Saturday, September 14, 2019

புதிய பார்வை....புதிய கோணம்...

ஒரு பாரசீக பேரரசனுக்கு திடீரென்று ஒரு பெரும் நோய் பீடித்தது.

அது
என்ன நோய்?

நம் எல்லோருக்கும் தெரிந்த, நம்
எல்லோரையும் பீடிக்கும் நோய்தான்.

அந்த நோயின் பெயர் 'கவலை'

ஆமாம்.

வானத்தை மேகம்
சூழ்ந்துகொண்ட மாதிரி பேரரசனை கவலை சூழ்ந்துகொண்டது.

கடைசியில் ஒரு ஞானியிடம் விஷயம் சொல்லப்பட்டது.

"இன்ன ஊரில்,
இன்ன இடத்தில்
ஒரு சந்தோஷமான
மனிதன் வாழ்கிறான்,

அவனது சட்டையை வாங்கிக்கொண்டுவந்து பேரரசருக்கு அணிவித்தால் அவர் குணமடைவார்" என்று அந்த ஞானி சொன்னார்.

உடனே அந்த சந்தோஷமான மனிதனின் சட்டையை வாங்கிவர படையொன்று புறப்பட்டது.

அந்தமனிதனையும் பார்த்துவிட்டார்கள்.

அவன் சந்தோஷமாக பாடிக்கொண்டும், தன்னை மறந்து ஆடிக்கொண்டும் இருந்தான்.

அவனை நிறுத்தி பேரரசரின் பிரச்னையும் அதற்கான தீர்வையும் சொன்னார்கள்.

"அப்படியா, என்னிடம்
சட்டை எதுவும் கிடையாதே" என்று சிரித்துக்கொண்டே கூறி, அவன் மீண்டும்
நடனமாட தொடங்கினான்.

உண்மைதான்...

அவனை பார்த்தபோது அவன் இடுப்புக்கு கீழ் ஒரு துண்டு மட்டும்தான் கட்டியிருந்தான்.

விஷயம் பேரரசரிடம் சொல்லப்பட்டது.

அவர் யோசித்தார்.

’ஆஹா, சட்டைகூட இல்லாமல் உள்ள ஒரு மனிதன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கும்போது...

சக்கரவர்த்தியாகஇருக்கும் நான், மகிழ்ச்சியில்லாமல் தேவையில்லாத கவலையுடன் இருப்பது முட்டாள்தனமல்லவா’ என்று அவருக்கு அப்போதுதான் உரைத்தது.

அன்றிலிருந்து
அவரும்
சந்தோஷமானார்.

அன்புடன்
காலை
வணக்கம்.

நன்றி..
முனைவர்.சுத்தரமூர்த்தி

1 comment:

KILLERGEE Devakottai said...

அருமையான பதிவு நண்பரே...
- கில்லர்ஜி