Saturday, January 23, 2021

தொழில்நுட்பம் பழகுவோம்-1

வணக்கம் ஆசிரியர் பெருமக்களே ! இந்த பேரிடர் சூழலில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழங்கிய ஆசிரியர் திறன் மேம் பாட்டு பயிற்சியின் டிஜிட்டல் அசிஸ்டன்ட் ( Digital Assessesment Tools) என்ற தலைப்பில் சேலம் மாவட்ட ஆசிரியர்களுக்கு சுமார் 1980 ஆசிரியர்களுக்கு நேரடியாக( இணைய வழியாக) பயிற்சி அளித்த தருணம் மிக்க மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. ஆசிரிய தோழமைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குறியது.  அந்த பயிற்சியில் எட்டு வகையான மதிப்பீட்டு மென்பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டது . இந்த மென்பொருளை பல பள்ளிகளில் குறிப்பாக கிட்டதட்ட  1100 பள்ளிகள் செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.. என்பது மிகுந்த உற்சாகம் தரும் செய்தி.

இந்த மென்பொருளை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையை தொழில்நுட்ப வகுப்பறையாகவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தலாம். குறிப்பாக ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்க பயன்படும் மென் பொருட்கள் இவை. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கும் முதல்வர் மற்றும் விரிவுரையாளர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். எனது
Quizizz என்ற மென் பொருளின் video tutorial link  லிங்க் இங்கே இணைத்துள்ளேன் ஆர்வமுள்ள ஆசிரிய தோழமைகள்  இதனை பயன்படுத்தி  கொள்ளலாம்.
நன்றி!

QUIZZ
https://youtu.be/lnt5YwhKE68

என்றும் கல்வி பணியில்..
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம் ஊரகம்.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துகள்...

Sivaramakrishnan. Salem said...

நன்றி ஐயா

Unknown said...

Thank you so much sir.so kind of you