Thursday, June 25, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
கிராமத்தில்
இரு நண்பர்கள்
இருந்தனர்.

முதல் நண்பன்
இரண்டாவது
நண்பனிடம்...

அருகில் 
உள்ள தன்
நிலத்தில்...

இருவரும்
சேர்ந்து 
கனி தரும்
மரங்களை நட்டு 
அவைகளை 
விற்பனை செய்து
பிழைக்கலாமா
என்று 
ஆலோசித்தான்.

இரண்டாவது
நண்பன் சோம்பல்
தனம் மற்றும்
நம்பிக்கை இன்மை
காரணமாக...

இதற்கு
உடன்படவில்லை.

இருப்பினும்
முதல் நண்பன்
தன் நிலத்தில்...

நல்ல கனிதரும்
மரங்களை நட்டு
அவைகளை நன்கு
பராமரித்து வந்தான்.

காலங்கள்
மாறின.

மரங்கள் வளர்ந்து
கனிகள் கொடுக்க
தொடங்கின.

முதலாம் நண்பன்
இரண்டாவது
நண்பனை
அழைத்து...

கனிகளை
சாப்பிடுமாறு
வேண்டினான்.

இரண்டாவது
நண்பன் கனிகளை
சுவைத்து...

சப்பென்று
இருக்கிறது
என்று கூறினான்.

இதை கேட்ட
முதல் நண்பன்
அவனுக்கு நன்றி 
தெரிவித்தான்.

மரத்தின் கனிகள்
சுவை தர என்ன
செய்வது என 
மற்றவர்களிடம்
விசாரித்து உரங்கள்
போட்டு வளர்க்க
தொடங்கினான்.

நாட்கள்
சென்றன.

இப்போது நண்பனை
அழைத்து கனிகளை
வழங்கி...

சுவை எவ்வாறு 
இருக்கிறது
என கேட்டான்.

கனிகளை
சுவைத்த நண்பன்...

ஒரே கசப்பாக
இருக்கிறது
என்றான்.

நண்பனுக்கு
நன்றி தெரிவித்த
முதல் நண்பன்...

கனிகளில் 
கசப்பை போக்கவும்
சுவையை
சேர்க்கவும்
என்ன செய்வது
என மற்றவர்களிடம்
ஆலோசனை கேட்டான்.

பின் அவர்களின்
கருத்துக்கள் படி
மரங்களுக்கு
சிறப்பு மருந்துகள்
போட்டு வளர்க்க
ஆரம்பித்தான்.

காலங்கள்
சென்றன.

இப்போது
நண்பனை
அழைத்து...

கனிகளை கொடுத்து
சுவைக்குமாறு
கூறினான்.

கனிகளை
சுவைத்த நண்பன்...

மிகவும்
இனிப்பாகவும்
சுவையாகவும்
உள்ளதாகவும்
கூறினான்.

அதன் பின்
கனிகளை விற்பனை
செய்ய
தொடங்கினான்.

வியாபாரம்
அமோகமாக
நடந்து ஊரில்
பணக்காரனாக
மாறிபோனான்.

இவனின்
வெற்றி குறித்து
ஒருவன் காரணம்
கேட்டான்.

என் வெற்றிக்கு
முழு காரணம்
என் நண்பன்தான்.

என்னுடைய
கனிகளை ருசித்து
சப்பென்று இருக்கின்றது
கசப்பாக இருக்கின்றது
என கூறும் போதெல்லாம்
நான் அவன் மேல்
கோபம் படவில்லை

மாறாக...

அவன் குறிப்பிட்ட
குறைகளை களைய
தொடங்கினேன்.

அதன் தொடர்வே
இந்த வெற்றி
என்று கூறினான்.

வாங்க...

நம்மையும் நம் 
செயல்களையும்
குறை கூறும்
கூட்டம் ஒன்று...

நம்மை சுற்றி
இருக்கத்தான்
செய்யும்.

அவர்கள் நம்மை
குறை கூறும்
போதெல்லாம்...

நாம் மனசார
அவர்களுக்கு
நன்றி தெரிவிக்க
வேண்டும்.

அவர்கள்
குறிப்பிடும்
குறைகள்
நம்மிடம்
இருப்பின்...

அவைகளை
களைந்து
நம்மை நாம்
மாற்றி கொண்டோம்
எனில்...

வெற்றி
நம்மை தேடி வரும்.

இது கொஞ்சம்
கடினம் தான்.

இருப்பினும்
முயற்சிகள்
மற்றும்
முறையான
பயிற்சிகள்
இருப்பின்...

எதுவும்
சாத்தியமே.

வாங்க
முயற்சி
செய்து 
கொண்டே
இருப்போம்....

அன்புடன் 
இனிய
காலை
வணக்கம்.

No comments: