வணக்கம் தோழமைகளே .....
ஓபன் சோர்ஸ் என்றால் 
என்ன ? 
ஓபன் சோர்ஸ் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு . ஆனால் , நாம் காண இருப்பது சாப்ட்வேர் அல்லது மென்பொருள் சார்ந்ததையே ஆகும். பயப்படவேண்டாம் , நான் மிக எளிய பாணியில் உங்களுக்கு ஓபன் சோர்ஸ் பற்றி விளக்குகிறேன்.
ஓபன் சோர்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயரோ , அவைகளின் தயாரிப்போ அல்ல…! ஓபன் சோர்ஸ் என்ற வார்த்தை பெரும்பாலும் கூட்டு மென்பொருள் உருவாக்க முறையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் , மென்பொருளின் மூலக் குறியீடுகள் (கட்டமைப்புகள்) வெளிப்படையாக போடப்படுவதால் , நம்மால் இதனை பார்க்க , மாற்ற , பகிர மற்றும் பயன்படுத்தவும் முடியும். 
இந்தியாவில் நாம் உபயோகிக்கும் பல மென்பொருள்கள் திருட்டுதனமானவை. ஏன் நீங்கள் உபயோகப்படுத்தும் ஆபரேடிங் சிஸ்டம் (operating system windows xp, vista , windows 7,8,10) மற்றும் உங்கள் கணினியில் இருக்கும் Microsoft நிருவனத்தின் microsoft office கூட முறைப்படி வாங்கததாக இருக்கலாம். ஆனால் ஓபன் சோர்ஸ் உபயோகிப்பதில் இந்த சிக்கல் இல்லை மேலும் இதில் நிறைய பயன்களும் உண்டு .
தனியுரிம மென்பொருள்களில் , மொத்த மென்பொருளும் ஒரே ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவ
ையாகும்.ஓபன் சோர்ஸ் மென்பொருள் பெரும்பாலும் தன்னார்வ சமூகங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள புரோகிராமர்களால் பங்களிக்கப்பட்டவையே ஆகும். பிரபலமான ஓபன் சோர்ஸ் உபாயங்கள் : மொசில்லா பையர்பாக்ஸ் உலவி (Browser) , Ubuntu , Linux  fedora போன்ற இயங்குதளங்கள்  குறிப்பிடத்தக்கது.
இது எங்கு தொடங்கியது ?
ஓபன் சோர்ஸ் தொடர்புடைய விஷயங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டவை.
ஐபிஎம் நிறுவனம் தான் முதல் தலைமுறை கணினிகளை செய்து, அதனை இயக்க மென்பொருள் தொகுப்பை உருவாக்கியது.இவ
ை அணைத்தும் இலவசம் மட்டுமின்றி பயனர்களின் மத்தியில் மறுவிநியோகம் செய்யத்தக்கவை.அதன் மூல குறியீடுகளையும் நம் தேவைக்கு ஏற்றார்போல் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். ஆனால் , 1970 ஆம் ஆண்டு ஐபிம் தனது மென்பொருள் படைப்புகளை தனியுரிமை மென்பொருளாக மாற்றியதால் , மக்களால் முன்பே பதிவு செய்யப்பட்ட மென்பொருள்களை மாற்றி அமைக்க இயலவில்லை.
அச்சமயத்திலேயே உண்மையான இலவச மென்பொருள் இயக்கம் தொடங்கியது. 1980 ஆம் ஆண்டு , ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரே ஓபன் சோர்ஸ் மென்பொருள் பயன்பாட்டினை, தனது GNU திட்டத்தின் மூலம் பிரபலமாக்கினர். அதன் குறிக்கோள் கணினியை இயக்க பயன்படும் மூலப்பொருளான இயக்கு தளத்தையும் , கணினி சார்ந்த மென்பொருள் தொகுப்புகளையும் இலவசமாக உபயோகிக்கவும் , மாற்றுவதற்கும் கிடைக்க செய்வதே ஆகும். ” மென்பொருள் தொகுப்புகளை அனைவராலும் இலவசமாக மாற்றம் செய்ய கிடைப்பது ஒரு அடிப்படை உரிமையாகும்” என்பது அவரின் கருத்து.
ஓபன் சோர்ஸ் நமக்குத் தேவையா ?
இன்று நாம் உபயோகிக்கும் பல மென்பொருட்கள் , உடைமையாளர்களின் படைப்பாகும். எனவே , இந்த மென்பொருள்களை நாம் பணம் செலுத்தி பெற வேண்டியுள்ளது. பலர் தங்கள் தேவைக்கேற்ற மென்பொருள் சாதனங்களை பணப்பற்றாக்குறையினால் வாங்க முடியவில்லை. ஏழை நாடுகளில் உள்ள அறிவியலாளர்களும் மாணவர்களுமே மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இக்குறைபாடு அந்த நாடுகளின் வளர்ச்சியையே பாதிக்கும். இதனால் , அறிவியல் சமூகம் அதனுடைய ஆற்றலை உணராமலேயே போய்விடுகின்றது.
ஆனால் , ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் , எப்போதும் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. இதன் உருவாக்கத்தில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பும் இருப்பதனால் இம்முறையில் தயாரிக்கப்படும் மென்பொருட்களில் புதுமை காணப்படும். முக்கியமாக ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் முற்றிலும் இலவசம் !
ஆகவே , ஓபன் சோர்ஸ் திட்டமானது மக்கள் , சமுதாயம் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை .
கல்வி செயல்பாடுகளில் பயன்பெறும் சில ஓபன் சோர்ஸ் மென்பொருள்களை பற்றி பார்ப்போம். முதலில் 1.free mind 
free mind மென்பொருளானது மனவரைபடம் வரைய உதவும் மென்பொருள்
2.Geogebra 
Geogebra என்பது கணிதம் கற்பித்தலுக்கு உதவும் மிகச்சிறந்த மென்பொருள்
3.stellarium 
stellarium என்பது வானத்தையும் நட்சத்திரக்கூட்டங்களையும்  அறிய உதவும் மென்பொருள்
4. celestia 
celestia என்பது கோள்களின் இயக்கங்கள் பற்றி அறிய உதவும் மென்பொருள்
5.child play 
child play என்பது பல்வேறு கல்விச் செயல்பாடுகள் விளையாட்டு மூலமாக கற்க உதவும் மென்பொருள்.
6.Gcompris 
Gcompris என்பது ஒலியுடன் கூடிய கணித செயல்பாடுகளை கற்க உதவும் மென்பொருள்
7.tuxmath
tuxmath என்பது கணித செயல்களை கற்க உதவும் மென்பொருள்
8.physiogame 
physiogame என்பது விளையாட்டு வழி ஆங்கிலம் கற்க உதவும் மென்பொருள்
9.pencil 
pencil எனும் பெயரில் இரு மென்பொருட்கள் உள்ளன ஒன்று அனிமேஷன் செய்ய உதவுவது மற்றொன்று கணித வடிவங்களை வரைய உதவும் மென்பொருள்.
10.gimp
gimp என்பது போட்டோஷாப்பிற்கு இணையான மென்பொருள் இதன் மூலம் நமது புகைப்படங்களை அழகாக்கி கொள்ளலாம்
11.inkscape 
வெக்ட்டர் இமேஜ்களை கையாள உதவும் மிகச்சிறந்த மென்பொருள்
12.scribus
கடிதம் தட்டசிட , நாளிதழ்கள் புத்தகம் உருவாக்க பக்க வடிவமைப்பிற்கு மைக்ரோசாப்ட் வேர்டை விட சிறப்பான மென்பொருள்
13.Scratch 
குழந்தைகள் அழகிய புகைப்படங்கள் வழி எளிதாக கணினிப்நிரலை கற்க உதவும் மென்பொருள்
14.Avogadro
Avogadro என்பது
தனிம வரிசை அட்டவனை கற்பது போன்ற வேதியியல் செயல்பாடுகள் நிரம்புயது 
15.word web 
ஆங்கிலம் கற்க மிகச்சிறந்த மென்பொருள் இது இதன் மூலம் வார்த்தைகளுக்கான விளக்கம் , தொடர்புடைய வார்த்தைகள் அவற்றிற்குரிய synonyms , types போன்றவற்றை அறிய முடியும்.  நல்லது தோழமைகளே நூற்றுக்கணக்கான ஓபன்ஸோர்ஸ் மென்பொருட்களில் 15 மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்  பிறிதொரு சந்தர்பத்தில் மேலும் சில மென்பொருட்களை கூறுகிறேன்.
மாணவர்கள், ஆசிரியர்கள்
நலன் கருதி......
நன்றி குருஜி....
அன்புடன் சிவா...
 
No comments:
Post a Comment