Thursday, March 24, 2016

ஒரு ரூபாயில் லேப் டாப்,.......

ஒரு ரூபாய் இருந்தால் போதும் தவனை முறையில் லேப்டாப் வாங்கலாம்

 laptop

டெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது. 

இந்த சலுகை மே மாதம் நிறைவடைகின்றது. டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் பேக் டூ ஸ்கூல் திட்டம் மார்ச் 22 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அனைத்து டெல் லேப்டாப் கருவிகளும் பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் கிடைக்கின்றது. 

டெல் வாடிக்கையாளர்கள் டெல் இன்ஸ்பிரான் கணினி அல்லது ஆல் இன் மாடல் அல்லது, இன்ஸ்பிரான் வகை லேப்டாப் கருவிகளை ரூ.1 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். மேலும் டெல் இன்ஸ்பையர் கணினி அல்லது ஆல் இன் ஓன் சீரிஸ் வாங்கி கூடுதலாக ரூ.999 செலுத்தினால் கூடுதலாக இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி, ஒரு ஆண்டிற்கு எட்யூரைட் கன்டென்ட் பேக் மற்றும் பேட்டா பரிசு கூப்பன் பெறலாம். இன்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப் வாங்குவோருக்கும் ரூ.999க்கு இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி பெறலாம். பேக் டூ ஸ்கூல் திட்டமானது படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் படிக்க கணினியை ஒரு பயனுள்ள கருவியாக வழங்க டெல் முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேக் டூ ஸ்கூல் திட்டமானது நாடு முழுவதும் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ டெல் விற்பனை நிலையங்கள் மற்றும் CompuIndia இணையதளத்தில் செல்லுபடியாதும். கருவிகளை வாங்கிய முதல் ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது கருவிகளை பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.



டெல் இன்ஸ்பைரான் 15 3551 

இதன் விலை ரூ.19,399 2.1 ஜிகாஹெர்ட்ஸ் பென்டியம் குவாட் கோர் பிராசஸர் 4 ஜிபி ரேம் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ் 

டெல் இன்ஸ்பைரான் 15 3541 

இதன் விலை ரூ.19,417 2.4 ஜிகாஹெர்ட்ஸ் ஏஎம்டி கோர் ஏ6 பிராசஸர் 4 ஜிபி ரேம் 2 ஜிபி கிராஃபிக்ஸ் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ்.

No comments: