Tuesday, January 19, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

நிறைய வீடுகளில் 
கணினி இருக்கும் 
ஆனால் அது வைக்கப்பட்டிருக்கும் மேஜையை பார்த்தால் 
முகம் சுளிப்பது 
மாதிரி இருக்கும் 
மின் அஞ்சலை
பார்ப்பதற்கு கூட 
தயக்கம் ஏற்படும் 
அத்தனை குப்பை 
கூளங்கள் நிறைந்தது 
காணப்படும்...

சில நேரங்களில் 
நொறுக்குத் தீனிகள் 
சாப்பிட்ட மிச்சத்தை சுத்தப்படுத்தாமல் அப்படியே இருப்பதையும் பார்க்க 
இயலும் இது 
தவறு 
நீங்கள் தினமும் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கூட சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அது உங்கள் வாழ்வில் 
அனைத்து விஷயங்களிலும் இதே பழக்கத்தை 
ஏற்படுத்தி விடும் 
இதனால் நிறைய இழப்புகளை சந்திக்க 
நேரிடும் ...

சிலர் 
தங்கள் கணினியின் திரையில் ஏராளமான கோப்புகளை வைத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம் திரை முழுவதையும் அடைத்துக் கொண்டிருக்கும்..
இது என்ன?
என்று கேட்டால் 
அவர்கள் சற்று தயங்குவதை நம்மால் பார்க்க 
இயலும் ...
என்ன கோப்பு
தெரியாமல் திரையை 
அடைத்துக் கொண்டிருப்பதன் பயன் என்ன .?

நேர்த்து 
என்பது உங்கள் 
ஒவ்வொரு செயலும் 
இருக்க வேண்டும் 
அதுதான் உங்களை
 உங்கள் வாழ்க்கையை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் 
நண்பன் என்பதை
மறக்க வேண்டாம் ..

வாங்க நாமும் 
நேர்த்தியா வாழ்வோம் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் ....

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்..

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சோம்பல் ஒரு காரணமாக இருக்குமோ...?

L.S.Sir said...

அருமை சார்

L.S.Sir said...

Super .Read the book *வீடுகளிலும் பள்ளிகளிலும் 5S*

L.S.Sir said...

Super .Read the book *வீடுகளிலும் பள்ளிகளிலும் 5S*