Thursday, October 08, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..



பெர்னார்ட் ஷா 
மிக பெரிய
எழுத்தாளராக 
வேண்டுமென்று 
முடிவு செய்தார்.

சிறுகதைகள் 
எழுதி அதை 
பல பத்திரிக்கை 
அலுவலகங்களுக்கு 
அனுப்பினார். 

எல்லாக் 
கதைகளும் 
திரும்பி வந்தன. 

எத்தனை முறை 
தெரியுமா? 

ஒன்பது 
வருடங்கள்! 

ஆமாம்! 

ஒன்பது 
வருடங்களாக 
அவர் தொடர்ந்து, 
அனுப்பிக்கொண்டே 
இருந்தார். 

அந்த 
ஒன்பது 
வருடங்களில்...

ஒன்று கூட 
பிரசுரமாகவில்லை! 
 
‘ வெற்றியாளர்கள் 
  விடுவதில்லை, 
  விட்டு விடுபவர்கள் 
  வெற்றி  
  பெறுவதில்லை ’ 

என்னும் 
முதுமொழிக்கு ஏற்ப 
இறுதியில்...

அவர்
ஜெயித்தது
மட்டுமல்லாமல்...
 
ஆங்கில 
இலக்கிய உலகில்
முடிசூடா மன்னராக...

இன்றும் 
ஜொலித்து 
கொண்டு இருக்கிறார்.

'  நம்பிக்கை
   என்பது
   வேண்டும்
   நம் வாழ்வில்

   லட்சியம்
   நிச்சயம்
   வெல்லும்
   ஒரு நாளில்  '

என்னும்
கவிஞர்
பா.விஜய்யின்
வைர வரிகள்
உண்மைதானே.

வாங்க...

நாமும்
முயற்சிகள்
செய்யலாம்.

வெற்றிகளை
குவிக்கலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.