Saturday, January 28, 2017

வாழ்க்கை மாற்றிகள்!

வாழ்க்கை மாற்றிகள்!

நமது ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப்போடும் அளவிற்கான பெரிய நிகழ்வுகள் மனித வாழ்வில் நடப்பதுண்டு. அதேசமயம், நமது ஒட்டுமொத்த வாழ்விற்கான மாற்றங் களைக் கொண்டுவரும் காரணிகளாக சின்னச் சின்ன நிகழ்வுகளும், தருணங் களும் உண்டு. அப்படியான விஷயங் களைக் கொண்டு, சிறு சிறு சம்பவங் களாக உருவாக்கப்பட்டு, “ராபர்ட் சுல்லெர்” அவர்களால் எழுதப்பட்டதே “லைப் சேஞ்சர்ஸ்” என்னும் இந்தப் புத்தகம்.

* சிக்கலற்ற திட்டம்!

எந்தவொரு பிரச்சினைக்கும் பூரண மான திட்டம் என்ற ஒன்று இல்லை என்கிறார் ஆசிரியர். அதாவது, ஒவ்வொரு திட்டமும் அதற்கே உரித்தான சிக்கலுடன் சேர்ந்தே இருக்கின்றது. மேலும், இதனை ஒரு நிகழ்வின் மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
ஒருவனுக்கு அழகிய முத்து ஒன்று கிடைக்கின்றது. ஆனால் அதன் ஒரு பகுதியில் சிறு குறைபாடு உள்ளதைக் காண்கிறான். அதை நீக்கிவிட்டால், இது இன்னும் அழகாகவும், விலைமதிப்பற்றதாகவும் மாறிவிடும் என நினைக்கிறான். அதனால் அந்த முத்தின் முதல் அடுக்கினை நீக்கிவிடுகிறான். ஆனால், அக்குறைபாடு சரியாகாமல் தொடர்ந்து இருப்பதைக் காண்கிறான். பிறகு அதன் இரண்டாவது அடுக்கினையும் நீக்கிவிடுகிறான். இப்பொழுதும் அந்த சிறிய குறைபாடு அப்படியே இருக்கின்றது. தொடர்ந்து ஒவ்வொரு அடுக்காக நீக்கிக்கொண்டே வருகிறான். இறுதியில் ஒட்டுமொத்த முத்தையும் இழந்து ஏமாற்றமடைகிறான்.

* இன்றைய நிலை!

நமக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த பிரச்சினையை ஒரே கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகாமல், அதன் தற் போதைய நிலையை சரியாக கண் காணித்து செயல்படும்போது மட்டுமே அதிலிருந்து மீண்டு வர முடிகின்றது. அதாவது, பிரச்சினையின் நேற்றைய நிலையானது இன்றைய நிலையி லிருந்து மாறுபட்டதாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கான மாற்றங்களை நமது அணுகுமுறையில் கொண்டுவர வேண்டும்.
காட்டிலிருந்து பிடிக்கப்படும் யானை, எவ்வாறு பழக்கப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். பிடிக்கப் படும் யானை வலிமையான நீண்ட சங்கிலியால் கால்களில் கட்டப்பட்டு, அதன் மறுமுனை பெரிய மரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். பிடிபட்ட ஆரம்ப நாட்களில், சங்கிலியிலிருந்து விடுபட தொடர்ந்து யானை முயன்று கொண்டே இருக்கும். தன் கால்களை அசைத்து அசைத்து முயன்று, நாட் கள் செல்ல செல்ல இனி ஒன்றும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விடும். அதன்பிறகு அந்த யானைக்கு பெரிய மரமோ அல்லது வலிமை யான சங்கிலியோ தேவையில்லை. சிறிய இரும்பு கம்பியில் கட்டப்பட் டிருந்தாலும், தான் இன்னும் பழைய படி பெரிய மரத்திலேயே கட்டப்பட் டிருப்பதாக எண்ணி, அது விடுவிப்பதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காது. நிகழ்கால நிலையை அறியாதிருப்பின், கடந்தகால வருத்தத்துடனே வாழ வேண்டியிருக்கும்.

வெற்றியின் ரகசியம்!

வளர்ப்பு பிராணிகளுக்கான உண வுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று, நாய்களுக்கான உணவுப்பொருள் ஒன்றை புதிதாக தயாரித்தது. அனைத்து விதமான புரோடீன்ஸ், மினரல்ஸ், கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது அது. அழகான பேக்கேஜ் மற்றும் போட்டியாளர்களை விட குறைவான விலை என சிறப்பாக தயாரானது அப்பொருள். தனித்துவ மான முழு பக்க பத்திரிகை விளம் பரம் மற்றும் அதிக செலவிலான தொலைக்காட்சி விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தப்பட்டது அந்த உணவு.
மெதுவாக விற்பனையை தொடங் கிய அப்பொருள், ஆறு மாத காலத்திற் குள்ளாகவே விற்பனையில் மோசமான நிலையை சந்திக்க நேர்ந்தது. இதனால் நிறுவன தலைவர், அனைத்து மாவட்ட விற்பனை மேலாளர்களுடனான சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். தரமான, விலை மலிவான, சிறந்த விளம்பரத்துடன் வெளியான பொருள், ஏன் விற்பனையில் சோபிக்கவில்லை என்ற கேள்வி அனைவரிடமும் கேட்கப் பட்டது. சிறிய நிசப்தத்திற்குப் பிறகு ஒருவர் மட்டும் நிறுவன தலைவரிடம் சென்று, நமது பொருளை நாய்கள் விரும்பவில்லை என்று கூறினாராம்.
ஆக, வெற்றிக்கான ரகசியம் சொகு சான அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு திட்டமிடுதலில் இல்லை. என்ன தேவை என்பதை அறிந்துகொண்டு, பிறகு அதற்காக செயல்படுவதிலேயே வெற்றி அடங்கியிருக்கின்றது என் கிறார் ஆசிரியர். காயத்தைக் கண் டறிந்து குணப்படுத்துவதும், சிக்கலைக் கண்டறிந்து தீர்வளிப்பதுமே வெற்றிக் கான ரகசியமாகும்.

நினைவில் வைப்போம்!

நமக்கு ஏற்பட்ட சிறந்த நிகழ்வுகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வருவது மிகச்சிறந்த வலிநிவாரணி என்கிறார் ஆசிரியர். ஆம், சிறந்ததை எண்ணிப்பார்க்க வேண்டுமே தவிர, இழந்ததை ஒருபோதும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது. அதாவது மோசமான நிகழ்வுகளை மறந்து, நல்ல நிகழ்வுகளை நினைத்துப்பார்க்க வேண்டும்.
ஒரு சிறிய நோட்புக்கில், உங்களது தினசரி நிகழ்வுகளில் உங்களை அதிகம் மகிழ்ச்சியடைய வைத்த தருணங்களை மட்டும் குறித்துக்கொள்ளுங்கள். காலை உணவில் உங்களுக்கு பிடித்த பதார்த் தம், சந்தித்த நபர்களில் உங்களை சந்தோஷப்படுத்தியவர், சினிமாவில் உங்களுக்குப் பிடித்த காட்சி, படித் தததில் உங்களைக் கவர்ந்த கருத்துகள் என அனைத்து நல்ல விஷயங்களையும் பட்டியலிடுங்கள். அன்றைய நாளின் முடிவிலோ அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் இடைவெளியிலோ அல்லது துன்பமான நேரங்களிலோ இவற்றின் மீது பார்வை செலுத்துங்கள், அப் பொழுது இதன் மதிப்பு உங்களுக்கு தெரியவரும்.

மறைந்திருக்கும் செய்தி!

புதிதாக பல்பொருள் அங்காடி ஒன்றை துவங்குகிறான் இளைஞன் ஒருவன். அதன் திறப்பு விழாவிற்காக தயாரான சமயத்தில், அதே பகுதியில் ஏற்கெனவே இவ்வகையான கடை யினை நடத்திவரும் வியாபாரி ஒருவர், இளைஞனின் புதிய கடை தனது வியா பாரத்தைப் பெருமளவில் பாதிக்கும் என அச்சமடைகிறார். அதற்காக நன்கு ஆலோசித்து, உள்ளூர் செய்தித்தாளில் “ஐம்பது ஆண்டுகளாக வணிகம் செய்து வரும் எங்கள் கடையில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குங் கள்” என்று விளம்பரம் செய்கிறார்.
இந்த விளம்பரத்தை கண்ட இளைஞன் கவலையடைகிறான். இந்தப் போட்டியை எவ்வாறு சமாளிப்பது? என்ன செய்வது? என்றெல்லாம் யோசித்து, அடுத்த வாரத்தில் அதே உள்ளூர் செய்தித்தாளில் “கடந்த ஒரு வாரம் மட்டுமே வணிகம் செய்துவரும் எங்களிடம் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குங்கள், அனைத்து விற்பனைப்பொருட்களும் புத்தம்புதியவை” என்று விளம்பரம் செய்து பதிலடி கொடுக்கிறான் அந்த இளைஞன். ஆக, ஏற்படும் இன்னல்களுக்கு உள்ளேயும் நமக்கு தேவையான நல்ல விஷயங்கள் மறைந்திருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* மறைக்கப்படும் பகுதி!

உளவியல் பேராசிரியர் ஒருவர் தனது வகுப்பறையில் உள்ள பலகையில் ஒரு வெள்ளை காகிதத்தை ஒட்டுகிறார். அதில் ஒரு வட்டவடிவத்தை வரைந்து, அதில் கருப்பு வண்ணத்தை தீட்டுகிறார். பிறகு தனது மாணவர்களிடம், இதில் என்ன காண்கிறீர்கள்? என்று கேட்கிறார். ஒரு கருப்பு புள்ளியை பார்ப்பதாகவும், இருண்ட வட்டவடிவத்தை பார்ப்பதாகவும், கருப்பு தட்டு போன்றதைப் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.
இறுதியாக பேராசிரியர், காகிதத்தின் வெள்ளை நிறத்திலான பகுதி யாருக்கும் தெரியவில்லையா? என்று கேட்கிறார். ஆக, காகிதத்தில் உள்ள கருப்பு நிற பகுதியின் மீது மட்டுமே அனைவரது கவனமும் இருந்ததே தவிர, வெள்ளை பகுதியை ஒருவரும் கவனிக்கவில்லை. இதுபோலத்தான் பெரும்பாலானோர், சரியான விஷயங்களை விட்டுவிட்டு தவறான விஷயங்களின் மீதே தங்களது பார்வையை கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு ஏற்படும் நிகழ்வுகளின் வாயி லாக கிடைக்கும் நல்ல விஷயங்களே நமக்கான வாழ்க்கைப் பாடங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம்...

2 comments:

ஸ்ரீராம். said...

நன்று. நன்றல்லது அன்றே மறப்பது மிக நன்று.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு. நன்றி