Monday, January 18, 2021

புதிய பார்வை...புதிய கோணம்..



ஒரு
வகுப்பறை

ஆசிரியர்
மாணவர்களை
பார்த்து

எதிர்காலத்தில்
நீ என்னவாக
ஆக போகிறாய் ?

என்று கேட்டு
கொண்டிருந்தார்.

ஒவ்வொரு
மாணவனும்
ஒவ்வொன்றை
சொன்னார்கள்.

ஒரு
மாணவன்

   எதிர்காலத்தில்
   தான் ஒரு
   குதிரை
   வண்டிக்காரனாக
   விரும்புவதாக

கூறினான்.

வகுப்பில்
இருந்த
ஆசிரியர்
உள்பட
மாணவர்கள்
அனைவரும்
கொல்லென்று
சிரித்தனர்.

அவமான
பட்டதாக
உணர்ந்த
மாணவன்
பள்ளி
விட்டதும்
வீட்டிற்கு
சென்று
தன்
அன்னையிடம்
நடந்ததை
கூறினான்.

இதை கேட்டு
கொண்டிருந்த
அந்த மகனின்
தாய்

   நீ கூறியதில்
   ஒரு தப்பும்
   இல்லை

என்று
சொன்னதோடு

சுவற்றில்
மாட்டப்பட்டிருந்த
ஒரு படத்தை
சுட்டிக்காட்டி

   அந்த
   குதிரைகளை
   ஓட்டி செல்லும்
   மகானாக
   இரு 

என்று
கூறினார்.

எதிரில்
படத்தில்

ஏழு
குதிரைகள்
கொண்ட தேரை
ஓட்டி செல்லும்

கீதை
என்னும்
பாதையை
வழங்கிய
சாரதி

சிரித்து
கொண்டு
இருந்தான்.

அன்று
வகுப்பில்
அவமான
பட்டதாக
உணர்ந்தவன்

பிற்காலத்தில்
உலகமே
போற்றும்
ஒப்பற்ற
வழிகாட்டியாக
விளங்கிய
விவேகானந்தர்.

அவருக்கு
அறிவுரை
மற்றும்
அறவுரை
கூறியவர்

அவரை
செதுக்கிய
தாய்.

   _*இன்றைய*_
   _*அவமானங்களை*_
   _*இதயம்*_
   _*உணர்ந்தாலும்*_

   _*அதில்*_
   _*துவண்டு*_
   _*போகுபவர்கள்*_

   _*தன்*_
   _*வாழ்நாளில்*_
   _*தோற்றுதான்*_
   _*போகிறார்*_

   _*அவைகளை*_
   _*சாதகமாக்கி*_
   _*செயல்படுபவர்*_

   _*நாளை*_
   _*சாதித்துதான்*_
   _*காட்டுகிறார்*_

கேலி
கிண்டல்
பரிகாசம்
என எல்லாம்
நமக்கும் உண்டு

அவைகளை
தூரமாக
வீசி

வெற்றிகளை
துரத்தலாம்
வாங்க.

புதிய
நம்பிக்கைகளுடன்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி


No comments: