Friday, January 01, 2021

புதிய பார்வை..புதிய கோணம்...



உலகம்
அறிந்தவர்
தத்துவ ஞானி
கன்பூசியஸ்.
 
தம் 
சீடர்களுடன்
ஒருநாள்
குதிரை 
வண்டியில்
மண் சாலை
ஒன்றில்...

பயணம்
செய்து
கொண்டு
இருந்தார்.

அப்போது
ஒரு சிறுவன்
சாலையின்
நடு பகுதியில்
மணல் கோட்டை
கட்டி விளையாடி
கொண்டிருந்தான்.

வண்டி
வருவதை
கவனியாமல்

கோட்டை
கட்டுவதில்
கவனமாக
இருந்தான்
சிறுவன்.

குருவின்
குதிரை
வண்டி

தொடர்ந்து
செல்லவேண்டும்
என்றால்

மணல்
கோட்டையை
கலைத்து
விட்டுத்தான்
செல்ல
வேண்டும்.

வண்டியில்
இருந்து
கீழே குதித்த
சீடர் ஒருவர்

தம்பி
வழியை விடு
நாங்கள் செல்ல 
வேண்டும் என
கூறினார்.

சிறுவன்...

ஐயா 
இது நான்
கட்டும் கோட்டை
சேதாரமாக நான்
விடமாட்டேன்

நீங்கள்
வேண்டுமென்றால்
வேறு சாலையில்
பயணம் 
செல்லுங்கள்
என்று கூறினான்.

சீடர்
கோபமுற்று
நீயாக 
கலைக்கிறாயா ?
அல்லது நாங்கள்
கலைத்து விட்டு
சொல்லட்டுமா ?
என்று கேட்டார்.

சிறுவனும்
விடாப்பிடியாக
கலைக்க ஒப்பு
கொள்ளவில்லை.

இவைகளை
பார்த்துக்கொண்டு
இருந்த ஞானி...

வண்டியில் 
இருந்து
கீழே இறங்கி
சிறுவனை 
நோக்கி...

தம்பி
நாங்கள்
பக்கத்து ஊருக்கு
சென்று மக்களுக்கு
ஞானங்களை
போதிக்க வேண்டும்
அதனால் வழியை
விடு என்றார்.

நீங்கள்
பெரிய ஞானியா
அப்படி எனில்
நான் கேட்கும்
மூன்று 
கேள்விகளுக்கு
விடையளியுங்கள்
பார்ப்போம் 
என்றான் சிறுவன்.

ஞானியும்
தம்பி 
கேள்விகளை
கேள் என்றார்

உங்கள்
புருவ கற்றையில்
எத்தனை முடிகள்
இருக்கின்றன ?

என்றான்
சிறுவன்.

அதை
என்னால்
பார்க்க முடியாதே

என்றார் 
ஞானி

சரி
வானத்தில்
எத்தனை
நட்சத்திரங்கள்
உள்ளன ? அதை
உங்களால் பார்க்க
முடியுமே

என்று
கேட்டான்
சிறுவன்.

நீ 
சொல்வது
உண்மைதான்
ஆனால் அவைகளை
எண்ண முடியாதே

என்றார்
ஞானி.

அதே
நேரத்தில்
சற்று தொலைவில்

ஒரு
கோவிலில்
இருந்து 

மணிகளும்
மேளமும்
முரசம்
ஒலித்தன

இறுதியாக
ஒரே கேள்வி

நமக்கு
அருகே இருப்பது
மணியா ?
மேளமா ?
முரசா ?

என்று
கேட்டான்
சிறுவன்.

குருவிற்கு
பதில் சொல்ல
தெரியவில்லை.

சிறுவனே
எனக்கு பல 
விஷயங்கள்
தெரியாது.

தெரிந்த சில 
விஷயங்களை
மக்களுக்கு
தெரிவித்து
வருகிறேன்

இன்னமும் நான்
தெரிந்து கொள்ள
ஏராளம் இருக்கிறது

உன்னுடைய
கூர்மையான
அறிவை
பாராட்டுகிறேன்

நீ
சிறப்பாக
வளர்வாயாக

என்று வாழ்த்தி
வண்டியில் இருந்து
சில கனிகளை
எடுத்து சிறுவனுக்கு
வழங்கினார்.

ஞானியின்
வார்த்தைகளில்
மகிழ்வுற்ற
சிறுவன்...

கனிகளை
பெற்று 
கொண்டு
அவரை
வணங்கி

அவர் வண்டி
செல்ல அனுமதி
வழங்கினான்.

பின்னர்
குரு தம்
சீடர்களை
நோக்கி...

இந்த 
சிறுவனின்
கேள்விகளுக்கு
நாம் சரியான
விடையளிக்க
இயலவில்லை.

இதிலிருந்து
நமக்கு ஒரு
பாடத்தை
அவன் கற்பித்து
இருக்கிறான்.

அது...

அது...

ஞானத்தை
மேலும் மேலும்
தேடிச்செல்
என்பதே

என்று
கூறினார்.

வாங்க...

நம்
சிறகை
விரிப்போம்

சிந்தனைகளை
விரிவு செய்வோம்

அறிவை 
மேலும் அதிக 
படுத்துவோம்

புது புது
உலகம் 
காண்போம்

_*பூமியில்*_
_*இருப்பதும்*_
_*வானத்தில்*_
_*பறப்பதும்*_
_*அவரவர்*_
_*எண்ணங்களே*_

புதிய
நம்பிக்கைகளுடன்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

பகிர்வு....நன்றி