Monday, June 22, 2020

லேப்டாப் வாங்குபவர் கவனத்துக்கு....

*ஆன்லைன் கிளாஸ் சண்டைகள்!’ -லேப்டாப் வாங்கப் போகும் அப்பாக்களின் கவனத்துக்கு... #MyVikatan-மணிகண்ட பிரபு*

கற்றல் எவ்வளவு ஆனந்தமானது என்று வகுப்பறைகளும் எவ்வளவு கொடுமையானது என்பதை ஆன்லைன் வகுப்புகளும் உணர்த்துகின்றன தற்போது மாணவர்களுக்கு.

எங்கெங்கு காணினும் ஆன்லைன் வகுப்புகள். கல்லூரியில் தொடங்கி தற்போது யு.கே.ஜி வரையும் பரவியுள்ளது. பெற்றோருக்கு இதில் பிரச்சனை என்பது மொபைல் போனில் பார்க்க வைப்பது. வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் போன் கொடுப்பதில் வாரிசுரிமைப் போரே நிகழ்கிறது. காலத்தின் கட்டாயம் லேப்டாப் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுத்தியுள்ளது.

அப்பாக்களின் ஆப்ஷன்கள் மூன்று.

கம்பெனி லேப்டாப்

கம்மி ரேட்டுக்கு அசெம்பிள் செட்

கவர்ன்மென்ட் கொடுத்த லேப்டாப்.

இதுவும் கிடைக்காத பட்சத்தில் புது லேப்டாப் வாங்க வருகின்றனர்.

பைக் வாங்கப் போகும் போது MRF டயர் இருக்கானு பார்ப்பது போல் கணினி வாங்கும் போது பெயின்ட், எம்.எஸ் ஆபீஸ் இருக்கானு கேட்கும் வெள்ளந்தி அப்பாக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். தேடலில் லேப்டாப் குறித்த அடிப்படை தகவல் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

புதிதாய் லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

யுகேஜி படிக்கும் மகனுக்கு M.E, M.tech லெவல் வேண்டாம். மினிமம் வசதியுள்ள லேப்டாப் ஆப்ஷன் வைத்துக் கொள்ளலாம்.

Life long வரணுமில்ல என்பதையும் நம்ப வேண்டாம். இணைய உலகில் இன்னைக்கு வாங்கினா நாளைக்கு அப்டேட் மாடல் வந்திடும். Processor என்பது எல்லா மதர் போர்டுகளிலும் இருக்கும் ஒரு சிப். இப்போதைக்கு processor ஐ3 & ஐ5 வாங்கலாம். ஆனால், ஐ7, ஐ9 வரை வந்து விட்டது என்பதைத் தெரிந்து கொள்ளவும். இதில் processor-க்கு அருகில் இருக்கும் 2.80GHz என்பது பிராசசரின் வேகம். இது குறையும் போது வேகம் குறைவாய் இருக்கும்.

intel, AMD brand-ல் இன்டெல் அட்வான்ஸ் வெர்ஷன் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். நம்ம கணினிக்கேற்ற பொருத்தமான மணமகனாய் இருப்பார்.

RAM எனும் வேகப்படுத்தி மடிக்கணினியில் மினிமம் 4 GB இருக்கணும். 8 GB இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி. DDR3 அல்லது DDR4 RAM பொருத்தப்பட்டுள்ளதா என விசாரிக்கவும்.

தற்போது பெரும்பாலும் 1-TB மெமரி உள்ள லேப்டாப் தான் வருகிறது.

மற்றது சாலிட் ஸ்டேட் ட்ரைவ் வேகம் அதிகம், விலையும் அதிகம், நினைவுத் திறன் குறைவு.

Bluetooth, WiFi, Memory Card Slot, HDMI cable option, DVD RW Drive அல்லது பென் ட்ரைவ் ஆப்ஷன் தற்போது இரண்டு வந்து விட்டது.

USB தற்போது 3.0 வெர்சன் வந்துள்ளதால் கொஞ்சம் வேகமாய் இருக்கும்.

வெப்கேமரா அனைத்து லேப்டாப்புகளிலும் வருகிறது. தரமாய் இருக்கிறதா எனச் சரி பார்க்கவும்

பேட்டரி 8 மணி நேரம் இருப்பது போல் வாங்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சார்ஜர் போட வேண்டும்.

15.6 அல்லது 14 இன்ச் display LED monitor வாங்கலாம். அதிலும் Full HD, Ultra HD என வந்து விட்டதால் நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் memory card slot, Front mic, audio speaker system இணைந்ததா எனப் பார்த்துக் கொள்ளவும்

Screen resolution ஐ கண் பார்வையை உறுத்தாத அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

Hard disc பயன்பாட்டின் வேகத்தைப் பொறுத்து தேர்வு செய்யலாம். இதன் வேகம் 7200RPM, 5400RPM போன்றவற்றை பார்க்கவும். 320GB,160GB, 80GB எனும் அளவில் கிடைப்பதால் பயன்பாட்டைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கலாம்.

SSD (solid state drive) இருந்தால் லேப்டாப் ஆன் செய்தவுடன் துரித வேகத்தில் உடனே ஆன் ஆகிவிடும். குறைவாய் இருந்தால் ஆன் ஆவதில் தாமதம் ஆகும். ஆனால், சற்றுவிலை அதிகமாய் இருக்கும்.

O.S எனும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் முக்கியமானது. இதுதான் லேப்டாப்பின் இதயம் போலே. தற்போது விண்டோஸ் 10 புது வெர்ஷன் வந்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு வாங்கவும்.

எனக்கு செக்யூரிட்டி அதிகம் தேவையெனில் ஆப்பிளின் Mac ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நாடலாம்.

Graphic card இருந்தால் ஆன்லைன் வகுப்பில் அனிமேஷன் சப்போர்ட் ஆவது எளிதாய் இருக்கும். இதில் இருவகையாய் இருக்கும். அதிக வீடியோக்கள் பார்ப்பதாய் இருந்தால் Dedicated graphic card உபயோகிக்கலாம். கணினி வேகம் குறையாது. குறைவான பயன்பாடு மட்டும் போதுமென்றால் integrated graphic card போதும்.

ஆன்ட்டி வைரஸ் புரோக்கிராம் முக்கியமாய் இருக்க வேண்டும். அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ள வேண்டும். ஆமை புகுந்த வீடும் ஆன்ட்டி வைரஸ் இல்லாத கணினியும் நல்லாயிருக்காது.

i3-4GB , i5-8GB, i7-8GB இருக்கும். தேவைக்கேற்ப பார்த்து வாங்கலாம்.

பொதுவானவை.

சுள்ளான் சூடானேன் சுளுக்கெடுத்துறுவேன் எனும் வசனம் போல் சில லேப்டாப்கள் அதிகம் வெப்பமாகும். விலை மலிவு, அசெம்பிள் வாங்கும் போது இதுபோன்ற பிரச்னை வரும். 4ஜிபி RAM-ல் சில இயங்குதளங்கள் processing-க்காக 3ஜிபி எடுத்துக் கொள்ளும். எனவே, பயன்பாடு அதிகமிருக்கும் பட்சத்தில் 8 ஜிபியாக அதிகரித்துக் கொள்ளலாம்.

சின்னக் கல்லு பெத்த லாபம் என்பது போல எடை குறைந்த லேப்டாப்கள் எளிதில் கையாள வசதியாய் இருக்கும். எடை குறையக் குறைய விலை அதிகம் என்பது சாரம்.

ஜம்பிங் கால்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல என்பது போல் நம்முடைய முதல் தேர்வு கம்பெனி லேப்டாப்கள் தான். ஒரு வருட வாரன்டி கொடுத்தாலும் சில ஆண்டுகள் நன்கு உழைக்கும். மேலும் பழுது ஏற்படின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களை நாடலாம்.

சிறியது அழகு என்பது போல் மிகப்பெரிய திரை இருந்தால் அடிக்கடி எடுத்துச் செல்ல அசெளகரியம் ஏற்படும். எனவே, மீடியமே அழகு.

குறைந்த அளவு பயன்பாடே எனில் 25,000 வரையும், கல்லூரி மாணவர்கள் எனில் 45,000 வரையும் பின் தேவைக்கு ஏற்ப வசதி உள்ளவர் அதற்கு அடுத்து விலையுள்ளவரை வாங்கலாம்.

சரியான தேர்வே தீர்வு.

எல்லோரும் வைத்துள்ளனர் என வாங்காமல் தேவையாக இருப்பின் வாங்கவும். பள்ளிவயது குழந்தைக்கு எனில் i3-4GB-1TB போதும். கல்லூரி மாணவர்க்கு எனில், i5-8GB-2TB -Grabhic card போதும். பிசினஸ்க்காக வாங்க வேண்டுமெனில் கமர்ஷியல் லேப்டாப் வாங்கலாம். ஏனெனில் வெயில், தூசு, வெப்பம் ஆகியவற்றுக்குப் பொருந்தும். எல்லாமே இருப்பதுபோல தேவை எனில் i7-8GB-16GB RAM-SSD Hard disc- graphic card 8GB.

பட்ஜெட், பயன்பாடு இரண்டும் முக்கியமானவையாக இருக்கின்றன லேப்டாப் வாங்குவதில். இணைய வல்லுநர் நண்பர்கள் மற்றும் துறைசார் நண்பர்களின் ஆலோசனையுடன் வாங்கலாம். நல்லன தேர்தெடுத்தால் பிறகு வரும் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் வசதியும் ஆண்ட்ராய்டு போனும் இல்லாத மாணவ மாணவியரின் கதி என்ன எனவும் யோசிக்க வைத்துள்ளது.

மாணவர்கள், பெற்றோர்களின் நலன் கருதி மீள் பதிவு...

நன்றி..
- மணிகண்ட பிரபு

No comments: