Thursday, June 08, 2017

உலகம் மறந்ததேனோ...கவிதை

உலகம் மறந்ததேனோ...கடைசி வரி கவிதை...

விவசாயம் தேசிய
தொழில் -ஏட்டளவில்
அவன் வாழ்நாள்
முழுதும்  கடனாளியாய்
குடும்பத்துக்கும்
குழந்தைகளுக்கும்
நாட்டுக்கும்...
மிராசு என்ற
மிடுக்குடன் மீசை
முறுக்கி வாழ்நாள்
சாதனையாளன்
நம் உழவன்...
1qq
விலை நிலம்
விற்று விதை
வாங்கும்  அவலம்
அரங்கேறுவது
நம்மூரில் மட்டுமே..
விலையும் நெல்
விலை நிர்ணயம்
உரிமை இல்லா
உயர்ந்தவன் உழவன்...
ஆனால் ஊரெல்லாம்
ஒரு பேச்சு
அவன் நிலசுவாந்தார்
நிர்மூலமாய் வாழ்வில்..
மாற்றம் மக்களிடம்
மட்டுமல்ல
இயற்கையும் கற்று
அறிந்து கொண்ட
உலக ஏமாளி
தேசிய கோமாளி
உழவன் என்று....
மன்னன் முதல்
மக்கள் வரை
ஏன்
உலகமே மறந்ததேனோ...

%%%%%%%%
நட்புடன்
ஆ.சிவராமகிருஷ்ணன். சேலம்

@@@@####

No comments: