தனிமனிதவாழ்வில் துவங்கி,பொது வாழ்க்கை, குடும்பம், அரசியல், அலுவலகம் என மனித சமூகத்தின் அனைத்திலும் ஆளுமை செலுத்துகிற, ஆற்றல் கொண்ட, 
ஓர் அற்புதபண்புதான் 
'சகிப்பு தன்மை'.
சகிப்புத்தன்மையை 
இழந்து விட்டால், 
நம் நிலை மாறிவிடும்.
வாழ்க்கைபோகும் 
பாதையும் தவறாய் போய்விடும். 
எப்போது நாம் சகிப்புத்தன்மையை மேற்கொள்கின்றோமோ, அப்போதே வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்க துவங்கி விடுவோம்.
நமக்குள்ளே 
'பதிலுக்கு பதில்' 
என்ற உணர்வு 
இயல்பாகவே இருக்கும். 
'அவன் பேசிவிட்டால் 
நாமும் பேசவேண்டும்,
அவன் அடித்து விட்டால் 
நாமும் அடிக்க வேண்டும்.
ஒருவர் நம்மிடம் 
மரியாதைக்குறைவாக 
நடந்து கொண்டால், 
நாமும் அவரிடம்அப்படியே 
நடந்துகொள்ளவேண்டும்' 
என்று நினைப்பதுதான் 
பழிவாங்கும் தன்மை. 
இந்த பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அதுதான் 'சகிப்புத்தன்மை'.
அதே போல, மற்றவர்கள் எல்லா விதத்திலும் 'நமது விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும்' என்று நினைக்காமல், 'அவர்களுக்குரிய முறையில் அவர்கள் இருப்பார்கள்' 
என்று ஏற்று கொண்டால் 
அது'சகிப்புத்தன்மை'.
ஒரு மனிதன் சக மனிதரை மதித்தல், அவரின் சுதந்திரத்தை மதித்தல்,  அவர்களின் உரிமைகளில் தலையிடாமல் இருத்தல் 
'சகிப்புத்தன்மையாகும்'
ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்தை வழங்கும்போது தனி மனிதனின் மானத்துக்கு மதிப்புக்கொடுக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் எழுதல்' என்பது பகுத்தறிவு உலகில் சகஜமான ஒன்று.
ஆனால் வேறுபாடுகளை களைவதற்கான வழி 'அறவழியாக' இருக்க வேண்டும்.
எவரிடம் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதோ, அவரே சகிப்புத்தன்மையுடையவர்.
மனிதகுலம் வாழ்வதற்கு தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை என, பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, சகிப்புத் தன்மை நம்மிடையே 
இருப்பது அவசியம்.
தன் தவறுகளை பிறர் சுட்டிக் காட்டும் போது, பொறுமையுடனும் பகுத்தறிவுடனும் அதை சரிசெய்ய முயல வேண்டும்.
இது இன்றைக்கு சமுதாயத்தில் அருகி வருகிறது.
புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளை தந்த நம் நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்து செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது.
'இன்னா செய்யாமை', என்ற திருவள்ளுவரின் அதிகாரத்துக்கு விளக்கம்
கொடுத்துக்கொண்டே, ஒருவரையொருவர் வாயாரத்திட்டிவரும் மனிதர்களை, 
நம் சமுதாயம் 
கொண்டிருக்கிறது.
இப்போதெல்லாம்
படித்தவர்களுக்கு கூட 
'சகிப்புத் தன்மை' 
இருப்பதில்லை. 
வருங்கால தலைமுறையின் வாழ்வு இனிதாக அமைய, சகிப்புத்தன்மை என்னும் வேர்களை, நம்மை 
சுற்றியுள்ள மனிதர்களின் மனதில், ஆழமாக ஊன்ற வேண்டியது, நமது கடமை.
சகிப்புத் தன்மை அனைவரிடத்திலும் இருக்கும்பட்சத்தில், 
உலகம் முழுவதும் 
'அமைதி பூங்காவாக' 
திகழும்.
- தினமணி -
வாங்க
சகிப்புத் தன்மையை
வளர்ப்போம்
வளமாய்
வாழ்வோம்...
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.
 
No comments:
Post a Comment