Sunday, February 16, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

"எங்கே நிம்மதி ?
எங்கே நிம்மதி ??
அங்கே எனக்கோர்
இடம் வேண்டும்"

இந்த
பாடலின் வரிகள்...

காற்றில் கலந்து,
காதுகளில் அடைந்து,
மனதை வருடும்
போதெல்லாம்...

'அந்த இடம்
எங்கே இருக்கிறது'?
எனும் எண்ணம்
நம் மனதில் எழவே
செய்கிறது.

உண்மையில்
அப்படி 'ஒரு இடம்'
இருக்கும் எனில்...

இன்றைய
காலகட்டத்தில்,
அவ்விடத்தில்...

மக்கள் கூட்டம்
எவ்வளவு இருக்கும்
என்பது...

கற்பனையிலும்
அடங்காது.

'மன நிம்மதி' என்பது
கடை சரக்கா என்ன ?

ஆனாலும்...

'அது
எளிதில் கிடைக்கும்'
என்னும் எண்ணம்
பல பேருக்கு
வருவதில்லை...

'அதை' தேடி
எங்கும் அலையாமல்,
'நம் மனதிலேயே
அது உள்ளது'
என்பதை
கண்டறிவதில்...

'நம் திறமை'
ஒளிந்துள்ளது.

'மன நிம்மதி'
என்பது
'ஒரு உணர்வு'.

அது நம்
எண்ணங்களில்
கட்டமைக்கப்படுகிறது.

நல்ல சிமெண்ட்
கொண்டு
வீடுகட்டுவது போல...

நல்ல
எண்ணங்களால்
நம் மனதை நாம்
'கட்டமைக்க' வேண்டும்.

அதுவே நமக்கு
'நிம்மதியையும்
மகிழ்ச்சியையும்'
தரும்.

நம் மனதை
கட்டமைக்கும்
புறக்காரணிகளான...

சுற்றுப்புற சூழ்நிலை,
பொருளாதார நிலை,
சக மனிதர்களுடன்
உள்ள தொடர்பு,
சமுதாயத்தை பற்றிய
நேர்மறை சிந்தனை,
உடல் நலம்...

இவைகளை
நாம் எவ்வாறு
கையாள்கிறோம்
என்பதை பொறுத்து
நம் மகிழ்ச்சி அமைகின்றது...

இவைகளில்
ஏதேனும் ஒன்றில்
சறுக்கல் ஏற்படின்...

நம் மனம்
பாதிப்படைவது
திண்ணம்.

அக நிலையில்
'உறுதி மிக்கவராக'
'சூழ்நிலையை
கையாளும் பக்குவம்
கொண்டவராக'
இருப்பின்...

புறகாரணிகளால்
ஏற்படும் ஏமாற்றங்கள்
நம்மை பாதிப்பதில்லை.

மாறாக...

சூழ்நிலையை
கையாள தெரியாத
நிலை திருப்பின்...

நம் மனம்
நிம்மதியை இழந்து
தவிக்கிறது...

வாய்ப்புகளும்,
வாழ்க்கையும்
நம் வசம்
வாங்க
வாழ்க்கைய
வாழ்ந்துதான்
பார்போம்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

No comments: