Wednesday, April 02, 2014

நொடிப் பொழுது

 

 




பகலின் மூப்பில்
தீர்ந்துபோகும்
ஒளிக்குப் பதிலாக
ஒரு சிரிப்பையும்
விரல் பிணைப்பைப் பாலமாகவும்
வருடலைக் கவிதையாகவும்
அழுகையை மொழியாகவும்
முத்தத்தைப் போர்களாகவும்
உணரப் பழக்கி விட்டிருக்கிறாய்
விடியற் தருணப் படுக்கையில்
இடமும் வலமும்
தேடும் கையில் படர்ந்திட
எப்போதும்
ஈர நினைவுகளை
வைத்திருக்கிறாய்
ஒற்றைச் சொல்லில்
தாகம் தணிக்கவும்
நீச்சலடிக்கவும்மூழ்கடிக்கவும்
கற்பித்திருக்கிறாய்
ரொம்பப் பிடித்த
ஏதோ ஒரு நொடியில்தான்
நீயும் நானும்
அடைந்திருக்கலாம்
தொலைந்துமிருக்கலாம்

ஆமாம்…
அது எந்த நொடி!?

No comments: