நிகழ்தகவு
என்று சொல்லப்படும் Probability ஐ குழந்தைகள் மனதில் ஏற்றுவதுதான் மிக எளிதானது.
ஆனால் நம்மூரில் அதைத்தான் கடினமான பாடமாக உருவகப்படுத்தி பயமுறுத்தி வைத்தாற்போல தோன்றும்.
ஆறாம் வகுப்பு மாணவர்கள் 30 பேர் ஒரு வகுப்பில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்களை பத்து பத்து பேராக பிரித்துக் கொள்ளுங்கள்.
பத்து பேர் கொண்ட மூன்று டீம்கள். சரியா.
டீம் ஏ, 
டீம் பி, 
டீம் சி. 
ஒவ்வொரு அணிக்கும் இரண்டு Dice எனப்படும் பகடைகளை கொடுங்கள். 
ஒரு நோட்டில் இரண்டிலிருந்து பண்ணிரெண்டு வரை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
டீமில் ஒரு மாணவரை அழைத்து பத்து முறை அந்த இரண்டு Dice களையும் உருட்ட சொல்லுங்கள்.
முதல் தடவை உருட்டும் போது முதல் பகடையில் ஒன்றும் இரண்டாம் பகடையில் ஐந்தும் விழுந்தால் 1 + 5 = 6 என்று கணக்கில் கொள்ளுங்கள்.
பத்து முறை உருட்டி இரண்டு பகடையில் வரும் கூட்டுத்தொகை எண்ணுக்கு நேரே எழுதி கொள்ள சொல்லுங்கள்.
முதல் மாணவன் பத்து முறை உருட்டியதில் 7 ஆம் எண் மூன்று முறை, எட்டாம் எண் 2 முறை இப்படி எழுதி கொள்ள சொல்லுங்கள்.
இப்படி பத்து மாணவர்களும் ஆளுக்கு பத்துமுறை உருட்ட வேண்டும்.
2 3 4 5 6 7 8 9 10 11 12 எண்ணுக்கு நேரே பத்து பேரும் உருட்டியதில் எந்த எண் கூட்டுத்தொகை விழுந்தது என்பதை எழுதி கொள்ள சொல்லுங்கள்.
இப்படியே அடுத்த இரண்டு டீம்களும் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது மூன்று டீம்களின் கணக்கையும் சேர்க்க வேண்டும்.
சுருக்கமாக சொன்னால்.
முன்னூறு முறை இரண்டு பகடைகளை உருட்டி அதில் வரும் கூட்டுத்தொகை ஒவ்வொரு எண்ணுக்கும் எத்தனை முறை வருகிறது என்று கணக்கிட்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு வரும் விடை தோராயமாக இதுவாகத்தான் இருக்கும்.
இரண்டு: 2.78 %
மூன்று: 3 %
நான்கு: 8.33 %
ஐந்து: 11.11  %
ஆறு: 13.89  %
ஏழு: 16.67  %
எட்டு: 13.89  %
ஒன்பது: 11.11  %
பத்து: 8.33  %
பதினொன்று: 5.56  %
பண்ணிரெண்டு: 2.78  %
இதை ஒரு கிராப் ஷீட்டில் வரைந்து கொள்ளுங்கள்.
படுத்திருக்கும் எக்ஸ் அச்சில் எண்களையும், நின்றிருக்கும் வொய் அச்சில் எத்தனை சதவிகிதம் என்பதையும் மார்க் செய்து கொள்ளுங்கள்.
இப்போது மேலே கிடைத்த சதவிகித எண்களை கிராப்ட் ஷீட்டில் பிளாட் செய்யுங்கள்.
செய்து அப்புள்ளிகளை இணைத்தால் ஒரு Bell curve கிடைக்கும்.
உலகில் உள்ள எந்த இரு பகடைகளை எத்தனை முறை உருட்டினாலும் இந்த Bell curve தான் கிடைக்கும். அது மாறவே மாறாது.
இதை மாணவர்களுக்கு சொல்லுங்கள்.
1. ஏன் 2,12 எண்கள் கிடைக்கும் சதவிகிதம் குறைவாக இருக்கிறது.
2. ஏன் ஏழு கிடைக்கும் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.
3. ஏன் ஒன்று என்ற எண் அங்கே இல்லை.
இப்படியாக நிறைய கேள்விகள் கேளுங்கள். எல்லாமே எளிய தர்க்க கேள்விகள்தாம்.
அதை அவர்கள் எளிதாக புரிந்து கொண்டு விடை அளிப்பார்கள்.
இப்போது அவர்கள் நிகழ்தகவில் முக்கியமான Normal Distribution என்றால் என்னவென்று உளப்பூர்வமாக புரிந்து கொண்டு விட்டனர்.
இந்த அடிப்படையை புரிந்து கொள்ளும் போது அவர்களுக்கு Probability மீது ஆர்வம் வரும்.
மேலும் மேலும் அம்முறையில் அத்துறையில் யோசிக்கும் ஆர்வத்தையும் ஒவ்வொரு மாணவரும் பெறுவார்கள்.
இதை வீட்டிலும் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சிறார்களை உற்சாகப்படுத்தி செய்ய வைக்கலாம்.
நன்றி...
Copied from mr vijay baskar vijay sir fb post
