Friday, June 19, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

ஒரு 
கிணற்றை
சுற்றி அர்ஜுனன்
துரியோதனன்
மற்றும் சிலர்
நின்று கொண்டு
இருந்தனர்.

அப்போது 
அந்த வழியாக 
துரோணர்
வந்தார்.

"இங்கு என்ன
 செய்கிறீர்கள்???"

என்று  
துரியோதனனை
பார்த்து கேட்டார்.

வயதான
தோற்றம்.
முகத்தில்
மீசை, தாடி
உடையோ
கசங்கலான
கந்தை.

துரோணரை
பார்த்த
துரியோதனன்...

மனதிற்குள்
அவரை பற்றி
மிக கேவலமாக
நினைத்து கொண்டு...

"நாங்கள் இங்கு
 இருந்தால் உமக்கு
 என்ன???

 உங்கள் 
 வேலையை
 பார்த்து கொண்டு
 நீங்கள் போங்கள் "

என்றான்.

இந்த பதிலில்
துரோணர் முகம்
மாறியது.

உடனே 
அங்கிருந்த
அர்ஜுனன்...

"ஐயனே
 நாங்கள் 
 விளையாடி
 கொண்டிருந்தபோது
 பந்து கிணற்றில்
 விழுந்து விட்டது.

 இதை
 எடுப்பதற்கான
 முயற்சிகளில்
 நாங்கள் ஈடுபட்டு
 கொண்டு
 இருக்கிறோம்."

என்று
பணிவுடன்
கூறினான்.

அகமகிழ்ந்த
துரோணர்
அர்ஜுனனை
அழைத்து...

கிணற்றின் 
கறையில்
இருந்த 
புற்களை
பறித்து 
கொண்டு
வருமாறு 
கூறினார்.

ஏன் ?
எதற்கு ??
என்னும் 
கேள்விகளை
கேட்காமல்...

புற்களை
பறித்து கொண்டு
அவர் அருகில்
சென்றான்
அர்ஜுனன்.

"நான்
 உன் காதில் 
 மந்திரம் ஒன்று
 சொல்கிறேன்...

 அதை உன்
 மனத்திற்குள் 
 உச்சரித்து...

 இந்த
 புற்களை 
 ஒவ்வொன்றாக 
 கிணற்றில் போடு"

என்றார் 
துரோணர்.

அர்ஜுனன்
மறு பேச்சின்றி
அவர் கூறியவாறு
மந்திரத்தை 
உச்சரித்து...

புற்களை
ஒவ்வொன்றாக
போட்டான்.

என்ன
அதிசயம் !!!

புற்கள் 
ஒன்றோடு ஒன்று
இணைந்து
கயிறு போல
உருக்கொண்டு
கிணற்றில்
சென்று...

அந்த
பந்தை மேலே
கொண்டு வந்தது.

எல்லோரும்
ஆச்சர்யத்தில்
மிதக்க...

அர்ஜுனன்
துரோணர் 
காலில் விழுந்து
வணங்கினான்.

மகிழ்ச்சி
அடைந்த
துரோணர்...

"அர்ஜுனா
 கொஞ்ச காலம்
 கழித்து என் 
 குடிலுக்கு வா.

 வில்
 வித்தையில்
 உனக்கு 
 சிறப்பான
 பயிற்சிகள் 
 தருகிறேன்"

என்று கூறி
அந்த இடத்தை
விட்டு சென்றார்.

' எண்பதத்தால் 
  எய்தல் 
  எளிதென்ப 
  யார்மாட்டும்
  பண்புடைமை 
  என்னும் வழக்கு.'

எல்லாரிடத்தும் 
எளிதில் கண்டு
பேசுவதற்கேற்ற 
நிலையில் 
இருப்பவர்கள்...

பண்புடையவர் 
என்று 
சொல்லப்படுகின்ற 
தன்மையை 
அடைதல் எளிது.

இது
ஐயன்
வள்ளுவனின்
வாக்கு.

நேர்மையுடனான
துணிவு
வாழ்க்கையை
உயர்த்தும்.

வாய்மையுடனான
பணிவு
வாழ்க்கையில்...

என்றும்
மகிழ்ச்சியை
கொடுக்கும்.

இது
உண்மைதானே.

வாங்க...

துணிவுடன்
பணிவுடன்
வாழ...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்