Tuesday, September 08, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...



செல்வ 
செழிப்பான 
குடும்பத்தில் 
பிறந்து...

ஆன்மிகத்திற்கு 
சென்றவர் 
பட்டினத்தார். 

பணத்தின் 
நிலையாமையை 
உணர்ந்து 
துறவியானார்.

ஒருமுறை, 
வயல் வரப்பில் 
தலை வைத்து
படுத்திருந்தார். 

தண்ணீர் 
எடுக்கச் சென்ற 
இரு பெண்கள் 
இதைக் கண்டனர்.

" சாமியாராகியும் 
  இன்னும் சுகம் 
  போகவில்லையே "

என்றாள் 
ஒருத்தி. 

பதிலுக்கு 
மற்றொருத்தி...
 
" காவியுடுத்திய 
  சாமியில்லையடி 
  சரியான ஆசாமி 
  போலிருக்கு "

என்று 
கிண்டலடித்தாள். 

இதை கேட்ட 
பட்டினத்தார் 
திடுக்கிட்டார். 

அவர்கள் 
திரும்பி 
வருவார்கள் 
என்று 
எண்ணி...

வரப்பின் மீது 
வைத்திருந்த 
தலையை தூக்கி 
உடலை மட்டும் 
சாய்வாக வைத்து 
கொண்டார்.

அந்த 
பெண்களும் 
தண்ணீர் 
குடத்துடன் 
திரும்பி வந்தனர். 

அவர்களில் 
ஒருத்தி, 

" யார் என்ன
  பேசுகிறார்கள் 
  என்று 
  கவனிப்பதுதான் 
  இந்த சாமியாருக்கு 
  வேலை போலும் "

என்றாள்.

மற்றொருத்தி...

" நீ சொல்வது 
  சரி தான்.
  நாம் என்ன 
  சொன்னால் 
  இவருக்கென்ன? 

  இவர் 
  தானுண்டு 
  தன் வேலையுண்டு 
  என்று இருக்க 
  வேண்டியதுதானே "

என்று 
பதிலளித்தாள்.

பட்டினத்தார் 
மேலும் 
அதிர்ச்சியுற்றார். 

' சந்நியாசமே 
  போனாலும் கூட 
  உலகம் யாரையும் 
  மனம் போன 
  போக்கிலே தான் 
  விமர்சிக்கும்.

  ஊர் வாயை மூட 
  உலைமூடி ஏது? 

  யார் எது 
  சொன்னாலும் 
  நமக்கு சரி என்று 
  தோன்றுவதை 
  செய்வதே உத்தமம் '

என்னும் 
படிப்பினையை 
பெற்றவராய்...

தன் 
வழியில் 
நடக்க 
ஆரம்பித்தார்
பட்டினத்தார்.

வாங்க...

நம்மை சுற்றி
உள்ள மக்கள்
நம்மை பற்றி
ஏதேனும் பேசி
கொண்டுதான்
இருப்பார்கள்.

அவைகள்
சரியாய்
இருந்தால்
நம்மை நாம்
சீர் செய்து
கொள்வோம்.

தவறாய்
இருப்பின் 
அவைகளை
புறம் தள்ளுவோம்

வளர்ச்சியை
பற்றி மட்டுமே
நினைப்போம்.

வளமாக
வாழ்ந்தும்
காட்டுவோம்.

வாய்ப்புகளும்
வாழ்க்கையும்
நம் கையில்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி

1 comment:

Yarlpavanan said...

வாய்ப்புகளும் வாழ்க்கையும்
நம் கையில் தான் - இதனை
உணர்ந்தவர் நன்றே வாழ்வார்!