Thursday, June 11, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

18 ஆம்
நூற்றாண்டு.

அம்மை நோய்
தீவிரமாக
பரவியிருந்த
காலம்.

அதற்கான
தடுப்பு மருந்து
அப்போது
கண்டுபிடிக்க
படவில்லை.

தன் வீட்டில்
தினசரி பால்
ஊற்ற வரும்
பால்கார
பெண்மணியிடம்...

"ஊரில் அம்மை
 நோய் தாக்கம்
 அதிகமாய்
 பரவி வருகிறது.

 நீங்கள் உங்கள்
 உடலை மிகவும்
 கவனமாக 
 பார்த்து 
 கொள்ளவும்"

என்று
கூறினார்
மருத்துவரான
ஜென்னர்.

"தனக்கு அம்மை
 நோய் தாக்காது"

என கூறினார்
பால்கார 
பெண்மணி.

காரணம் கேட்டார்
ஜென்னர்.

"மாட்டுக்கு வரும்
 அம்மை நோய்
 எனக்கும் 
 ஒருமுறை வந்தது.

 அதனால் 
 எனக்கு மீண்டும்
 அம்மை நோய்
 வராது"

என கூறினார்
பால்கார 
பெண்மணி.

இதைக்கேட்ட
ஜென்னர்...
 
"அது எப்படி
 உறுதியாக
 சொல்கிறீர்கள் ?"

என 
வினவினார்.

"என்னுடைய 
 பாட்டி
 அப்படித்தான்
 எனக்கு கூறினார்"

என்றார் 
பால்கார
பெண்மணி.

அந்த 
காலகட்டத்தில்...

'கவ் பாக்ஸ்' 
எனப்படும் 
பசுக்களின் 
மடிக்காம்புகளை 
புண்ணாக்கும் 
ஒரு நோய் 
இருந்தது

அது 
ஒரு வகையான
பெரியம்மை நோய்.

அது ஒரு 
மனிதனுக்கு 
ஒரு தடவை 
வந்து விட்டால்...

அதே 
மனிதனுக்கு 
மறுபடியும் வராது 
என்பதுதான் 
அந்த கால 
நம்பிக்கை.

இந்த
நம்பிக்கை
வைத்துதான்...

பால் கார
பெண்மணி
அவ்வளவு
உறுதியாக
கூறினார்.

இதையே 
அடிப்படையாக
வைத்து...

ஏறக்குறைய
20 ஆண்டுகள்
ஆராய்ச்சி செய்து...

'கவ் பாக்ஸ்'
கிருமிகளை 
மென்மை படுத்தி...

ஊசிமூலம் 
ஒருவரது உடலில் 
செலுத்தி...

அம்மை
நோய்க்கு தடுப்பு
மருந்து கண்டு
பிடித்தார் மருத்துவர்
எட்வர்ட் ஜென்னர்.

இந்த
வரலாற்று
நிகழ்வின்
தொடக்க புள்ளி...

பால் கார
பெண்மணியின்
உறுதியான
நம்பிக்கையான
வார்த்தைகளே
என்றால் அது
மிகையல்ல.

வாங்க...

நம்மை
சுற்றியுள்ள
எவருமே...

நம்மை விட
உயர்ந்தவரோ
அல்லது
தாழ்ந்தவரோ...

படித்தவரோ
அல்லது
படிக்காதரோ...

எவருடைய
கருத்தையும்...

நாம்
எவ்வாறு 
எடுத்து
கொள்கிறோம்...

அவைகளை
எவ்வாறு
பயன்படுத்தி
கொள்கிறோம்...

என்பதில்
இருக்கிறது
நம் வெற்றி !!!

இது
உண்மைதானே.

அன்புடன் 
இனிய
காலை
வணக்கம்.

2 comments:

KINGSLYSALEM said...

அருமையான எண்ணங்களைக் கொண்ட பதிவு..வாழ்த்துக்கள்

KINGSLYSALEM said...

அருமையான எண்ணங்களைக் கொண்ட பதிவு. வாழ்த்துக்கள் சார்