Tuesday, March 17, 2020

ஆசிரியரின் மனசு...கவிதை

சார்...
என்ன
அவன்
அடிச்சிட்டான் ..

சார்..
இவன்
என்னை
பகுல்லயே
குத்திட்டான் ..

சார்....
இது
என்
பென்சில்
அவ எடுத்துக்கிட்டா ..

இப்படி
எந்த
புகாருமற்ற
காவல் நிலையமாய்
வகுப்பறை...

எப் எம்
ரேடியோ
போல
எந்நேரமும் பேசும்
உன் பேச்சின்றி
மூர்ச்சையாகி
நிற்கிறது
வகுப்பறை ...

எல்லாத்துக்கும்
முந்திரிக்கொட்டை
போல முன்ன ஒடும்
உன் கால்
தடமின்றி வறண்ட
நிலமாக வறுமைக்
கொண்டது வகுப்பறை ...

மார்க் போடலாம்
ரெக்கார்டு முடிக்கலாம்
என்னென்னவோ சொன்னாங்க
சரிதான்னு நானும் 
கெளம்பி வந்தேன்...

ஆள் அரவமற்ற
வகுப்பறையில்
நிமிடத்திற்கொருமுறை
நீ பாத்ரும் கேட்பது
போல் பிரம்மை....

உனக்கு வாங்கி
கொடுத்த திண்பண்டத்தை
போட்டிப் போட்டு
எனக்குக் கொடுத்து
மத்தியான உணவைக்கூட
மறந்து போக வைக்கும்
உன் தாய்மைக் குணம்
தடுமாற வைக்கிறது
என்னை....

எங்கும்
பேப்பர்
குப்பைகளாக
சிதறிக்கிடக்கும்
நோட்டுப் புத்தகங்களும்

உன் கால்களால்
வதைப்படும்,
உதைப்படும்
பாயும் பக்கத்தில்
அமர்ந்திருக்கும்
Boyம் , Girl ம் இன்றி
வகுப்பறை
வனாந்தரமாக
தெரிகிறது...

மேசையும்
நாற்காலியும்
எழுது கோலும்
என்னை வேண்டுமென்றால்
கட்டிப் போடலாம்
என் நினைவுகள்
அனைத்தும் ...

கள்ளமில்லா
உன் சிரிப்பைத்தேடி 
கால்கடுக்க
காத்து நிற்குது...

பைக்கை
நிறுத்தியவுடன்
பூங்கொத்து
விரல் கொடுத்து
பூவிதழ் கண்கள்
சிரித்து
சார் வந்துட்டாங்க..
சார் வந்துட்டாங்க.....
என்னும் சங்கே
முழங்கு கேட்காமல்
சங்கடமாய் போகுதே
சத்தமில்லா வகுப்பறை 

மாணவர்களை
நேசிக்கும்
ஆசிரியர்களுக்கும்
ஆசிரியர்களை நேசிக்கும் மாணவர்களுக்கும்
விடுமுறை என்பது
அரசு தரும்
விருப்பமில்லா
விருப்ப ஓய்வு போல ..

கருவிகளோடும்
கணினிகளோடும்
இயந்திரங்களோடும்
வேலை செய்பவர்களுக்கு
இது
புரியாது.....

மாணவர்களின்
இதய துடிப்போடு
பணியாற்றும்
ஆசிரியர்களின்
மனநிலை ...

நீ
இல்லாத
வகுப்பறை
பெற்றப் பிள்ளைகள்
இல்லாத
இல்லம் போல்
ஓர் உணர்வு மனதில்...

இவன்
🌹🌹🙏🌹🌹
  ஆசிரியர்கள் மனநிலை...
🌹🌹🙏🌹🌹

💐💐💐💐💐💐🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

நன்றி

🌷🌷தமிழாசிரியை  நிலா🌷🌷நாகல்கேணி
அரசு (ஆதிநி) மேல்நிலைப் பள்ளி ....

3 comments:

சந்திரசேகர் said...

குன்றத்தூர் ஆசிரியர் கதிரவனின் கவிதை

சந்திரசேகர் said...

குன்றத்தூர் ஆசிரியர் கதிரவனின் கவிதை

சந்திரசேகர் said...

குன்றத்தூர் ஆசிரியர் கதிரவனின் கவிதை