Saturday, November 23, 2019

இனிமை..கணிதம்...

சேலம் ஊரகம் சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்...நேற்று (12-7-19) கணித மன்ற துவக்க விழா நடைப்பெற்றது.

அது சமயம் பள்ளி தலைமை ஆசிரியர்  வாழ்க்கைக்கு கணிதம் மிக முக்கியம் என்றும் மாணவர்கள் அனைவரும் கணித அடிப்படை செயல்பாடுகளான கூட்டல்,கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தலை சந்தேகமின்றி கற்றுக்கொள்ள வேண்டும் என பேசினார்கள்...

பின்னர் 8 ஆம் வகுப்பு ( கௌதம், மாணவர்கள்  "நான் விரும்பும்  கணித மேதை" என்ற தலைப்பில்  கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் பற்றி பல அறிய தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

அதனை தொடர்ந்து ஏழாம் வகுப்பு மாணவிகள் " எங்கும் கணிதம் எதிலும் கணிதம் " என்ற குறு நாடகம் நடித்து காட்டி நம் வாழ்வில் கணிதம் எப்படி பின்னி படர்ந்துள்ளது என்பதை நகைச்சுவை உணர்வோடு மாணவர்களுக்கு நடித்து காட்டினார்கள்....

பின்னர் எம் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிகள் ( அபர்ணா,) "உங்களுக்கு தெரியுமா ? "என்ற தலைப்பில் பல அறிய கணித தகவல்களை மாணவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்தார்கள்...

அடுத்த நிகழ்வாக எம் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வினாடி வினா நடத்தி மாணவர்களின் கணித அறிவை சோதித்து அவர்களை உற்சாக படுத்தினார்கள்...

பின்னர்  எம் 8 ஆம் வகுப்பு மாணவிகள் "நொடி கணக்கு" என்ற தலைப்பில் (தீபா,     ) மாணவர்களிடம் மனகணக்கு போட்டு அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ள வைத்தனர்.

இறுதியாக மாணவ மாணவியர் கணித மன்ற தொடக்க விழாவில் கூறிய பல தகவல் தங்களுக்கு புதியனவாகவும், மகிழ்வு தருவதாக இருப்பதாகவும் தொடந்து வரும் வாரங்களில் தங்களின் பங்களிப்பு இருக்கும்  என்று கூறியது கணித ஆசிரியரான எனக்கு ( ஆ.சிவராமகிருஷ்ணன்) மிக்க மகிழ்ச்சி அளித்தது.

மிக்க அன்புடன்
ஆ.சிவராமகிருஷ்ணன்
பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் )
ஊ.ஒ.ந.நி.பள்ளி
சர்க்கார்கொல்லப்பட்டி
சேலம் ஊரகம்.
சேலம்.

இனிமை கணிதம்...

கணித மன்ற செயல்பாடு உங்கள் செய்தியில் வெளியிட அன்போடு வேண்டுகிறேன்.

அன்போடு
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்.

Monday, November 18, 2019

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
மனிதனின்
தோற்றமே,
அவன்
பண்புகளை
பறைசாற்றும்...

கலாமின்
உடைகள்
மொத்தமே
ஏழுதான்,
என ஏடுகள்
தெரிவிக்கின்றன...

காந்தி
உடுத்திய
உடை,
உலகம்
அறிந்ததே...

அன்னை
தெரசாவின்
எளிமையான
தோற்றமே...

நம்
இருகரம்
கூப்பி,
வணங்க
வைத்துவிடும்...

எளிமையான
தோற்றத்தை,
எவர்
ஒருவர்
கடைபிடிக்கிறாரோ...

அவர் வாழ்வு
ஒளிமயமாக
திகழ்ந்துள்ளது,
என்பதை
நாம்
அறியலாம்...

'அதிகமாக
உள்ள
எதுவுமே,
நமக்கு
சொந்தமில்லை',
என கருதி...

அதனை...

நம்மை
சுற்றி உள்ள
ஏழை
மக்களுக்கு,
வழங்குவோம்
எனில்...

நம்
வாழ்வில்...

அமைதியும்,
ஆனந்தமும்,
குடியேற
தொடங்கும்.

உலகம்
நம்மை
போற்றி
வணங்கவும்
செய்யும்...

அன்புடன்
காலை
வணக்கம்...

நன்றி ஜி..

Friday, November 15, 2019

புதிய பார்வை..புதிய கோணம்...

எளிமை
என்றால்
என்ன...???

அவசிய
தேவைகளை,
அளவுக்குட்பட்டு
அன்றாடம்
பயன்படுத்தி
வருதலே,
எளிமை
எனப்படும்...

உடை,
உணவு,
உறைவிடம்
மட்டுமல்ல...

நம்
எண்ணம்,
பேச்சு,
செயல்களில்,
கூட,
நாம்
எளிமையை...

அதில் ஒரு
செழுமையை
கூட்ட
முடியும்....

எப்படி...???

ஒரு
நாளைக்கு
எழுபதாயிரம்
எண்ணங்கள்,
நம்
மனதில்
உருவாவதாக,
அறிஞர்கள்
கூறியுள்ளனர்...

அவைகளை
எளிமை
படுத்துவதின்
வழியாக...

நம்மை
நாம்
சிறப்பானவராக,
மாற்றி
கொள்ள
முடியும்...

நம்
குணத்தை
பாழ்படுத்தும்
எண்ணங்களை,
நீக்குவதன்
(Delete)
மூலமாக...

நம்
மனம்
என்னும்
நினைவகத்தை
(Memory Storage),
சீரமைக்க
முடியும்...

தினசரி
வாழ்வில்,
நாம்
பயன்படுத்தி
வந்த
தொலைகாட்சி,
டேப்ரெகார்டர்,
கடிகாரம்
மட்டுமல்ல,

மேலும்
எண்ணற்ற
பொருட்கள்,
எளிமை
ஆக்கப்பட்டு,
வருவது
கண்கூடு...

அதே
போல்தான்...

நம்
எண்ணங்களை,
பேச்சுக்களை,
செயல்களை,
நாம்
எளிமை
படுத்துவதன்
வாயிலாக...

நம்மை
நாம்
மேலும்,
சிறப்பானவராக
ஆக்கி
கொள்ள
முடியும்...

கக்கன்,
காமராசர்,
கலாம்,
காந்தி
போன்றவர்கள்,
இதில்
வல்லவர்களாக
வாழ்ந்தவர்களே..

வாங்க...

நாமும்
எளிமையாக
வாழ
முயற்சிகள்
செய்து
பார்ப்போம்...

நம்
வாழ்வில்
நாம்,
முன்னேற
தொடங்குவோம்..

அன்புடன்
காலை
வணக்கம்...