Friday, September 13, 2019

புதிய பார்வை...புதிய கோணம்..

*கோபர்நிகஸ்* தன் ஆராய்ச்சி நூலை எழுதி முடிப்பதற்கு முப்பதாண்டுகள்
ஆயின.

*கிப்பன்*
'த டிக்லைன் அன்ட் 
ஃபால் ஆஃப் த ரோமன்
எம்பையர்' என்ற எட்டு பாகங்கள் கொண்ட நூலை எழுதி முடிப்பதற்கு இருபது ஆண்டுகள் ஆயின.

*ஆடம் ஸ்மித்* தன் 'வெல்த் ஆஃப் நேஷன்ஸ்' என்ற நூலை எழுத பதினேழு ஆண்டுகள் ஆயின.

*கார்ல்மார்க்ஸ்*
உலகப்புகழ் பெற்ற தன் 'மூலதனம்' நூலை எழுதி முடிப்பதற்கு பதினேழு ஆண்டுகள் ஆயின.

*டால்ஸ்டாய்*
'போரும் அமைதியும்' நாவலை எழுதி முடிப்பதற்கு ஏழு ஆண்டுகள் ஆயின.

*டாக்டர் ஜான்சன்* தனி ஆளாக உலகின் முதல் 'ஆங்கில அகராதி'யை
தயாரிக்க ஒன்பது ஆண்டுகள் ஆயின.

*சார்லஸ் டார்வின்* உலகையே மாற்றவல்ல தன் 'கோட்பாடு'களை வெளியிட பதினைந்து ஆண்டுகள் ஆயின.

மாபெரும் சாதனைகள்
நிகழ்த்த
*நாட்கள்,மாதங்கள்*,
*ஆண்டுகள்* ஆகலாம்...

ஆனால்...

அதை வெற்றிகரமாக
முடிக்க *நம்பிக்கையும்*,
*பொறுமையும்* அவசியம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

1 comment:

KILLERGEE Devakottai said...

பிரமிப்பான தகவல்கள் நண்பரே...
- கில்லர்ஜி