காய்(அ) வேப்ப எண்ணெய் தடவி விடவும்.

13.மாலையில் தினமும் சாம்பிராணி போடுங்கள் அதில் சிறிது காய்ந்த வேப்பிலை போடலாம்.
மாலை விளக்கேற்றும் போது வேப்ப எண்ணெய் பயன் படுத்தவும்.

14. பொது இடங்களில் செல்லும் போது கைகுட்டையில்(அ) சட்டை பையில் சிறிது  பச்சைகற்பூரம், துளசி, வேப்பிலை, கற்பூரவல்லி தழை இவைகளில் எது உள்ளதை அதனை வைத்து கொள்ளவும்.

15. இரவு 10 மணிக்கு ரேடியோவில் இனிமையான பாடல் அனைவரும் கேட்க அன்றைய வேலை பளு மறையும்.

*ஏனெனில்  இந்த நேரத்தில் இந்த பதிவு  பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் மாற்றம் என்பது அனைத்தையும் மாற்றகூடியது நன்றி*🤝🙏✍

*மாணவர்கள் நலன் கருதி இந்த பதிவு..*

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்*

Tuesday, March 17, 2020

புதிய பார்வை.....புதிய கோணம்....

உலகம்
உறைந்துள்ளது...

பல்கலை
கழகங்கள்,
கல்லூரிகள்,
அனைத்து வகை
கல்வி நிலையங்கள்
மூடப்பட்டு
விட்டன...

பள்ளி
வாசல்கள்,
தேவாலயங்கள்
கோவில்கள்
நடை சாத்தி
விட்டன...

திருவிழாக்கள்,
திருமணங்கள்
இதர பிற
நிகழ்ச்சிகளில்
மக்கள்
கூட வேண்டாம்
என அரசுகள்
அறிவுரை
வழங்கியுள்ளன...

ஊர்வலங்கள்
கூட்டங்கள்
மாநாடுகள்
நடத்த
தடைவிதிக்க
பட்டுள்ளன...

'தேசிய பேரிடர்'
என மத்திய
மாநில
அரசுகள்
அறிவித்து
விட்டன...

ஆனானப்பட்ட
அமெரிக்க அதிபர்
டிரம்ப் முதல்...

அடித்தட்டு
மனிதர்கள் வரை...

அனைவரும்
அதிர்ச்சியில்
ஆடித்தான்
போயுள்ளனர்.

ஆம்...

உலகம்
உறைந்து தான்
போயுள்ளது.

மதங்கள்
சாதிகள்
பிரிவினைகள்
காணாமல்
போயுள்ளன...

அவர் சரியில்லை
இவர் சரியில்லை
என்னும் பேதங்கள்
மக்களால்
மறக்கடிக்க
பட்டுள்ளன...

இவைகள்
தெரிவிக்கும்
செய்தி என்ன ???

'இயற்கையை
வெல்ல எவராலும்
முடியாது' என்பதே.

மிக பெரிய
சுனாமிக்களும்
மாபெரும்
வெள்ளங்களும்
மிக மோசமான
நில அதிர்வுகளும்
அவ்வப்போது வந்து...

'நான் இருக்கிறேன்
என்னை மறந்து
வாழாதீர்கள்'

என்று
தெரிவிக்கும்
போதெல்லாம்....

அப்போது
மட்டும் மக்கள்,
எல்லாம்
மறந்து,
ஒன்று கூடி
போராடி...

மனிதத்தை
மீட்டெடுத்தது
வரலாறு.

மனிதத்தை
மறந்து
மீண்டும்
சுயநலமாக நாம்
மாறும் போது...

'பறவை காய்ச்சல்'
எனவும்
'பன்றி காய்ச்சல்'
எனவும்...

இதோ இப்போது
'கொ ரா னா'
வைரஸ் எனவும்...

இயற்கை
நம்மை...

மறுபடியும்
எச்சரிக்கை
செய்கிறது.

இந்த பேரிடர்கள்
தெரிவிக்கும்
கருத்து என்ன ???

நாம் மட்டுமல்ல
நம்மை சுற்றியுள்ள
நம் சமுதாயம்
மேம்பட...

நம்முடைய
உணவுமுறை,
நம்முடைய
பண்பாடு,
அடுத்தவர்
நலன் பற்றிய
அக்கறை,
சுற்றுப்புற
சுகாதாரத்தில்
அனைவருக்குமான
பொறுப்பு என...

இவைகளில்
கூட்டு முயற்சியாக...

நாம் அனைவரும்
இணைந்து
செயல்பட வேண்டும்
என 'சொல்லாமல்
சொல்வதே' ஆகும்.

இதில் இருந்து
மீண்டுவர...

இனி ஒரு பேரிடர்
நிகழாமல் தடுக்க...

'உடலளவில்'
தனித்து நாம்
இருந்தாலும்...

'உள்ள அளவில்'
ஒன்றிணைந்து
இயங்க
தொடங்குவோம்

'அரசு
வழிகாட்டல்களை'
கடைபிடிக்க
தொடங்குவோம்.

வாங்க...

'இனி ஒரு விதி
செய்வோம்...

அதை எந்த நாளும்
காப்போம்'.

*அன்புடன*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*

ஆசிரியரின் மனசு...கவிதை

சார்...
என்ன
அவன்
அடிச்சிட்டான் ..

சார்..
இவன்
என்னை
பகுல்லயே
குத்திட்டான் ..

சார்....
இது
என்
பென்சில்
அவ எடுத்துக்கிட்டா ..

இப்படி
எந்த
புகாருமற்ற
காவல் நிலையமாய்
வகுப்பறை...

எப் எம்
ரேடியோ
போல
எந்நேரமும் பேசும்
உன் பேச்சின்றி
மூர்ச்சையாகி
நிற்கிறது
வகுப்பறை ...

எல்லாத்துக்கும்
முந்திரிக்கொட்டை
போல முன்ன ஒடும்
உன் கால்
தடமின்றி வறண்ட
நிலமாக வறுமைக்
கொண்டது வகுப்பறை ...

மார்க் போடலாம்
ரெக்கார்டு முடிக்கலாம்
என்னென்னவோ சொன்னாங்க
சரிதான்னு நானும் 
கெளம்பி வந்தேன்...

ஆள் அரவமற்ற
வகுப்பறையில்
நிமிடத்திற்கொருமுறை
நீ பாத்ரும் கேட்பது
போல் பிரம்மை....

உனக்கு வாங்கி
கொடுத்த திண்பண்டத்தை
போட்டிப் போட்டு
எனக்குக் கொடுத்து
மத்தியான உணவைக்கூட
மறந்து போக வைக்கும்
உன் தாய்மைக் குணம்
தடுமாற வைக்கிறது
என்னை....

எங்கும்
பேப்பர்
குப்பைகளாக
சிதறிக்கிடக்கும்
நோட்டுப் புத்தகங்களும்

உன் கால்களால்
வதைப்படும்,
உதைப்படும்
பாயும் பக்கத்தில்
அமர்ந்திருக்கும்
Boyம் , Girl ம் இன்றி
வகுப்பறை
வனாந்தரமாக
தெரிகிறது...

மேசையும்
நாற்காலியும்
எழுது கோலும்
என்னை வேண்டுமென்றால்
கட்டிப் போடலாம்
என் நினைவுகள்
அனைத்தும் ...

கள்ளமில்லா
உன் சிரிப்பைத்தேடி 
கால்கடுக்க
காத்து நிற்குது...

பைக்கை
நிறுத்தியவுடன்
பூங்கொத்து
விரல் கொடுத்து
பூவிதழ் கண்கள்
சிரித்து
சார் வந்துட்டாங்க..
சார் வந்துட்டாங்க.....
என்னும் சங்கே
முழங்கு கேட்காமல்
சங்கடமாய் போகுதே
சத்தமில்லா வகுப்பறை 

மாணவர்களை
நேசிக்கும்
ஆசிரியர்களுக்கும்
ஆசிரியர்களை நேசிக்கும் மாணவர்களுக்கும்
விடுமுறை என்பது
அரசு தரும்
விருப்பமில்லா
விருப்ப ஓய்வு போல ..

கருவிகளோடும்
கணினிகளோடும்
இயந்திரங்களோடும்
வேலை செய்பவர்களுக்கு
இது
புரியாது.....

மாணவர்களின்
இதய துடிப்போடு
பணியாற்றும்
ஆசிரியர்களின்
மனநிலை ...

நீ
இல்லாத
வகுப்பறை
பெற்றப் பிள்ளைகள்
இல்லாத
இல்லம் போல்
ஓர் உணர்வு மனதில்...

இவன்
🌹🌹🙏🌹🌹
  ஆசிரியர்கள் மனநிலை...
🌹🌹🙏🌹🌹

💐💐💐💐💐💐🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

நன்றி

🌷🌷தமிழாசிரியை  நிலா🌷🌷நாகல்கேணி
அரசு (ஆதிநி) மேல்நிலைப் பள்ளி ....

Saturday, March 14, 2020

புதிய பாதை....புதிய கோணம்...

*மறந்து போன மகத்துவம்..*

- இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.

- வீட்டிற்குள் நுழையும் முன் கை கால் கழுவி பிறகு நுழைந்தது.

- மஞ்சள் நீராடி விளையாடியது

-  உணவில் மஞ்சள் சேர்ந்தது

- சாம்பல் உப்பு கொண்டு பல் துலக்கியது

- மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது, வீட்டின் தரையை மொழுகியது, பிள்ளையார் வைத்தது

- வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது

- மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது

- பெரிய காரியம் மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் இருந்து
திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது

- பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது

..... நாங்கள் மறந்த மரபுகள் எல்லாம் ஏதோ ஒருவகையில் நோய்த்தடுப்பு முறைகளாக இருந்திருக்கின்றன.

..... சாமி மேல் பயம் இருந்தவரை இவையெல்லாம் கடைப்பிடிக்கப்பட்டன. சாமி நம்மைப் பார்த்து பயந்த உடன் எல்லாம் மறந்து விட்டன.

வாங்க
நாமும்
பழச
பழகுவோம்
பண்பாட்டோடு
நோய்யின்றி
வாழ்வோம்...

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்*

Tuesday, March 10, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

அடர்ந்த காட்டில் ஒரு பறவை, தன் சிறகுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வந்தது.

'தான் இறந்து விடுவோமோ' என்னும் பயத்தில், 'தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா' என்று அது
ஏங்கி கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த வழியே ஒரு சீடர் சென்று கொண்டிருந்தார்.

அந்த பறவை
அந்த சீடரை அழைத்து,

" என்னை போல மற்ற பறவைகள் எல்லாம் சந்தோஷமாக வானில் பறந்து கொண்டிருக்கின்றன.
எனக்கு மட்டும்
இந்த துயரம் ஏன்?
இனி நான் உயர பறக்க இயலாது.உயிர் பிழைக்கவும் முடியாது.
உங்கள் குருவை எல்லோரும் மகான்
என்று அழைக்கின்றனர்.
உங்கள் குருவிடம் சொல்லி என்னை காப்பாற்றுங்கள்"
என்று கெஞ்சியது.

சீடர் தன் குருவிடம்
நடந்ததை கூறினார்.

" நீ ஒன்றும் செய்ய வேண்டாம். அது அந்த பறவையின் கர்மா. நீ அந்த பறவையிடம் சென்று
'எனக்கு கிடைத்த இந்த வாழ்க்கைக்கு நன்றி. நான் நிறைவாகவே இருக்கிறேன். குறை ஒன்றும் எனக்கு இல்லை' என்று தினமும் கடவுளிடம் கூறச்சொல்"
என்று சீடனிடம்  கூறினார் குரு.

அந்த சீடர்
பறவையிடம் சென்று
'குரு சொன்னதை'
சொல்லிவிட்டு சென்றார்.

பறவையும்
'குரு கூறியவாறு'
தினமும் கடவுளுக்கு
'நன்றி' சொல்லிவந்தது.

மாதங்கள்
சில சென்றன.

குருவும் சீடரும்
மீண்டும் ஒருநாள்,
அந்த வழியாக வந்தனர்.

அந்த பறவை
மகிழ்ச்சியாக வானில்
சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்த சீடர்
"இது எப்படி சாத்தியமாயிற்று"
என்று குருவிடம்  வினவினார்.

"நம்பிக்கையை இழந்த
அந்த பறவைக்கு,
'நன்றி' என்னும்
'மந்திரச்சொல்',
அதன் வாழ்க்கையையே
மாற்றி விட்டது"
என்று குரு கூறினார்.

நேர்மறை
சிந்தனைகளும்,
நேர்மறை
செயல்களும்,
சிறப்பான
முடிவுகளை தரும்
என்பது உண்மையே.

வாங்க
நாமும்
நேர்மறை
எண்ணத்தை
வளர்த்து
மகிழ்ச்சியாய்
வாழ்வோம்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Friday, March 06, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

மனிதன்
என்பவன்
தினந்தோறும்
மரித்து
போகக்கூடாது.

அவன்
கணம்தோறும்
புதிது புதிதாய்
வாழவேண்டும்.

போனதை
எண்ணி
புலம்புபவன்
இருபது
வயதானாலும்
முதியவனே.

போனது
போகட்டும்,
ஆனது
ஆகட்டும்,
என...

எந்த நேரத்திலும்
ஆர்வத்துடன்
இருப்பவன்,
எண்பதானாலும்
இளைஞனே.

எவரிடத்திலும்,
எந்த வயதிலும்,
எல்லோருக்குள்ளும்...

ஒரு
குழந்தை
உறங்கி
கொண்டிருக்கும்.

'உள்ளே உள்ள
குழந்தைக்கு
வயதாகி விடாமல்
பார்த்து
கொண்டவர்கள்...

என்றும்
ஆனந்தமாக
வாழ்கிறார்கள்...

மாபெரும்
சாதனையாளராக
மலர்கிறார்கள்'.

வாங்க
நாமும்
குழந்தையாய்
இருந்து
வாழ்வை
ஆனந்தமாய்
வாழ்வோம்..

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Tuesday, March 03, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

ஒரு பேராசிரியர்
தன் மாணவர்கட்கு
ஒரு தேர்வு வைத்தார்.

கேள்விதாள்கள்
மூன்று வகையாக
பிரிக்கப்பட்டிருந்தது.

'மிக கடினமானது'
முதல் வகையாகவும்...

'சுமாரானது'
இரண்டாம் வகையாகவும்...

'மிக எளிமையானது'
மூன்றாம் வகையாகவும்
அவை இருந்தன.

'எந்த கேள்விதாளையும்
எடுத்து எழுதலாம்' என்று வாய்ப்பு தரப்பட்டிருந்தது.

மாணவர்கள் அவரவர்
விருப்பம் போல் கேள்வி தாள்களை எடுத்தனர்.

விடைகளை எழுதி, தாள்களை ஆசிரியரிடம்
வழங்கினர்.

அவைகளை திருத்தாமலேயே...

மிக கடினமான
கேள்விதாள்களுக்கான
விடைகளை எழுதியவர்களுக்கு
'முதல் தரம்' என்றும்...

சுமாரான கேள்வித்தாளுக்கான
விடைகளை எழுதியவர்களுக்கு
'இரண்டாம் தரம்'
என்றும்...

மிக எளிமையான கேள்வித்தாளுக்கான
விடைகளை எழுதியவர்களுக்கு
'மூன்றாம் தரம்' என்றும்
மதிப்பிட்டு வழங்கினார்.

மாணவர்கள் அதிர்ச்சியுற்று,
"இப்படி திருத்தாமலேயே தரம் பிரித்து விட்டீர்களே" என்று கேட்டனர்.

"உங்களது முயற்சிகளில், எந்த அளவுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை, கண்டறிவதற்கான ஒரு தேர்வுதான் இது.

அதிக முயற்சி எடுத்து கொண்டவர்கள்
முதல் ரகம்தானே"
என்று அவர்களுக்கு
விடையளித்தார் ஆசிரியர்.

'விடாமுயற்சியும்,
உயர்ந்த குறிக்கோளும்
மிக சிறந்த வெற்றியை
பெற்றுத்தரும்' என்பது
உண்மைதான்.

வாங்க
நாமும்
முயன்று
வெற்றிகளை
குவிப்போம்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Sunday, March 01, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

💐💐💐💐💐
பொதுத்தேர்வு
எழுதப்போகும்
எனதருமைக் குழந்தைகளே!
வணக்கம் 🙏🏼

🌻🌻🌻🌻🌻

எழுதுவது
விஷப்பரீட்சை அல்ல
விஷயம் நிறைந்த
பரீட்சை.
⛱👍🏻
தேர்வு
வாழ்க்கை அல்ல
அச்சப்பட...

எளிதாக
எதிர்கொள்
எந்த உயரத்தையும்
எட்டலாம்.

இதுவரை
அப்பாவின் ஆறுதல்
அம்மாவின்
தேறுதல்
ஆசிரியரின்
தேடல்கள்
உன்னை
பட்டை தீட்டியிருக்கும்.

படி...படி...படி...
படித்துவிட்டாயா?
எழுதிவிட்டாயா?
மதிப்பெண் எவ்வளவு?
மருத்துவமா?
பொறியியலா?

என்ற
கேள்விக்கனைகள்தான்
உன்
காதுகளை
வேட்டையாடிருக்கும்.

மறந்து விடு
எல்லாம் மறந்து விடு.
👍🏻👍🏻👍🏻
தேர்வு
உன்னுடையது.

தைரியத்தை
உனக்குள் வை.

தேர்வு நாளில்

எழு
அதிகாலை யில் எழு.

உன்னைத் தூய்மையாக்கு.
உள்ளத்தைத்
தூய்மையாக்கு.

படித்ததை
மூளையில்
முடிந்து வை.
☕☕☕☕
எதை எழுதுவது?
எப்படி எழுதுவது?
எனத் திட்டமிடு.
அதற்காக
சிந்தனை யை வட்டமிடு.

மதிப்பெண்ணை மட்டும் யோசித்திவிடாதே.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அது உன்னைக்
கோழையாக்கும்
கைவிலங்கிடும்
மனதை மலடாக்கும்.

உழைப்பிற்கும்
உன்னதமான
முயற்சிக்கும்
உரிய மதிப்பெண்
கிடைத்தே தீரும்
☕☕☕
தேவையானால்
சாப்பிடு
தேவையானவற்றை
சாப்பிடு.

உணவுகள் கூட
உணர்வுகளைச்
சிதைக்கும்.

துணியை
உடுக்கும் போதே
துணிவை
உடுத்திக்கொள்.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
தேர்வு
சதா  ரணம் அல்ல
சாதாரணம்.

தந்தையிடம்
தைரியத்தை க்
கடன் வாங்கு.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தாயிடம்
நிதானத்தைப்
பெற்றுக்கொள்.

கற்றுக்கொடுத்தவனிடம்
காற்றை
வாங்கிக்கொள்.
🦋🦋🦋🦋
தேர்வறைக்குள்
தெளிந்த
நீரோடையாய் செல்.

ஒரு நொடி
கண்களை மூடிக் கொள்.

மிச்சமுள்ள
அச்சத்தை
எச்சமென தூக்கி எறி..
👍🏻👍🏻👍🏻👍🏻
எல்லாம் தெரியும்
என்று
நம்பி கையால் எழுது.
உன்
நம்பிக்கையால் எழுது.

எழுது
தெளிவாக எழுது.

எழுது
எளிதாக எழுது.

வினா அருகில்
விடையோ
உன்னுள்
உருண்டோடி விளையாடி வருகின்றன

எழுது
தடுமாறாமல் எழுது.
தடம் மாறாமல் எழுது.

எழுதியபின்
எழுந்து வா
வாழ்க்கையிலும்...

முன்னேற
முன்பதிவு செய்தோம்
என்று. ..
முகம் மலர வா...
🌻🌻🌻🌻🌻
உன்னை
அழைத்துச் செல்ல
வெற்றி
வெகு நேரம்
காத்துக்கிடக்கும்.

🌻🌻💐🌻🌹
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..
🌺🌺🌺🌹🌹🌹🙏🙏👍👍