Thursday, August 21, 2014

தெரிந்து கொள்ள வேண்டிய கணனி நுட்பங்கள்


Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் 
இருக்கும் காலம்.

MMC - Multimedia Card : பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.

DES - Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method)வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 - பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.

RAID - Redundant Array of Independent Disks : ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட் புட் செயல்பாடுகளை சமநிலைப் படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.

Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும். 

Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

ஹனி மங்க்கி (Honey Monkey): கம்ப்யூட்டரில் நாம் இணையத்தில் உலா வருவது போல, நம்மைப் போலவே செயல்பாடுகளை மேற்கொள்ளும் புரோகிராமிற்கு ஹணி மங்க்கி என்று பெயர். இணைய தளங்களில் ஹேக்கர்கள் தாக்கம், வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள், பாதுகாப்பினைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளனவா என்று இது தொடர்ந்து தேடிப் பார்த்துக் கொண்டே இருக்கும்.

Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது. 

Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும். 

நிரந்தரமாக மெனு பார்: விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் Alt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும்படியும் இதனை அமைக்கலாம். போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் Folder and search options' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் செல்லவும். அங்கு 'Always show menus' என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

No comments: