Wednesday, July 28, 2021

மருத்துவம் படிக்க கட் ஆப்....

+2 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர கட் ஆப் மதிப்பெண் கணக்கிடும் முறை அறிந்து கொள்ள எளிய வழி இந்த Video.
அனைவரும் கண்டு பயன்  பெற்று மறக்காமல் எங்கள் Channel யை Subscribe செய்யவும்.  பின்னர் Bell பட்டனை அழுத்தி All பட்டனை கிளிக் செய்ய அன்போடு வேண்டுகிறோம்..

மிக்க பேரன்போடு
சேலம்.ஆ.சிவா

Video வை காண கீழே உள்ள நீல நிற லிங்கை கிளிக் செய்க.

https://youtu.be/QtbZXcua1rg


Tuesday, July 20, 2021

தமிழ் வரிவடிவ வளர்ச்சி...( அலகு.1 )

எட்டாம் வகுப்பு.அலகு1. தமிழ் வரிவடிவ வளர்ச்சி ( உரைநடை உலகம் ) காது கொடுத்து தமிழ் பாட நூலை வைத்துக்கொண்டு கேட்ட வேண்டும்..கேட்டால் எளிதாக புரிந்து கொள்ள இயலும்.

இப்படிக்கு
ஆ.சிவராமகிருஷ்ணன்.
வகுப்பாசிரியர்

வலையொலியை உங்கள் கைபேசியில் கேட்க கீழே உள்ள மூன்று step யை பின் பற்றவும்.
Step.1 copy link

Step.2. Paste in google search

Step.3 play
கொடுங்கள்...நான் பேசும் ஒலியை ( ஆடியோவை) கேட்க இயலும்..

நன்றி..
https://anchor.fm/sivaramakrishnan7/episodes/12-e14nvb3



Sunday, July 18, 2021

மனித உறவுகள்...



ஒவ்வொரு ஆணும்  பெண்ணும் எவ்வளவு உயர் பதவி , பொருளாதரத்தில் மேலோங்கி இருந்தாலும் அவர்களின் 60 - 70 - 80 வயதுக்கு மேல் எப்படி இருப்போம் என்பது தான் . இது ஒரு கண்ணோட்டம் எனவே மனதை இப்போது தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
                                                       *ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர் கொள்ள உதவும்.*

1. *முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை  ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகி விட்டது போல் உணர்வீர்கள்.*

*அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்*

2.  *காலப் போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.* 
*நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும்  முதுமை உங்களை ஒரு சராசரி*
*வயதான மனிதராக மாற்றி விடும். நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப் பட்டு மறக்கப் படுவீர்கள்.*
*உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் உங்களை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ வேண்டும்*

3.  *அழையா விருந்தாளியாக பல வகை நோய்களும் உடல் உபாதைகளும் உங்களை அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும். உங்கள் உடல் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கனவு காணாதீர்கள். அதற்காக அதைப் பற்றியே நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே  இருக்காமல், எல்லாமே சரியாகவே நடக்கும்   என்ற மனப்பக்குவம் பெறுங்கள். ஒரு இடத்தில் முடங்கி விடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள் நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.*

4. *இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம். நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம் நாம் குழந்தையாய் இருந்த போது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.* 

*அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.*

5.  *கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம்.  அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும். உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்*. 

 *மிக முக்கியமாக, பற்றற்று வாழப் பழகுங்கள்.*

*வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றும்.*

*ஆகவே 60ஐத் தாண்டியவர்கள் வாழ்க்கை என்றால்  என்ன என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.*

*உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று அனுபவியுங்கள்.*

*நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள் எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக்  கவலைப் படாதீர்கள்.*

*ஊரில் ஊழல் மலிந்து விட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம் பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள்*.

*இனி நீங்கள் வாழப் போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு வாழுங்கள்.* *மற்றவர்களை மதியுங்கள்.*
*பணிவோடு நடந்து கொள்ளுங்கள்.* *உங்கள் வயதைக் காரணம் காட்டி உங்களை உயர்த்திக் கொள்ள எண்ணாதீர்கள். யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.*
*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற மனநிலையையும் அமைதியையும் தேடுங்கள்.*

*வாழ்க்கை வாழ்வதற்கே.*
படித்ததில் - பிடித்தது....

பகிர்வு பதிவு....

Thursday, July 15, 2021

பாரதியாரின் தமிழ் மொழி வாழ்த்து..என் குரலில்


வகுப்பு எட்டு
படம்..தமிழ்
அலகு.1
கவிதைப் பேழை
பாரதியார் எழுதிய தமிழ் மொழி வாழ்த்து...கேளுங்கள்...தமிழை அள்ளி பருகுங்கள்...


https://anchor.fm/sivaramakrishnan7/episodes/8-e14ftps

Wednesday, July 14, 2021

வாழ்த்துவோம் ...வாங்க

 எங்கள் உயிருக்கு

பிறந்தநாள்  வாழ்த்துகள்

வாழ்வின் அர்த்தம ்

சொன்னவள் நீ...

வாழ்க்கை பாதையில்

பயணிக்க வைத்த

பாதசாரீ நீ...

உன் முகம்

எங்களின் உலகம்

உன் சிரிப்ப

எங்களின் சொர்க்கம்

உலகம் முழுதும் 

தேடி எடுத்த 

எங்கள் முத்து

இறையின் அருளிய

அருட் கொடை நீ...1

எங்கள் வாழ்வும்

வளமும்  உன்னில்

எங்களையும் சமூகத்தையும்

காக்க ஆசை

வாழ்க வளமுடன்

வாழ்க நலமுடன்

வாழ்க ஊர்

போற்றும்  பெண்ணாய்்...

என்றும் பேரன்போடு 

உன்னில்  உறைந்திருக்கும்

உன்

அப்பா , அம்மா..1





Sunday, July 04, 2021

வலிகள்தான் வாழ்க்கை...சிறு கதை

*மறக்க முடியாத மனிதர்கள்..!!*

பழக்கார ஆயா..

தினசரி மார்க்கெட் போவதும், பழம் வாங்குவதும் வழக்கமாக நடப்பது..

ஒரு ஆயா பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்..

ஆபிஸ் போகவர பார்ப்பேன்.
ஆயாவும் பார்க்கும்..

சரி. இந்த ஆயாவிடம் வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன்..

"மாம்பழம் எப்படி  ஆயா..??" 

"எடு ராசா. உனக்கென்ன எச்சாவ கண்ணு சொல்ல போறேன்.."

#குதாதத் மாம்பழம் நன்றாக இருந்தது..  

"எடு கண்ணு.  கல்கண்டு மாதிரி இருக்கும்.."

"எவ்வளவு..??" 

கிலோ 70 ரூபா. நீ 60 ரூபா கொடு போதும்.."

60 அதிகமோ! மனசு பேரம் பேசியது. "அம்பது  போட்டு 2 கிலோ கொடு.."

 "கட்டாது சாமி. அசலே 55 ரூபா வருது.."

சரி,வேண்டாம். அப்புறம் வர்றேன்..

நகர முற்படும்போது "சரி எடு ராசா. காலைல மொத வியாபாரம்.." 

3 கிலோ வாங்கினேன். ஆஹா. நல்ல பேரம்.
மனசு குதூகலித்தது..

மறுநாள் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு போனேன். அதனுடன் சேர்ந்த மாதிரி பழமுதிர்ச்சோலை. பழங்கள் நேர்த்தியாக அடுக்கி அழகாக இருந்தன. அதோ. குதாதத். ஆயாவிடம் வாங்கியது போலவே இருந்தது..  என்ன விலை..?? 

கிலோ 80 என்று எழுதியிருந்தது. "ஏம்மா குதாதத் கிலோ என்ன விலை?" 80 ரூபா"..

இங்கே பேரம் பேச முடியாது. ஒரே விலை.  அப்போ, ஆயாவிடம் 50 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கி, அதை பெருமையாக வீட்டில் சொல்லி, ஏனோ மனசு வலித்தது..

மாலை வரும்போது ஆயாவை பார்த்தேன். மெலிதான தேகம். சுருக்கம் நிறைந்த முகம். நடுங்கும் கைகள். ரோட்டில் பழ வியாபாரம்..

என்னை அறியாமல் கால்கள் நின்றது. ஆயாவுடன் இன்னும் இரண்டு வயதான ஆயாக்கள். டீ குடித்து கொண்டு  இருந்தார்கள். சரி.  ஆயாவிடம் வேறு ஏதாவது வாங்கலாம். கவனித்தேன்.. 

ஆயா பக்கத்து புரோட்டா கடையிலிருந்து இரண்டு பார்சல் வாங்கி அவர்களிடம் கொடுக்க அவர்களும் வாங்கி கொண்டு தடுமாறி எங்கோ நடந்து போனார்கள்.. 

யார் இவர்கள்?ஆயாவிடம் கேட்டேன்..

"அவுங்களா? நம்ம ஊருதான். என்ன மாதிரி போக்கத்தவிங்க. நல்லா வாழ்ந்து கெட்டவிங்க. புருஷன் போனதும் புள்ளமார்கள் கண்டுக்கல. பணத்தையெல்லாம் புடுங்கிகிட்டு முடுக்கி விட்டுட்டாங்க. ஒருத்தி என்னோட  நாத்தனாரு. வயல் வேலைக்கு போயிட்டிருந்தாங்க. இப்ப முடியல. பகல்ல கோவில் அன்னதானம் சாப்பிடுவாங்க. ராத்திரி இங்க வருவாங்க. ஏதோ நான் முடிஞ்சத வாங்கி தருவேன். என் குடிசைல தான் அண்டி இருக்குதுங்க. வரவர என் கையிலயும் ஓட்டம் இல்ல.  அதுக்காக அதுங்கள பட்டினி போட முடியுமா?  அதான் முடிஞ்சத வாங்கி தாரேன். இதுகளுக்கு நான் தொணை.  எனக்கு இவங்க தான் தொணை. ஏதோ உசிரு இருக்கிற வரைக்கும் ஒதவியா, ஒன்னுமண்ணா இருப்போம்.." 

உனக்கு புள்ளைங்க இருக்கா..??  

எனக்கு அந்த வரம் கெடக்கல கண்ணு. எனக்கு புள்ள இல்லேனு எம்புருஷன் அப்பவே என்னை வுட்டுபுட்டு போயிட்டான். அப்பனும் ஆத்தாளும் போனபொறவு ஒண்டிகட்டையா காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன். அதுக்காக செத்தா போகமுடியும் கண்ணு ? பொறவு, இதுங்க எங்கிட்ட வந்து ஒட்டிக்கிச்சுங்க. ஏதோ பழவியாபாரம் பண்ணி, கெடைக்கிறத வச்சு வயித்த கழுவிட்டு இருக்கோம்.."

மனது வலித்தது. ஆயா சொன்னது ஆயிரம் பாடங்களை கற்று கொடுத்தது. வலிகளே வாழ்க்கையாகி போனது.  *வறுமையிலும் நேர்மை. ஏழ்மையிலும் தர்ம சிந்தனை. நான் படித்த என் பட்டம் என்னை பாத்து சிரித்தது..* 

இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். வாழ்க்கை பாடம் கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள்..

"ஆயா ஏதாவது உதவி வேணுமா" பணம் ஏதாவது தரட்டுமா.."

வேண்டாம் கண்ணு. ஏதோ பாரியூர் அம்மன் படியளக்கிறா.. 
அவங்களுக்கு தான் மாத்து துணி இல்ல. அவங்களுக்கு வேணா ஏதாவது பண்ணு.."

சரி. செய்வோம். "ஆயா! இதுல 2000 இருக்கு. இதுல வாங்கி கொடுத்துரு.."

"எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு..?? 500 போதும்.." மீதியை திருப்பிக்கொடுத்தது. 
"இல்ல ஆயா..

 இருக்கட்டும். எங்க அம்மா இருந்தா வாங்கி தர மாட்டேனா..??"

கண்கள் கலங்கியபடி வாங்கினாள்..

மனசு கொஞ்சம் லேசானது..

என் அம்மா சொல்வாள். "மற்றவர்கள் துன்பங்களை கேட்டால் மட்டும் போதாது. முடிந்த உதவிகளை செய்யணும்.."

கிளம்பும்பொழுது ஆயாவிடம் கேட்டேன்.   
"ஆயா ஆப்பிள் எப்படி..??

கிலோ 120. நீ 110 கொடு சாமி.." 

100 ரூபா போட்டு 3 கிலோ போடு.."

 தமாசுக்கு தான் கேட்டேன். ஆயாவின் முகம் சட்டென்று வாடி விட்டது..

"சரி கண்ணு. ஏதோ மகராசன் எங்கிட்ட வந்து வாங்குறியே.."  

3 கிலோ வாங்கி 450 ரூபாய் கொடுத்தேன்..

"எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு.."  

இல்ல ஆயா.  இதையே பழமுதிர்சோலைல வாங்குனா 450 கொடுத்திருப்பேன். அதான்.." 

ஆயா முகத்தில் முதன்முறையாக சிரிப்பு..

இனி வீதியில் வியாபாரம் செய்யும் வயதானவர்களிடம் பேரம் பேசக்கூடாது.
பாவம். சொல்ல முடியாத வலிகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..
.
#வலிகள் தான் வாழ்க்கை அவர்களுக்கு..!
.
*படித்ததில் பிடித்தது*

Saturday, July 03, 2021

கோவிட் 3 ஆம் அலை விழிப்புணர்வு

கோவிட் 3 ஆம் அலையில் இருந்து  நம் குழந்தைகளை பாதுகாக்க MCR வெளியிட்ட சில வழிமுறைகள்...குழந்தைகளின் நலன் கருதி காணொளி வடிவில். உங்கள் பார்வைக்கு..
அனைவருக்கும்  பிடிக்கும் என நம்புகிறேன்..இறுதிவரை video வை பார்த்து..Command share செய்வதோடு Subscribe செய்து பெல் பட்டனை அழுத்தி All என கொடுக்க அன்போடு வேண்டுகிறேன்...
நன்றியுடன்
சேலம்.ஆ.சிவா...

video வை பார்க்க
நீலகலர் லிங்கை சொடுக்கவும்

https://youtu.be/3cEX5aZAGGo